முதலில் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்த SONY INDIA நிறுவனத்துக்கும் அதற்க்கு காரணமாக இருந்த திரு. வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்
வினோத்(vivek computers, trichy) தாய்லாந்து டூர் செல்ல இருப்பதாகவும் உங்களுடைய கடவுச்சீட்டை உடனடியாக அனுப்பவும் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. ஆனால் இதை என் நண்பர்களுக்கு சொன்னவுடன் ஒரு புன்சிரிப்போடு “நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட” என்றார்கள் என்றார்கள் என்னை அறிந்தவர்கள். நானும் அப்படி என்னதான் இருக்கிறது அங்கே என்று அங்கு போய் வந்த என் நண்பனிடம் விசாரித்தபோதுதான் தாய்லாந்தில் பட்டாயா என்ற இடம் “ அதுக்கு” பெயர் போனது என்று தெரியவந்தது. “அது” எது என்று புரியாத நல்லவர்கள் மசாஜ் என்று திருத்தி படிக்கவும். அந்த கருமத்திற்க்கு
BHOOM ...BHOOM என்ற அடைமொழி வேறு.
|
பார்த்தாலே தெரியலையா நம்ம மதுரை விமான நிலையம்தான். |
ஒரு வழியாக மதுரையில் இருந்து மற்ற நண்பர்களுடன் spice jet விமானத்தில் ( சன் குரூப்பின் வளர்ச்சி) ஏறினோம். சில பயணிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் தலைமீது இருந்த அத்தனை பட்டன்களையும் அழுத்தி பரிசோதித்துக்கொண்டிருந்தனர். விமானம் டேக் ஆஃப் ஆனதும் என் பக்கத்தில் இருந்த ஒரு இளம் வயது பெண் கண்ணை இறுக மூடிக்கொண்டே பயங்கரமாக ஜெபித்துக்கொண்டிருந்தாள்.
நான் புதிதாக பயணம் செய்பவராக இருக்கும் என்று நினைத்தேன் விபரம் புரியாமல். சிறிது நேரத்தில் அவரும் கண்ணை திறந்தார். 10 நிமிடம் கழித்து மோசமான காலநிலை இருப்பதாகவும் அதனால் எல்லோரும் சீட் பெல்டை அணியுமாறும் கேப்டன்( விஜயகாந்த் அல்ல விமான ஓட்டி)கேட்டுக்கொண்டார். விமானம் தீடீரென்று ஜல்லி ரோட்டில் செல்லும் மாட்டு வண்டி மாதிரி குலுங்கியது. அந்த பெண்ணின் பிரார்த்தனையின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது சன் குரூப் அல்லவா??. ஆனாலும் விமான பணிப்பெண்கள் அசராமல்100 ரூபாய்க்கு சாண்ட்விஜ் விற்றுக்கொண்டிருந்த அந்த கடமை உணர்வை பாராட்டியே தீரவேண்டும்.
|
bangkok
விமான நிலையம் நம்ம ஊர் அளவிற்க்கு (அ)சுத்தம் இல்லை. |
ஒரு வழியாக சென்னை வந்து தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினோம். சுமார் 600 பேர் பயணம் செய்யக்கூடிய அந்த விமானம் மிகவும் அமைதியாக பறந்து எங்களது பயணத்தை இனிமையாக்கியது. ஒரு வழியாக பாங்காங்க் விமான நிலையம் போய் சேர்ந்தோம்.
அது மிகவும் சுத்தமாகவும் நவீனமாகவும் கண்ணைகவரும் விதத்தில் இருந்தது. இமிகிரேசனில் ஒரு form நிரப்பி கொடுக்க சொன்னார்கள். நானும் bank exam எழுதுகிற மாதிரி தெரிந்ததை டிக் செய்து கொடுத்தேன். இம்மிகிரேசன் ஆபிசர் கொடுத்த வேகத்தில் திருப்பி கொடுத்து என்னவோ சொன்னார். நான் நிரப்பியது சரியில்லை என்று மட்டும் புரிந்தது. வழக்கம் போல் அருகில் இருந்த ஒருவரை காப்பி செய்துதான் வெளியேற முடிந்தது.
|
இவர்தான் Mr.yoyo. |
|
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் |
அங்கிருந்து ஒரு guide Mr. yoyo( யோவ்......யோவ் .... னு கூப்பிட்டாலும் சரிதான்)
TIGER ZOO வுக்கு காலை உணவு உண்ண அழைத்துச்சென்றார். நமக்கும் உணவா அல்லது நாம் டைகருக்கு உணவா என்ற டவுட் உங்களைப்போல் எனக்கும் வராமல் இல்லை. புலிகள் இருக்கும் இடத்தில் காலை உணவை முடித்துக்கொண்டுஹோட்டலை நோக்கி கிளம்பினோம்.
ஹோட்டலில் குளித்து ஃப்ரஷ் ஆகி
ALCAZAR SHOW வுக்கு செல்லலாம் என்றார்கள். என் நண்பன் அது காபரே டான்ஸ் என்று என் காதில் முணுமுணுத்தான். எதுவென்றாலும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற மூடில் எல்லோரும் கிளம்பினோம். அந்த நடன நிகழ்ச்சியும் ஆபாசமில்லாமல் எல்லோரும் குடும்பத்துடன் வந்து கண்டு ரசிக்கும் படிதான் இருந்தது.(நான் நினைத்து இல்லை என்று நீங்கள் வருத்தப்படுவது புரிகிறது )
இந்த நடன நிகழ்ச்சியில் நடன அசைவுகள், ஒளி அமைப்புகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் எங்களை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த நடன கலைஞர்கள் வெளியே வந்து நம்முடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர் (எல்லாம் பணம்தான்)
|
அவர்களுடன் போட்டோ எடுக்க விரும்புவர்கள் பணம் கொடுத்துபடம்
எடுத்துக்கொள்ளலாம். |
அடுத்த நாள்
coral island , speed boat ல் செல்ல இருப்பதாக சொன்னதால் மகிழ்ச்சியோடு உறங்கினோம். மறுநாள் காலையில் காலை உணவை முடித்துக்கொண்டு முதலில் பாரா கிளைடிங் செய்ய அதிவிரைவு படகில் கிளம்பினோம்.
|
பறக்க ரெடி |
ஆழ்கடலில் பெரிய படகை நிறுத்திவைத்து அதிலிருந்து நம்மை ஒரு பாராசூட்டில் மாட்டிவிட்டு அதிவிரைவு படகால் இழுத்து ஒரு பெரிய வட்டமடிக்கிரார்கள். அதனிடையில் ஒரு டிப்பும்( தண்ணீரில் முக்கி எடுத்தல்) உண்டு.
|
நானே தான் நம்புங்க |
ஒரு வழியாக பாராகிளைடிங்கில் பறந்து பறவை தன் கண்ணால் பார்ப்பது போல் அந்த சிட்டியை உயர பறந்து கொண்டே ரசித்தேன். அதன் பிறகு coral island ஐ நோக்கி கிளம்பினோம்.
அங்கே sea walk கடலுக்கு அடியில் நடக்கும் ஒரு விளையாட்டும் water bike riding போன்ற நல்ல விளையாட்டுகள் இருக்கிறது. அந்த கடற்கரையில் ஏராளமான மீன்கள் உள்ளன. இவ்வளவு அழகான மீன்களை கரையில் பார்ப்பது அரிது.
இதை முடித்துவிட்டு நானும் என் நண்பரும் ஹோட்டல் திரும்பினோம். ஆனால் மற்ற நண்பர்கள் இரவு நடைபயணம் செல்ல இருப்பதாக தெரிவித்தனர். அதன் அர்த்தம்(bhoom ..bhoom) எங்களுக்கு புரியவே நம்ம பூம்.. பூம்.. மாடு மாதிரி தலையசைத்து நாங்கள் கழண்டு கொண்டோம்.
மறுநாள் காலையில் அவர்கள் நேற்று இரவு தான் அனுபவித்த மகிழ்ச்சியை விளம்பி கொண்டிருந்தார்கள். மசாஜ் என்ற பெயரில் தொடங்கும் நிகழ்ச்சி “அதில்” போய்தான் முடியுமாம். நமக்கு கூழானாலும்(???????) வீட்டு சாப்பாடுதான். வெளியே சாப்பிடுவதில்லை(!!!!!!!!!!!) என்பதை கொள்கையாக வைத்திருப்பதால் இதெல்லாம் பெரிய மேட்டராக தெரியவில்லை.
கடைசியாக நம் இந்தியர்கள் வைத்திருக்கும் இந்திரா மார்கெட்டிலும், மற்றும் big C - லும் பொருட்களை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பயணித்தோம். இந்தியகர்கள் ஹோட்டல் தொழிலிலும் மற்றும் மற்ற வியாபாரத்திலும் கொடிகட்டி பறக்கின்றனர். நம் நாட்டைவிட
LED TV க்கள் விலை மலிவாக இருக்கிறது. வருவோர் எல்லோர் கையிலும் அதை காணமுடிகிறது.
நாமும் அவர்களை நம்பித்தான் போகவேண்டியிருக்கிறது. இந்தியர்களை இன்முகத்துடன் வரவேற்க்கிறார்கள். பணம் இருந்தால் சபலிஸ்டுகளுக்கு பாட்டாயா சிட்டி சொர்க்க பூமிதான்.
|
அங்குள்ள மனிதர்களைப்போல் முட்டையும் கலர்ஃபுல்லாகத்தான் இருக்கிறது. |
ஆனால் திரும்ப வந்த பிறகு நண்பர்களிடம் திட்டு வாங்கியது எனக்குதான் தெரியும். வெறும் மசாஜ் பண்ண வேண்டியது தானே நீயெல்லாம் போனதே வேஸ்ட் என்றான் சதிகாரன். இருந்தாலும் கற்ப்பை காப்பாற்றிய மகிழ்ச்சியில் நானும், வெளியில் சொல்லிவிடுவானோ என்று அவர்களும் இருப்பதுதான் வேடிக்கை.
Comments
நான் தாய்லாந்துக்கு பேர் போன மசாஜ்ய சொன்னேன்...
நல்ல அனுபவ பகிர்வு... கலக்கல் தொடருங்கள்...
Looks like you all had a great time. :-)
பதிவும் படங்களும் கலக்கல் :)
ம் enjoy பண்ணிட்டு வந்துருக்கீங்க
பதிவும் படங்களும் கலக்கல் :)
//
சுற்றி பார்த்தோம் ரசித்தோம் அவ்வளவுதான்.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
பாதி சொல்லி மீதியை மறைத்த மாதிரி இருக்கே.//
சே.....சே..... நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மைத்தவிர வேறில்லை.
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்
:-)
//மறுநாள் காலையில் அவர்கள் நேற்று இரவு தான் அனுபவித்த மகிழ்ச்சியை விளம்பி கொண்டிருந்தார்கள். மசாஜ் என்ற பெயரில் தொடங்கும் நிகழ்ச்சி “அதில்” போய்தான் முடியுமாம். நமக்கு கூழானாலும்(???????) வீட்டு சாப்பாடுதான். வெளியே சாப்பிடுவதில்லை(!!!!!!!!!!!) என்பதை கொள்கையாக வைத்திருப்பதால் இதெல்லாம் பெரிய மேட்டராக தெரியவில்லை//
சிரிச்சு மாள முடியலை...:-))
இன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்//
என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ரமணிசார்.என்னுடைய நன்றியை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
//மறைத்த மாதிரி இருக்கே.////
பொது சபையில் மறைத்தாலும் வெளியே வந்திருமே ஷர்புதீன்.
பாரா கிளைடிங் போட்டோ செம கிளாஸ் விஜயன்..செம குட் ஷாட்..கற்போட திரும்பி வந்ததுக்கு ட்ரீட் ப்ளீஸ்...:-))// உங்க பிறந்தநாள் ட்ரீட்டும் இந்த ட்ரீட்டும் ஒன்னுகொண்ணு சரியா போச்சி.
இனிமே நாங்களும் அது என்ன லாந்து ஆங் தாய்லாந்து.... அதுக்கு போனோம்னு சொல்லுவோம். அவ்ளோ தெளிவா சொல்லியாச்சு எல்லாம். சூப்பர் அண்ணா....
ஹி...ஹி... ஒரு எதுகை மோனைக்காக...