நாஞ்சில் மனோவுடன் நான்  குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு இயற்கை எழில்     கொஞ்சும் நீர்வீழ்ச்சியாகும். இங்கு 12 சிவாலய  ஓட்டங்களில் ஒன்றான     மகாதேவர் கோவில்  உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொக்கமாக திகழும்                இங்கு நவீன சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி ஆகிய வசதிகள்     செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்க்க     தயாராய் இருக்கிறது. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில்     அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி மூலம் இயற்க்கை எழில் கொஞ்சும்     கோதையாற்றின் அழகையும், அற்புதத்தையும் ரசிக்கலாம்.இது நாகர்     கோவிலில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .