போன வாரம் சீரடி சாயி பாபா  கோவிலுக்கு போய் வரும்பொழுது நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதை உங்களுக்கும்  தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.........                         வாரம் ஒரு முறை சென்னையில் இருந்து ஒரு இரயில் வண்டி சீரடிக்கு செல்கிறது. அதில் செல்பவர்கள் அநேகமாக சாயிபாபாவின் பக்தர்கள் தான்.  அனைவரும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதால் பாடல் மற்றும் பஜனைகள் களைகட்டும். நாங்களும் நன்றாக பிரயாணத்தை ரசித்து ருசித்து மகிழ்ந்து சென்றோம். இனிமையாக தரினத்தை முடித்து இரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம்.     டிக்கட் பரிசோதகரால்  நடுக்காட்டில் இறக்கிவிடப்பட்ட   குடும்பம்.                  இரண்டு பக்கமும் காட்சிகள் பச்சை பசேலென்று கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அதை ரசித்துக்கொண்டும் என்  கேமிராவினால் காட்சிகளை  பதிவு செய்து கொண்டும்  வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய இரயில் நிலையத்தில் இருந்து ஒரு  ஏழைக்குடும்பம் நாய் மற்றும் மூங்கில் கம்பு சகிதமாக ஏறியது. எனக்...