நேற்று தற்செயலாக வழியில் என் நண்பரை சந்தித்தேன். அவர் வட்டிகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்ன சார் கோவை சென்றதாக கேள்விப்பட்டேனே என்றேன். ஆமா விஜயன் கடந்த மூன்று வருடங்களாக புதுவருடத்தின் துவக்கம் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில்தான் என்றார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் வாயிலாக இமாலயம் சென்று வந்தார். மிகவும் முக்கியமான, அனைவரும் பார்க்க வேண்டிய வித்தியாசமான இடம், பணம் இருந்தாலும் பார்த்திட முடியாது. உடல் ஒத்துழைக்கும்போது பார்த்துவிடுவோம் என்றுதான் சென்றேன் என்றார். பிறகு பேச்சு தொழிலைப்பற்றி திரும்பியது. இன்றைய காலகட்டத்தில் அது யாருடைய தொழிலாக இருந்தாலும் சரி போட்டி மிகுதியால் லாபம் குறைந்துவிட்டது. பழைய மாதிரி ஓடியாடி வேலை செய்யும் வயதும் போய்விட்டது. அதனால் ஓரிரு வருடத்தில் இருக்கிற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என்றார். அவருக்கு ஒரே பையன் தான் பொறியியல் படிக்கிறார். அடுத்து மே...