அது ஒரு கனாக்காலம்.. முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இல்லாத காலம்...அன்று ப்ளாக் மற்றும் அதில் உள்ள நட்புகள் தான் உலகம்... சண்டையில் சட்டை கிழியும் என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்தது....முகநூல் வராத வரை. அதன் பின் ப்ளாக மீதான ஆர்வத்தை முகநூல் வெகுவாக குறைத்து...அநேக பளாக நண்பர்கள் முகநூலிலும் வரவே பளாக்கில் வருவது நின்றே போனது எனலாம். இருந்தாலும் ப்ளாக் மீதான மதிப்பு குறையவில்லை . இனி மேட்டருக்கு வருவோம் இது ஆடி மாசம் ஆஃபர்களுக்கு பஞ்சமில்லாத காலம். வசந்த் அன் கோவில் பொருள் வாங்கினால் 41 கார் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு தினுசாக ஆஃபர்கள் இருக்கும். ஆனால் இந்த பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று யாரும் பொருட்கள் வாங்குவது கிடையாது. தேவையான பொருளை வாங்கி விட்டு போகிற போக்கில் பரிசு கூப்பனை நிரப்பி பெட்டியில் நிராசையுடன் போட்டுவிட்டு வருவதுதான் வழக்கம். ...அப்புறம் யாருக்கு என்ன பரிசு விழுந்தது என்று நாம் கேட்பதும் இல்லை. நமக்கு பரிசு விழுந்ததாக அவர்கள் சொல்லப்போவதும் இல்லை. எப்பொழுதாவது அக்க...