Skip to main content

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.

                    திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).

                       நிதிஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது (ஒரு வேளை நான் தான் முதன்முறையாக உபயோகிக்கிறேனோ!)  இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தேன் அது அப்படியே என் கையோடு வந்தது  (என்ன கொடுமை சார் இது). தண்ணீர்  கொட்டோ கொட்டென்று கொட்டியது நானும் தொப்பென்று நனைந்துவிட்டேன்.  (Mr.BEAN மாதிரி ஆனது என் நிலமை)  மனைவிக்கு தெரியாமல் இருக்க இரயில் வாசலில் நின்று காயவைக்க வேண்டியது ஆகிவிட்டது.
               
                         ரயிலில் உணவு கொடுப்பவர்  கானா ..கானா...(சாப்பாடு என்று இந்தியில்) என்று கத்திக்கொண்டே செல்ல அருகில் இருந்த தமிழர்  காணோம் .. காணோம் என்கிறாரே தவிர எதை காணோம் என்று சொல்ல மறுக்கிறாரே என்று ஆதங்கப்படுகிறார்(ஜோக்கா ?). இது போக  பொது வகுப்பை விட கேவலமாக இருக்கிறது முன்பதிவு பெட்டி எல்லோரும் பக்கத்திலும்,தலையின் மேலுமாக ஏறிக்கொள்கிறார்கள்.
இப்படியாக நொறுங்கி நூடில்ஸ் ஆகி  ஒரு வழியாக கான்பூரை அடைகிறோம். கான்பூர் எனக்கு புதிய இடம் இல்லையென்றாலும்( 1992-2002 வரை அங்குதான் குப்பைகொட்டியிருகிறேன்) ரொம்பவே மாறி இருந்தது. மாறாதது அங்குள்ள வர்களின் நிரம்பிய வாயும்(  குட்கா,பான்மசாலா) ,ரோடிலுள்ள நிரம்பாத குண்டுகளும் தான்.
             
                                    கான்பூர் இரயில் நிலையத்தை பார்த்ததும் அப்படி ஒரு மனமகிழ்ச்சி.  ஒரு வழியாக மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இரயில் நிலையத்திற்க்கு நண்பர்கள் புத்தம் புதிய காரில் (எல்லாம் மாமனாரின்  உபயம்தான்) அழைத்து சென்று  உயர்தர விடுதியில் தங்க வைத்தனர்.  குளிக்கலாம் என்று  பைப்  ஐ திறந்தால்  ஃப்ரீஸரில் வைத்த தண்ணீர் மாதிரி  பட்ட இடமெல்லாம் மறத்துவிட்டது. பிறகு தண்ணீர் விழுவது என்ற உணர்ச்சியே இல்லாமல்  மறத்தமிழன் போல் ஆகிவிட்டேன்.

                   
                                   
        மணமகன் “பராத்” ல் ஊர்வலமாக பெண் வீட்டிற்க்கு செல்லும் காட்சி



                                      ஜெய்மால்” மணமக்கள் மாலை மாற்றுதல்





           உற்சாகமா(பா) ன நண்பர்களின் நடனம் தன் சொந்தங்களுடன்



                                                   மணமக்கள் விஷால் -அன்சு

                                          என் மனைவி என் நண்பனின் மனைவியுடன்

ஒரு வழியாக கல்யாணத்தில் கலந்துகொண்டு  திரும்பினோம். நம்முடைய திருமணம் போல்  இல்லாமல் ”பராத்”  ”ஜெய்மால்”     போன்ற சம்பிரதாயங்களும் உண்டு.   அது போல் குடும்ப நண்பர்களுடன் கலக்கல் நடனமும் (நன்றாகவே ஆடுகிறார்கள்)  உண்டு. எல்லாம் முடிந்து வரும் போதும் இரயில் அனுபவம் கொடுமைதான் . ஆனால் உங்கள் நலன் கருதி அதை நான் எழுதப்போவதில்லை (உன் எழுதிலேயே இந்த ஒரு வரிதான் சூப்பர்  -னு நீங்க சொல்வது எனக்கு புரிகிறது).

Comments

நல்லொதொரு பயணக்கட்டுரை....
Unknown said…
நல்லா இருக்குங்க உங்க அனுபவம் இப்படியே கண்டினியூ பண்ணுங்க :-)
Unknown said…
ஆமா மாப்பிள்ளை ஏன் சோகமா இருக்காரு?
//எல்லாம் முடிந்து வரும் போதும் இரயில் அனுபவம் கொடுமைதான் //
போகும்போது இருந்ததை விடவா?
ஏற்கனவே பத்தாண்டுகள் போய் வந்துகொண்டுதானே இருந்திருக் கிறீர்கள்?உங்களுக்கு இதெல்லாம் புதிதில்லையே?(படிப்பவர் பலருக்கு இருக்கலாம்!)
நல்ல அனுபவம்!
தங்களின் நண்பருக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்...
நண்பரின் திருமணத்துக்கு நாங்களும் வந்தது போல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி
எனக்கு நாகர் கோயில் ரொம்பவும் பிடித்த இடம். காரணம் ஆருயிர் நண்பரின் சொந்த ஊர் என்பதால்.
ரோட்டோரத்தில் பனை நுங்குடன் நன்னாரி சர்பத் கலவையை ஊற்றி தருவார்கள். மததிய வேளையில் அதனை தின்றுவிட்டு திரும்பவும் அதனை வாங்கி தின்னும் என்னை நக்கலட்டிக்க ஒரு கூட்டமே இருக்கு.
நல்லா தான் எழுதுறீங்க. தொடருங்க.
பிரதிவிராஜ் உங்களைப்போலத்தான் இருக்கிறார். அவர் என்ன உங்க சொந்தகாரரா? :))
Unknown said…
NKS-ஹாஜா மைதீன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
ஐயா இரவுவானம் (வேறு என்ன சொல்ல பேரே இல்லையே)வருகைக்கு நன்றி. மாப்பிள்ளைக்கு திருமணத்தன்று அவருடைய factory ல் இரண்டு லோடு பைப் ரிடர்ன் ஆகிவிட்டது. அதுகூட காரணமாக இருக்கலாம்.
Unknown said…
சந்திரசேகரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.தற்போது நீங்கள் எழுதும் பதிவிகளில் பின்னூட்டம் இடக்கூட நிறைய ஆன்மீக அறிவு தேவைப்படுகிறதே.
Unknown said…
தஞ்சை வாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Unknown said…
சிவகுமாரன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்படிதான் சில நேரங்களில் பயணம் படுத்திவிடும்.....
மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இரயில் பயணங்களில்..... இது ஒரு சோகப் படம்!!!!!!!
Unknown said…
வருகைக்கு நன்றி சி.கருணகரசு அவர்களே. வட இந்திய இரயில்கள் தான் இப்படி தென்னிந்திய இரயில்களின் பராமரிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.
நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளீர்கள் :-) நிறைய இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்...ரயிலின் நிலவரத்தைப் பற்றி எண்ணி நொந்து கொள்ள தான் முடிகிறது !!
ஆமினா said…
எனக்கு பிடிச்ச ட்ரையின் சார் அது. ராப்தி சாகர் எல்லாத்தைவிடவும் சீக்கிரமா கொண்டு போய் சேர்க்குற ஒரே ட்ரையின் அது தான். உக்காந்தா லக்னோ வர வரை அலுப்பே தெரியாது. ஆனா ஆர்டனரில வந்தா கூட்டத்தோட சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது தான். எனக்கு ஒன்னு மட்டும் புரியல. நிதீஷ் குமார ஏன் கூப்பிட்டீங்க? அவர் பாட்டுக்கு பீகார்ல தானே இருக்கார். லக்னோக்கு வரலையே. அப்பறம் மாயாவதி அம்மா கோவிச்சுக்க போறாங்க ;))
அட்டகாசமான பகிர்தல்.அவசியம் திரும்ப வரும் பொழுது கிடைத்த ரையில் பயண அனுபவத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Kousalya Raj said…
//பிறகு தண்ணீர் விழுவது என்ற உணர்ச்சியே இல்லாமல் மறத்தமிழன் போல் ஆகிவிட்டேன்.//

மறத்தமிழனுக்கு அர்த்தம் இது தானங்க ...இன்னைக்கு வரை எனக்கு இது தெரியாதுங்க... :)))


வட நாட்டு திருமணத்தில் நானும் கலந்து கொண்டது போல் இருந்தது...

கலக்கல்.
Unknown said…
Kousalya said...
எத்தனை கோடி ஊழல் நடந்தாலும் அதைப்பற்றி கவலைபடாத அதை நியாயப்படுத்தும் மரத்தமிழர்(தலைவர்கள்)வாழும் நாடு தானே இது சகோ. அது சும்மா ஒரு ரைமிங்க்காக. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
சகோ. ஸாதிகா

//வரும் பொழுது கிடைத்த ரையில் பயண அனுபவத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுதிவிடுவோம் அவ்வளவுதானே.
Unknown said…
சகோ.சுபத்ரா
//நிறைய இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்//
என்னுடைய குறிக்கோள் அதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
படத்தைப்போல இல்லாம உங்கள் பதிவு நல்ல காமடியாக இருந்தது.
நானும் தற்பொழுது கான்பூரில் தான் குப்பை தடி கொண்டு இருக்கிறேன்.. கான்பூர் இந்த நாலு வருடத்தில் எவளவோ மாறி விட்டது
Unknown said…
Raja அவர்களுக்கு,
கான்பூரில் எங்கே இருக்கிறீர்கள்,என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?
Unknown said…
நல்லா எழுதுறீங்க. உங்க ரயில் அனுபவம் கேட்டா பயமா இருக்கு! உங்களுக்கே இந்த நிலைமைன்னா, ஒரு பெண் என்பதால் கேக்கிறேன், உங்க மனைவி எப்படி சமாளிச்சாங்க? அதையும் கேட்டு பயண அனுபவ பதிவுல எழுதிருங்க.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...