Skip to main content

Posts

Showing posts from January, 2011

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

சிறப்பு குழந்தைகள்(Autism) ( என் வழி தனி வழி !!!!!!!!)

சிறப்பு குழந்தைகள் இந்தியாவில் பிறக்கும்போதே குழந்தை குறைபாடோடு பிறப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. அதை சிறுவயதிலேயே கண்டுபிடித்தால் அவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.  இவர்கள் சொல்லிக்கொடுக்கும்  எதையும்  அவ்வளவு எளிதாக் புரிந்த்து கொள்ளமாட்டார்கள்.  இது வீம்போ அல்லது அடம்பிடிப்போ,கீழ்படியாமையோ அல்ல. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடு. சாதாரண குழந்தையைப்போல் இருக்காமல், வித்தியாசமாக நடப்பதால், எல்லோரும் இந்த குழந்தைகளை வேடிக்கையாகப்பார்ப்பார்கள். இது பெற்றொருக்கு வேதனை தரும். இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோரில்  நானும் ஒருவன் என்ற முறையிலும் அடுத்தவர்களும் பாதிப்பை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதிலிருந்து மீள இது உதவும் என கருதுகிறேன் . ஆடிஸம் : என்பது பிறவியிலேயே  ஏற்படும் ஒருவகை மனவளர்ச்சி குறைபாடு ஆகும். இந்த குழந்தைகளுடன் காணும் முக்கிய பிரச்சினை ” கற்றல் குறைபாடு ” ஆகும். காரணம் இந்த குழந்தைகளுக்கும் பேசுவதிலும்,வார்த்தைகளை உச்சரிப்பதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. சில சமயம் செவித்திறன் கூட குறைவாக இருக்கலாம். இந்த குழந்...

எல்லோரும் பாருங்க நானும் விஞ்ஞானிதான்..........................???????

நான் பள்ளியில் படிக்கும் காலங்களிலும் சரி, இப்பவும் சரி  பள்ளி ஆசிரியர்  ஒவ்வொரு மாணவரிடமும் நீபடித்து யாராக  ஆக விரும்புறன்னு கேட்பாங்க. அப்போ எல்லோரும் வழக்கம் போல டாக்டர் அல்லது இன்ஜினியர் - ன்னு சொல்வாங்க.  யாரும் சயிண்டிஸ்ட் ஆவேன்னு சொல்லி நான்  கேட்டதில்லை. ஏன்னா அது அப்பவும் இப்பவும் பாப்புலர் இல்லை.                                     ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானியாலதான் முடியும்,அது மனித குலத்திற்க்கு ரொம்ப தேவையும் கூட.  மருத்துவரோ அல்லது பொறியாளரோ ஆகவேண்டும் என்றால் அந்த துறையில் படித்து( அல்லது வாங்கியோ) பட்டம் பெற்றால் போதும். ஆனால் விஞ்ஞானி ஆக படிப்பு மட்டுமல்லாமல் அந்த துறையில் முழுமையான ஈடுபாடு ம்  அர்பணிப்பு தன்மையும் தேவை .                       ...

உலக சந்தையில் இந்திய மூளைக்கு அதிக விலை !!!!!!!!!!

 புத்தாண்டு காலையிலேயே  வீட்டில் பெரிய பஞ்சாயத்தாகிவிட்டது.  எனது மூன்றாவது படிக்கிற மகனுக்கும் சிறிய  மகளுக்கும் சண்டை.   புதுவருடமும் அதுவுமாக அவனை அடிக்க கையை ஓங்கி பின்னர் கொஞ்சமாவது அறிவிருக்காடா அந்த நாயை விட கேவலமாக இருக்கிறாயே என்று திட்டினேன். அதற்க்கு விடுங்கப்பா உங்க பிள்ளைதானப்பா பின்னே எப்படி இருக்கும்  என்ற படி ஆமாப்பா நாய்க்கு அறிவு கிடையாதா? என்றான் அப்பாவித்தனமாக.                                   உருப்படியா  ஒரு கேள்வி கேட்கிறானே என்று நினைத்து , மகனே எல்லா மிருகங்களுக்கும்  மூளை உண்டு ஆனால் மூளையில் செரிப்ரம் என்ற ஒரு பகுதி உண்டு.அது மிருகங்களின்  மூளையில் சிறப்பாக இயங்குவதில்லை. அது ஒன்றுதான் மனிதனை (உன்னையல்ல) பிற விலங்குகளைவிட மேம்பட்டவனாக ஆக்குகின்றது என்றேன்.                ...