பகுத்தறிவு வாதிகள் என்றால் எதையும் பகுத்து அறிந்து பிறகுதான் நம்புகிறவர்கள். ஆனால் நம்பிக்கை சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் சான்றுகள் இருப்பதில்லை. கடவுளை இங்கே வரச்சொல் நான் பார்க்கிறேன் என்றால் அது நடக்காத காரியம் தானே. மூட நம்பிக்கைகள் சிலரின் வாழ்வை வளமாக்கவும் பலரின் வாழ்வை குலைக்கவும் செய்கிறது என்பதும் உண்மையே . பகுத்தறிவுவாதி அறிவியல்வாதிகளைப்போல் சோதனைக்கூடம் அமைத்து கருவிகள் கொண்டு சோதனைகள் செய்யாமல் இருக்கலாம். ஆனால் இவர்களின் அடிப்படை மனப்பான்மை ஒன்றேயாகும் எதையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுதல். . அறிவியலுக்கு இன, நிற,மொழி,மத, வேற்றுமைகளோ நாட்டுப்பற்று என்ற வேற்றுமைகளோ அவர்கள் பார்த்ததில்லை. விஞ்ஞான அறிவு எந்த ஒரு நாட்டுக்கும் ஏக போக உரிமையன்று. இன்று விஞ்ஞானத்தை உலகம் முழுவதற்க்கும் சொந்தமாக்கினர். அறிவியல்வாதி இயற்கை மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தை ஆற்றலை,உண்மையை கண்டறிய இயற்கையை குறுக்கு விசாரணை செய்தான் பகுத்தான் புதியவற்ற...