Skip to main content

Posts

Showing posts from July, 2011

ஊர் சுற்றலாம் வாங்க - சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை குட் நைட் சூரியன் பீச்சுக்கு போகும் வழி இருபுறமும் சிங்கம் இருக்கும் பயப்பட வேண்டாம் இதுதான் பீச்சுக்கு நுழைவாயில்  இதைத்தவிர   எல்லா இடம் வழியாகவும் மக்கள் செல்வார்கள். கலக்கல் கன்ஸ்ட்ரக்‌ஷன். இவள் எழுத  அலை அழிக்க என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு!!!!!!!! நாகர்கோவிலிலிருந்து 12  கி.மீ, தொலைவில் புத்தளம் அருகில்  அமைந்துள்ள அழகிய இயற்க்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும். சுனாமியின் போது நிறைய பேரையும், வண்டிகளையும் தன்னகத்தே அணைத்து கொண்டு சென்ற தாயுள்ளம் கொண்ட கடற்கரை. குழந்தைகள் பூங்காவும் கண்காணிப்பு கோபுரமும். பயப்பட  வேண்டாம் இது நானேதான் (ஒரு அல்ப ஆசைதான் ) என் மனைவி என்ன ஒரு சந்தோஷம் வீடு கட்டியதில்  இது வெளி உலகுக்கு சமீபத்தில் தெரிய் தொடங்கி புதிய சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இங்கு நவீன மயமாக்ப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகர மக்களுக்கு இது இயற்க்கை அளித்த ஓர் வரப்பிரதாமாகும். ஒரு காரை பனை மரத்தின் உயரம் தூக்கி சென்று  மரத்தினிடையே ...

நண்பேன்டா

நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு. நண்பர் சென்னை பித்தன் ஐயா அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத்  தொடர்கிறேன். நாம்  சிறுவயது முதல்  நிறையபேர்களுடன் பழகினாலும் இன்று திரும்பி  பார்க்கையில் நினைவில் வருபவர் சிலரே.  அவர்களைத்தான் நான்  உங்களிடம் பகிர இருக்கிறேன்.   அதில் முதலாவதாக நான் ஒன்றாம் வகுப்பு  முதல் பத்தாம் வகுப்பு வரை  என்னுடன் படித்த  என்னுயிர்த்தோழன்  விமலைப்பற்றி நான் கூறியே ஆக வேண்டும்.  . சாமுவேல் விமல் குமார்: இவரும் நானும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தோம்.  அவர்கள் அம்மா  இவர்களை மிகவும் அன்பாக நடத்துவது எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும்.  என் வீட்டில் எல்லோரும் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்.  படிக்காவிட்டால் உலகமே இரண்டான மாதிரி கத்துவார்கள், ஆனால் என்  நண்பனின் வீட்டிலோ take it easy policy  தான்.   நானும்  அவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம்.  நல்ல நண்பர். 10-வது வகுப்பு  வரை நாங்கள் ஒன்றாகத்தான் படித்தோம். ...

ராசா முதல் கனிமொழி வரை ஜாமீன் இல்லா ஜெயில் ஏன்? சட்டம் என்ன சொல்கிறது!!!!!!!!!!

திகார் ஜெயில்... ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன்....? உலகத்தை கூட திரும்பி பார்க்கவைத்துள்ளது.  எத்தனை பூஜ்யம் போட்டு எப்படி எண்ணுவது ? என்று எண்ணிப்பார்த்து மலைக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், அரிநாயர்(ரிலையன்ஸ்) கரீம்  மொரானி(சினியுக் பிசினஸ்) வினோத் கோயங்கா, ஷாகித் பல்வா,ஆசிப் பல்வா(சுவான்), தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசா உதவியாளர் சந்தோலியா விளையாட்டு ஊழலில் சிக்கிய முன்னாள் மத்தியமநதிரி சுரேஷ் கல்மாடி உள்பட பலர் திகார் ஜெயிலுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள்.                ஆ. ராசா 140 நாட்களை கடந்துவிட்டார். கனிமொழி யும் 40 நாட்களை ஜெயிலில் கழித்துவிட்டர்.  இவர்களில் யாருக்கும் இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு கீழ் கோர்ட்டை அணுகுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு சுத்தியலை ஓங்கி அடித்து விட்டது....