Skip to main content

”நடுவுல கொஞ்சம் வாழ்க்கையக்காணோம்”

நேற்று தற்செயலாக வழியில் என் நண்பரை சந்தித்தேன். அவர் வட்டிகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்ன சார் கோவை சென்றதாக கேள்விப்பட்டேனே என்றேன். ஆமா விஜயன் கடந்த மூன்று வருடங்களாக புதுவருடத்தின் துவக்கம் ஜக்கி வாசுதேவின்  ஆசிரமத்தில்தான் என்றார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் வாயிலாக இமாலயம் சென்று வந்தார். மிகவும் முக்கியமான,  அனைவரும் பார்க்க வேண்டிய வித்தியாசமான இடம், பணம் இருந்தாலும் பார்த்திட முடியாது.  உடல் ஒத்துழைக்கும்போது பார்த்துவிடுவோம் என்றுதான்  சென்றேன் என்றார்.

                 பிறகு பேச்சு தொழிலைப்பற்றி திரும்பியது. இன்றைய காலகட்டத்தில் அது யாருடைய தொழிலாக இருந்தாலும்  சரி போட்டி மிகுதியால் லாபம் குறைந்துவிட்டது. பழைய மாதிரி ஓடியாடி வேலை செய்யும் வயதும் போய்விட்டது. அதனால் ஓரிரு வருடத்தில் இருக்கிற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என்றார்.

                அவருக்கு ஒரே பையன் தான் பொறியியல் படிக்கிறார். அடுத்து மேற்படிப்புக்காக அவனை ஜெர்மனியில் MS  படிக்க வைக்க எனக்கு ஆசை. அவனுக்காக கல்விக்கடன்  வாங்கினேன் அதையும் இன்னும் ஓரிரு வருடத்தில் அடைத்துவிடுவேன் என்றார். எனக்கென்று பெரிய தேவைகள் இல்லை. சொந்த வீடு இருக்கிறது. பையனுக்கு இரண்டு பிளாட் வாங்கி போட்டுள்ளேன். ஒன்றை விற்றுக்கூட அவன் வீடு கட்டிக்கொள்ளலாம்.அது போக நான் என் மனைவி மற்றும் பையனுக்கு பெரிய தொகையில் காப்பீடு செய்துள்ளேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் 58 வயது ஆகும் போது 20000 ரூபாய் பென்சன் மாதிரி வருகிற மாதிரி தனித்தனியாக காப்பீடு செய்துள்ளேன். அதை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம். என் மனைவி கூட பணத்திற்காக என்னை எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. என் மகனுக்கும் அவன் பிள்ளை காலத்தில் 40 லட்ச ரூபாய் வருகிற மாதிரி காப்பீடு செய்துள்ளேன். அது அவன் பிள்ளைகளின் படிப்பிற்க்கு உதவும். நான் அவன் படிப்பிற்க்கு ஓடியமாதிரி அவன் கஷ்டப்படக்கூடாது  இல்லையா என்றார்.

                     ஆனால் நான் என் மகனிடம் எதையும் கேட்கவில்லை ஒன்றைத்தவிர. ஒரளவு உனக்கு நான் எல்லாம் செய்துவிட்டேன். நீயும் என்னை எதிர்பார்க்க வேண்டாம். நானும் பணத்திற்க்காக உன்னை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால் நீ கண்டிப்பாக ஒரு ஏழைச்சிறுவனின் படிப்பை ஏற்று செய்ய வேண்டும் இது என் கண்டிப்பான ஆசை அதை செய்தே ஆக வேண்டும் என்றார்.

                       ஒருவர் தன் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாக வடிவமைத்து வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியமளித்தது. இது அனைவருக்கும் சாத்தியமாவது இல்லை என்றாலும் இயன்றவரை  இதைப்போல் நாமும் வாழ்க்கையை துல்லியமாக திட்டமிட்டால்  நம் குழந்தைகளும் நன்றாக இருக்கும் , குடும்பமும் நன்றாக இருக்கும்,சமுதாயமும் நன்றாக இருக்கும் . 

...................................................................வாழ்க வளமுடன்..........................................................

Comments

sriram said…
இந்தியாவில் Personal Financial Advisor களின் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவு.

பதிவில் சொல்லப் பட்டிருக்கும் பெரியவர் செய்திருப்பவை definitely not financially prudent. அவருக்கும் மனைவிக்கும் 40,000 ரூ பென்சன் வருமாறு இரு காப்பீடுகளாம், மகனுக்கு 40 லட்ச ரூபாய் வருமாறு ஒரு காப்பீடாம்.

இந்த குறிப்பிடப் பட்ட பணமெல்லாம் Not Guaranteed என்று அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை (Here I am assuming that he has invested in ULIP / Pension schemes of Insurance companies)

இந்தக் காப்பீடுகளுக்கு அவர் செலவிட்ட தொகையை வேறு நல்ல முறையில் இன்வெஸ்ட் செய்திருந்தால் (Balanced portfolio investing) அவருக்க்கும் அவர் குடும்பத்தாருக்கும் கிடைத்திருக்கும் தொகை எவ்வளவாக இருக்கக் கூடும் என்பதை அவர் ஒரு நல்ல அட்வைசரிடம் கேட்டிருக்கலாம்.

அவர் இந்த முதலீடுகள் அனைத்தையும் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் போட்ட மாதிரி தெரிகிறது, அப்படி இருந்தால் அந்த பாலிஸிகளை போட்ட ஏஜெண்ட் ஜாக்பாட் அடித்திருப்பார்.

காப்பீடு வேறு முதலீடு வேறு என்று எப்போது இந்தியர்களுக்குப் புரியப் போகிறது?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Unknown said…
நல்ல திட்டமிடல். அற்புதம்
// காப்பீடு வேறு முதலீடு வேறு //

லைஃப்/மெடிக்கல் இன்சூரன்ஸுக்கும், முதலீட்டுக்காம வேறுபாடு பற்றிய புரிதல்கள் குறைவென்றுதான் தெரிகிறது.

இதற்கு இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் தரும் பலவித தவறான விளக்கங்கள், எப்படியாவது ஒருத்தரி பணம்போட வச்சி கமிசன் அடிக்கனும்ன்ற போக்கு கூட ஒரு காரணம்.

இருந்தாலும் இப்படியாவது பணத்தை மாசா மாசம் சேமிச்சி, பாலிஸி முடிஞ்சோடனே பனம் வருதேனும், அப்படி வந்த பனத்தால மகிழ்ச்சியடையுறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.

அரசு இது பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்தினா நல்லா இருக்கும்.

டிஸ்கி : மீ தெ 200வது ஃபாலோவர் :-)
நீங்கள் மாட்டிக் கொண்டது ? : http://nanjilmano.blogspot.in/2013/07/blog-post_22.html

தொடர வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...