பல ஆஸ்கார் விருதுகளை அள்ளியதோடு  உலகெங்கிலும் பிரமாதமான வசூலை அள்ளி குவித்த படம் ‘டைட்டானிக்’. அப்படம் உண்மையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்தும் அதனூடே சுவைக்காக ஒரு காதல் கதையையும் சேர்த்து எடுக்கப்பட்ட படம்.                    நிஜத்தில் நடந்தது 1912 ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்கு டைட்டானிக் என்ற நீராவி கப்பல் புறப்பட்டது.  அன்று இரவு 11.25 மணிக்கு மிகப்பெரிய பனிக்கட்டிப்பாறை மீது மோதியது. பின்னர் மெள்ள மெள்ள மூழ்க ஆரம்பித்தது. மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு கப்பல் முழுவதுமாக மூழ்கியேவிட்டது. பயணிகளின் அபயக்குரல் கேட்டு “கார்பதியா” என்ற பயணிகள் கப்பல் ஒன்று உதவிக்கு வந்தது. ‘டைட்டானிக்கில் இருந்த 2200 பேரில் பெண்கள், குழந்தைகள் என 705 பேர்களை மட்டும் உயிருடன் காப்பாற்ற முடிந்தது.  1500 பேரை இந்த ‘டைட்டானிக்’ கப்பல் சமாதி கொண்டது, இதைவிட சிறப்பு  என்னவென்றால் இந்த சம்பவம் நடப்பதற்க்கு சரியாக முப்பது ஆண்டுகளுக்கு  முன்னர்  ஒரு புதினம் வெளியாகியிருக்கிறது ஆங்கிலதில்.  இதில் ‘டைட்டானிக்’ கப்பல் ...