முதல்வரான பிறகு காஞ்சியில் சொந்த வீட்டுக்குப்போனார் அண்ணா. ஐஸ் வாட்டர் வந்ததும் “ஏது பிரிட்ஜ் ! பணம் ஏது ?” என்று கேட்டு வாயிற்படியில் தலைவைத்துப் படுத்து விட்டார் ! வீட்டில் மருமகள்கள் வந்து தவணை முறையில் வாங்கியதாக புத்தகத்தைக் காட்டிய பிறகே உள்ளே சென்றார். “வாழ்நாளில் எப்போதும் இல்லாத அடக்கத்துடன் உங்கள் முன் நிற்க்கிறேன்” என்று பதவியேற்றவுடன் கடற்கரையில் மக்கள் முன் சொன்னார். “முன்பு இருந்தவற்றை கலைக்கவோ குலைக்கவோ வரவில்லை; மேம்படுத்தவே வந்துள்ளேன் என்று அரசு ஊழியர்களிடையே பேசினார். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பண்பு அது. ஒருநாள் நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து பிற்பகல் நான்குமணிக்கு கோட்டைக்கு...