இந்தியன் வங்கி மிகவும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் வங்கி.... உலகிலேயே மிகவும் மெதுவான இணைய இணைப்பை கொண்டதாக இருப்பதால் ஒரு ஆள் பணம் கட்டவே ஒரு மணிநேரம் ஆகும். அதனால் அந்த வங்கியில் எப்போ போனா ஆளே இருக்காது என்று PH.D பண்ணிவிட்டேன். உணவு இடவேளைக்கு கொஞ்சம் முன்னால் சென்றால் கூட்டம் இருக்காது. அப்படியே இன்றும் சென்றேன் வழக்கம்போல். எல்லா கவுண்டர்களிலும் ஒரிரு ஆட்களே இருந்தனர். என் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஏதோ வங்கியில் ஒரு லட்சம் டெபாசிட் பண்ணியது மாதிரி. ஒரு கவுண்டரை தேர்ந்தெடுத்து போய் நின்றேன். மிகவும் ஆற அமர என் முன்னால் நின்றவரின் நோட்டுக்களை ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தார். அடுத்தாக என் முறையும் வந்தது. மிகவும் அலட்சியமாக என்னிடமிருந்து பணத்தை வாங்கினார். என் மனம் சிந்தித்தது , நானும் மனிதன் தான் அவர...