ஆலயத்தின் புற தோற்றம் இன்று (04.04.2012, புதன் கிழமை) கன்னியா குமரி மாவட்டத்தில் பொற்றையடியில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. shri C.B SATPATHY கும்பாபிஷேகத்தையும் பிராண பிரதிஷ்டையையும் செய்து வைத்தார். ஆலயத்தின் முன் பார்வை இது வள்ளி ஸ்டீல் இண்டஸ்டீரீஸ் -ன் உரிமையாளர் திரு.நேபாள்ராஜ் என்பவரின் முழு முயற்ச்சியாலும் சொந்த பணத்தாலும் (வேறு எவரிடமிருந்து எந்த நன்கொடையும் பெறாமால்) நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை எப்படி சுசீந்திரமும் விவேகானந்த பாறையும் கவர்ந்து இழுத்ததோ அந்த வரிசையில் இந்த ஆலயமும் இடம்பெறும் என்றால் மிகையில்லை. ஆலயத்தின் உள்ளே கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பலரை அங்கே காண முடிந்தது. பாபாவின் பக்தர்கள் எல்லா ஐஸ்வர்களையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவரது பக்தர்களை பார்க்கும்போது அது ஒரு வகையில் சரி என்றே தோன்றியத...