போன வாரம் என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது. நண்பனின் அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.
அதிகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன். உறக்கம் தெளிந்தபோது மணி 12.00. கொஞ்சம் காலைகடன்களை கழிக்கலாமே என்று கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).
நிதிஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின் toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது (ஒரு வேளை நான் தான் முதன்முறையாக உபயோகிக்கிறேனோ!) இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தேன் அது அப்படியே என் கையோடு வந்தது (என்ன கொடுமை சார் இது). தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டியது நானும் தொப்பென்று நனைந்துவிட்டேன். (Mr.BEAN மாதிரி ஆனது என் நிலமை) மனைவிக்கு தெரியாமல் இருக்க இரயில் வாசலில் நின்று காயவைக்க வேண்டியது ஆகிவிட்டது.
இரயிலில் உணவு கொடுப்பவர் கானா ..கானா...(சாப்பாடு என்று இந்தியில்) என்று கத்திக்கொண்டே செல்ல அருகில் இருந்த தமிழர் காணோம் .. காணோம் என்கிறாரே தவிர எதை காணோம் என்று சொல்ல மறுக்கிறாரே என்று ஆதங்கப்படுகிறார்(ஜோக்கா ?). இது போக பொது வகுப்பை விட கேவலமாக இருக்கிறது முன்பதிவு பெட்டி எல்லோரும் பக்கத்திலும்,தலையின் மேலுமாக ஏறிக்கொள்கிறார்கள்.
இப்படியாக நொறுங்கி நூடில்ஸ் ஆகி ஒரு வழியாக கான்பூரை அடைகிறோம். கான்பூர் எனக்கு புதிய இடம் இல்லையென்றாலும்( 1992-2002 வரை அங்குதான் குப்பைகொட்டியிருகிறேன்) ரொம்பவே மாறி இருந்தது. மாறாதது அங்குள்ள வர்களின் நிரம்பிய வாயும்( குட்கா,பான்மசாலா) ,ரோடிலுள்ள நிரம்பாத குண்டுகளும் தான்.
கான்பூர் இரயில் நிலையத்தை பார்த்ததும் அப்படி ஒரு மனமகிழ்ச்சி. ஒரு வழியாக மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இரயில் நிலையத்திற்க்கு நண்பர்கள் புத்தம் புதிய காரில் (எல்லாம் மாமனாரின் உபயம்தான்) அழைத்து சென்று உயர்தர விடுதியில் தங்க வைத்தனர். குளிக்கலாம் என்று பைப் ஐ திறந்தால் ஃப்ரீஸரில் வைத்த தண்ணீர் மாதிரி பட்ட இடமெல்லாம் மறத்துவிட்டது. பிறகு தண்ணீர் விழுவது என்ற உணர்ச்சியே இல்லாமல் மறத்தமிழன் போல் ஆகிவிட்டேன்.
மணமகன் “பராத்” ல் ஊர்வலமாக பெண் வீட்டிற்க்கு செல்லும் காட்சி
” ஜெய்மால்” மணமக்கள் மாலை மாற்றுதல்
உற்சாகமா(பா) ன நண்பர்களின் நடனம் தன் சொந்தங்களுடன்
மணமக்கள் விஷால் -அன்சு
என் மனைவி என் நண்பனின் மனைவியுடன்
ஒரு வழியாக கல்யாணத்தில் கலந்துகொண்டு திரும்பினோம். நம்முடைய திருமணம் போல் இல்லாமல் ”பராத்” ”ஜெய்மால்” போன்ற சம்பிரதாயங்களும் உண்டு. அது போல் குடும்ப நண்பர்களுடன் கலக்கல் நடனமும் (நன்றாகவே ஆடுகிறார்கள்) உண்டு. எல்லாம் முடிந்து வரும் போதும் இரயில் அனுபவம் கொடுமைதான் . ஆனால் உங்கள் நலன் கருதி அதை நான் எழுதப்போவதில்லை (உன் எழுதிலேயே இந்த ஒரு வரிதான் சூப்பர் -னு நீங்க சொல்வது எனக்கு புரிகிறது).

Comments
போகும்போது இருந்ததை விடவா?
ஏற்கனவே பத்தாண்டுகள் போய் வந்துகொண்டுதானே இருந்திருக் கிறீர்கள்?உங்களுக்கு இதெல்லாம் புதிதில்லையே?(படிப்பவர் பலருக்கு இருக்கலாம்!)
நல்ல அனுபவம்!
ரோட்டோரத்தில் பனை நுங்குடன் நன்னாரி சர்பத் கலவையை ஊற்றி தருவார்கள். மததிய வேளையில் அதனை தின்றுவிட்டு திரும்பவும் அதனை வாங்கி தின்னும் என்னை நக்கலட்டிக்க ஒரு கூட்டமே இருக்கு.
நல்லா தான் எழுதுறீங்க. தொடருங்க.
மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மறத்தமிழனுக்கு அர்த்தம் இது தானங்க ...இன்னைக்கு வரை எனக்கு இது தெரியாதுங்க... :)))
வட நாட்டு திருமணத்தில் நானும் கலந்து கொண்டது போல் இருந்தது...
கலக்கல்.
எத்தனை கோடி ஊழல் நடந்தாலும் அதைப்பற்றி கவலைபடாத அதை நியாயப்படுத்தும் மரத்தமிழர்(தலைவர்கள்)வாழும் நாடு தானே இது சகோ. அது சும்மா ஒரு ரைமிங்க்காக. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//வரும் பொழுது கிடைத்த ரையில் பயண அனுபவத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுதிவிடுவோம் அவ்வளவுதானே.
//நிறைய இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்//
என்னுடைய குறிக்கோள் அதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கான்பூரில் எங்கே இருக்கிறீர்கள்,என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?