முகநூல் புகைப்படப்பிரியன் குழுமத்தின் சார்பில் 26.01.2012 அன்று குமரி முனையில் TRI-SEA HOTEL -ல் வைத்து ”புகைப்பட கலந்துரையாடல் மற்றும் பயிற்சி” நடைப்பெற்றது. இந்த குழுமத்தை சார்ந்த திரு.மெர்வின் ஆன்டோ தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்.திரு மென்வின் ஆன்டோவை பற்றி நான் பலமுறை எழுத நினைத்து காலம் கடந்து சென்று கொண்டே இருந்தது. அவரைப்பற்றி தனியாக ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் ஒரு நண்பர் குறிப்பிட்ட மாதிரி அவர் ஒரு PHOTO SCIENTIST என்றே கூறலாம் அந்த அளவிற்க்கு மிகவும் நுட்பமாக புகைப்படத்தை யாரும் சிந்திக்காத புதிய பரிணாமத்தில் எடுப்பதில் வல்லவர். அவரின் தனிப்பட்ட முயற்சி தான் இந்த நிகழ்ச்சி. அவர் பார்க்க... பழக மிகவும் எளிமையானவர்.செய்யும் தொழிலை மிகவும் அர்பணிப்பு உணர்வோடு செய்பவர்...... என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்....... நீங்கள் அனுமதித்தால்..........
காலை ஒன்பது மணிக்கு Registration துவங்கியது. அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் வந்தவுடன் நிகழ்ச்சி துவங்கியது.
காலை ஒன்பது மணிக்கு Registration துவங்கியது. அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் வந்தவுடன் நிகழ்ச்சி துவங்கியது.
காலையில் நிகழ்ச்சி பங்கேற்ப்பாளர்களின் Registration நடைபெறுகிறது |
நிகழ்ச்சியை திரு ஜவர்கள் ஜி அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சி இனிதே ஆரம்பித்தது
திரு. ஜவகர் ஜி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். |
திருமதி. இந்திரா ஜெயராம் , சென்னை. குத்துவிளக்கேற்றினார். |
புகைப்படப்போட்டியில் இடம் பெற்ற புகைப்படங்கள். |
திரு.லஷ்மண் ஐயர் அவர்களுடன் திரு.மெர்வின் ஆன்டோ அவர்கள் |
அவருடன் Thiru.Lakhsman Iyer (SENTIENT, CHENNAI),.Thiru.Pazhani kumar( (Editor Best photography today),Thiru.Kumar Mullackal (surya graphics, Nagercoil), Thiru Madhu payyan Vellatinkara(Engineer TNEB Ooty) ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
அதன் பின் குமரிக்கொழுந்துகள் குழுமத்தை சார்ந்த திரு. கிப்டன் அவர்களின் அகால மரணத்தை முன்னிட்டு அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. திருவட்டார் சிந்துகுமார் (குமுதம் ரிப்போர்ட்டர்) அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
அதன் பின் புகைப்படபிரியனில் பங்குபெற்ற புகைப்பட போட்டியில் பரிசு பெற்றவர்களை வாழ்த்தியும் அவை தேர்ந்தெடுக்கப்பட்தற்க்கான காரணத்தையும் விளக்கினார் திரு பழனிக்குமார் அவர்கள். மேலும் அவர் கூறும் போது புகைப்படங்கள் உலகில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியதுண்டு என்றும் போரையே நிறைவுக்கு கொண்டுவந்த பெருமை அதற்க்கு உண்டு என்றும் குறிப்பிட்டார். உலகதர புகைப்பட போட்டியில் எவ்வாறு ஒரு புகைப்படம் தேர்தெடுக்கப்படுகிறது என்பதையும் அருமையக விளக்கினார். ஒரு மிருகம் அல்லது ஒரு பறவை புகைப்படம் எடுப்பவரைக்கண்டு மிரண்டாலோ அல்லது சீறினாலோ முதல் சுற்றிலேயே அந்த படம் வெளியேறிவிடுமாம். படத்தின் உணர்வு, அந்த படத்தை எடுக்க மேற்கொண்ட உழைப்பு ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமாம். படம் இயல்பு மாறாமல் இருப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். காப்புரிமையை பொறுத்தவரையில் நாம் படத்தை கிளிக்கிய அந்த நொடியில் இருந்து அந்த படம் எடுத்தவர்க்கு சொந்தமாகிவிடுகிறது. காப்புரிமை பெற எந்த ஒரு ஃபாரமும் நிரப்ப வேண்டியதில்லை. ஆனால் அந்த படம் மருத்து சம்பந்தமாகவோ அல்லது கல்விக்காகவோ மற்றும் திரைப்படத்திற்க்காகவோ பயன் படுத்தப்பட்டால் அது காப்புரிமை சட்டத்திற்குள் வருவதில்லையாம்.
மேலே காண்கிற இரண்டு புகைப்படமும் உலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய புகைப்படங்கள். ஒரு சிறந்த புகைப்படக்கலைஞரால் உலகிற்க்கு என்ன செய்ய முடியும் என்பதற்க்கு இதுபோன்ற படங்கள் சிறந்த உதாரணம். உலகில் நடக்கின்ற துயரங்களை வெட்டவெளிச்சமாக்கி அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க காரணமாகி இருக்கிறார்கள்.
அதன் பிறகு கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதாக துவங்கியது. அனைவருடைய புகைப்பட சம்பந்தமான ஐயங்களைப்போக்க சென்னையிலிருந்து திரு.லக்ஷ்மண் ஐயர்( SENTIENT, CHENNAI) அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் தினமலர் மற்றும் அநேக பிரபல தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகை துறையில் பணியாற்றியவர். புகைப்படத்துறையில் நுணுக்கமான அறிவும், அனுபவமும் பெற்றவர். அவர் அனைத்து உறுப்பினர்களின் கேள்விக்கும் நிதானமாக தெளிவாக ஆழமாக மனதில் பதியும் வண்ணம் எளிமையாக விளக்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் சென்னையில் புகைப்பட பள்ளியும் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இப்படி இனிதாக இந்த நிகழ்ச்சி முடிவிற்க்கு வந்தது. கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் ஒரு குடும்பம் போல் பழகி கனத்த இதயத்துடன் பிரியவிடை பெற்றனர்.
மறைந்த நண்பர் கிப்டனுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது |
திரு. திருவட்டார் சிந்துகுமார் (குமுதம் ரிப்போர்ட்டர்) அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
திருவட்டார் சிந்துகுமார் |
திரு.பழனிக்குமார் அவர்கள்(எடிட்டர் பெஸ்ட் போட்டோகிராபி டுடே) |
இந்தப்படம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நீங்கள் அறிந்ததே. |
பல அவார்டுகள் பெற்றும் இந்த புகைப்படத்தால் எடுத்தவரே மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது. |
புகைப்படபிரியனில் முதல்,இரண்டு மற்றும் மூன்றாவது பரிசு பெற்ற புகைப்படங்கள். |
அதன் பிறகு கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதாக துவங்கியது. அனைவருடைய புகைப்பட சம்பந்தமான ஐயங்களைப்போக்க சென்னையிலிருந்து திரு.லக்ஷ்மண் ஐயர்( SENTIENT, CHENNAI) அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் தினமலர் மற்றும் அநேக பிரபல தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகை துறையில் பணியாற்றியவர். புகைப்படத்துறையில் நுணுக்கமான அறிவும், அனுபவமும் பெற்றவர். அவர் அனைத்து உறுப்பினர்களின் கேள்விக்கும் நிதானமாக தெளிவாக ஆழமாக மனதில் பதியும் வண்ணம் எளிமையாக விளக்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் சென்னையில் புகைப்பட பள்ளியும் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.லக்ஷ்மண் ஐயர் அவர்கள் |
பிறகு நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.
முதல் பரிசை திரு. சுந்தர் ராஜன் அவர்களுக்கு மெர்வின் ஆன்டோ அவர்கள் வழங்குகிறார் |
இரண்டாவது பரிசை திரு. மது அவர்களுக்கு திரு. பழனிக்குமார் அளிக்கிறார். |
மூன்றாவது பரிசை திரு. திருவட்டார் சிந்துகுமார் அவர்களுக்கு திரு. லஷ்மண் ஐயர் வழங்குகிறார். |
திரு.லக்ஷ்மண் ஐயர் அவர்களுக்கு நினைவுப்பரிசினை திரு.மெர்வின் ஆன்டோ முன்னிலையில் திரு ஜவகர் ஜி அவர்கள் வழங்குகிறார். |
சென்னையில் இருந்து கலந்துகொண்ட மிஸ். அஞ்சனா ஜெயராம் அவர்கள் திரு.மெர்வி ன் ஆன் டோ முன்னிலையில் நினைவு பரிசினை திரு. பழனிகுமார் அவர்களுக்கு வழங்குகிறார் |
திரு. லக்ஷ்மண் ஐயருடன் அவர்களுடன் நான். |
திரு.Zoom முரளி அவர்கள். |
Add caption |
Mr.Patrick jasper works at NABARD |
Comments
அந்த வியட்நாமிய பெண் பேட்டி ஆனந்த விகடனில் பார்த்த நாபகம்.. மற்றைய படத்தை எடுத்தவர் பிள்ளையை காப்பாற்றாமல் படம் எடுப்பதையே குறிக்கோளாக இருந்ததை கண்டித்தவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்..!!!,
நல்ல பகிர்வு விஜயன். ஆனால், எப்பவும்போல லேட். சாரி// லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவீங்க தெரியும் சார். உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பிள்ளையை காப்பாற்றாமல் படம் எடுப்பதையே குறிக்கோளாக இருந்ததை கண்டித்தவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்..!!!,//
சரியாக சொன்னீர்கள் அதனால் தான் அவர் தற்கொலை செய்தார்.