உ லக அளவில் இந்தியாவில் திக்குவாய் மிக அதிகமாக கணப்படுகிறதாம் அதில் 80 சதவீதம் ஆண்களாம்.  உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் திக்குவாயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. ஆங்கிலத்தில் இதை stammering அல்லது shuttering  என்றும் கூறுவதுண்டு. திக்குவாயைப்பற்றி எழுத ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.  நானும் சிறுவயதில் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்பதும் அதன் பாதிப்புக்களை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதும் கூட ஒரு காரணம்.  என்னிடம் நிறைய திறமைகள் இருந்தும் என்னால் அதை செயல்படுத்த மிகவும் தடையாக இருந்தது இந்த திக்குவாய் என்றால் அது மிகையாகாது.                                        சி று வயது முதலே இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்தது நாலு நண்பர்கள் கூடும் இடத்தில் நான் போனால் நான் கேலிப்பொருள் ஆக்கப்படுவேன்...   இதனால் கும்பலாக இருக்கும் நண்பர் கூட்டத்தை தவிற்க்க நேர்ந்தது.... அந்த சந்தோஷத்தை இழக்க நேர்ந்தது..... பள்ளிக்காலத்தில் நான் என்னதான் பலதடவை வீட்டில் நன்றாகப் படித்...