போ ன வாரம் என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது. நண்பனின் அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம். அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன். உறக்கம் தெளிந்தபோது மணி 12.00. கொஞ்சம் காலைகடன்களை கழிக்கலாமே என்று கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்). ...