Skip to main content

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்)
நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)

               பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அறையை அதற்க்காக ஒதுக்கி கொடுத்தது இன்னும் மகிழ்ச்சியூட்டியது. சின்னத்திரையில் பல வண்ணக்கோலங்கள் படைத்த   டைரக்டர் செல்வகுமார் தன்னை  அறிமுகப்படுத்திக்கொண்டார் கூடவே நாங்களும்.

இயக்குனர் செல்வ குமாருடன் கே.ஆர்.விஜயன்(நினைவில் நின்றவை)
                பிறகு அவரே கதை வசனம் ஒளிப்பதிவு எல்லாம் செய்து உருவாக்கிய  “ யாதுமானவள்” என்ற குறும்படத்தை தன்னுடைய மடி கணினியில் காண்பித்தார். மிகவும் மனதை தொடுவாக இருந்த அதன் காட்சியமைப்பும், வசனங்களும் எல்லோரையும் அந்த கதையோடு ஒன்ற வைத்தது.  மேலும் அவர் ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்க்கான location  பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார்.
இடமிருந்து வலம் கெளசல்யா மேடத்தின் கணவர்(அஞ்சாநெஞ்சன்)  ,ராமலிங்கம் ஐயா(கருவாலி)
              வழக்கம்போல் கூட்டதை கலகலப்பாக்கிய திவானந்த சுவாமிகள் நோன்பு காரணமாக விடைபெற  நாங்களும் ஒவ்வோருவருடனும் பிரியா விடை பெற்றோம் மீண்டும் விரைவில் சந்திப்போம் என்ற உறுதியுடன்.

Comments

அட .. இன்னொரு சந்திப்பா..
அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸூ
லொக்கேஷன் பார்க்க வந்தவருடன் அக்கேஷனலாக ஒரு சந்திப்பு!!!!!!!!
Unknown said…
This comment has been removed by a blog administrator.
Chitra said…
really missed being there... :-(
Unknown said…
!* வேடந்தாங்கல் - கருன் *! said... 1
அட .. இன்னொரு சந்திப்பா..///அதிரடி தொடரும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.
Unknown said…
FOOD said...
தமிழ்மணத்தில் இணைத்து முதல் ஓட்டும் போட்டாச்சு.// நன்றி ஐயா. தமிழ் மணம் என்றால் இன்ட்லியா??
Unknown said…
சி.பி.செந்தில்குமார் said...
அடடா.. ஜஸ்ட் மிஸ்//
உங்களைதான் அதிகமாக மிஸ் பண்றேன் நண்பா. முதல் சந்திப்பில் பங்கேற்க முடியாததால்.
Unknown said…
சி.பி.செந்தில்குமார் said...
லொக்கேஷன் பார்க்க வந்தவருடன் அக்கேஷனலாக ஒரு சந்திப்பு!!!!!!!!//

எதுகை மோனையா???????? சூப்பர் நண்பா!!!!!!!!.
Unknown said…
FOOD said...
பதிவு சுவை பட உள்ளது. பகிர்விற்கு நன்றி.//
அவசர கோலத்தில் பதிவிட்டதால் நிறைய சுவையான விஷயங்கள் விடுபட்டுவிட்டன. நன்றி ஐயா.
Unknown said…
Chitra said... 9
really missed being there... :-(//

உங்களுடைய சிரிப்பை ஓரளவு கெளசல்யா மேடம் ஈடுசெய்தாலும் அந்த குறை இருக்கத்தான் செய்தது. (கட்டடம் இடியவில்லையே)
Unknown said…
"என் ராஜபாட்டை"- ராஜா said...
When next//
lot to be done.
ISR Selvakumar said…
முகமறியா நண்பனாக வந்தேன்.
அகம் நிறைந்த உறவினனாக விடைபெற்றேன்.

நெல்லை என் உறவுகளின் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறது.

மறக்கமுடியாத இனிய கணங்களைத் தந்தவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

ரூபினா - நெல்லையில் இருந்து நான் கேட்ட முதல் ஹலோவுக்கு சொந்தக்காரர். உடனே புறப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, சந்திப்பின் தித்திப்பை இழக்க மனமின்றி மேலும் சிலமணிநேரம் உடனிருந்து நிகழ்வை இனிமையாக்கியவர்.

சங்கரலிங்கம் - இவர் இல்லாமல் நெல்லைப்பதிவர்கள் இல்லை என்கிற அளவுக்கு மதிப்பும், மரியாதையும் சம்பாதித்திருப்பவர். தங்கை சித்ராசாலமன் இவரைப்பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் நெகிழ்வானவை.
(அடடா விஜயனை சாப்பிடச்சொல்லாமல் அனுப்பிவிட்டேனே என்ற அவரின் கவலையில் அவருடைய நேசமிகு மனதை அறிந்து கொள்ளலாம்)

அஞ்சாநெஞ்சன்:தங்கை கௌசல்யா - இவர்களை தனித்தனியாக குறிப்பிடவே முடியாது.
சார் என அழைத்தால் மிகத் தொலைவாக உணர்கிறேன். அண்ணா என்று அழைக்கிறேன் எனச்சொல்லி என்னை மனதளவில் அனைவருடனும் நெருங்க வைத்த தங்கை கௌசல்யா.
கையை கட்டிக் கொண்டே, தனது நகைச்சுவையால் எங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட அஞ்சா நெஞ்சன்.
இவர்கள் இருவரின் சமூக ஆர்வமும், அதை நோக்கிய பயணமும், உறுதியும் இலட்சியமும் நம் அனைவருக்குமே இருக்கவேண்டும் என எண்ணுகிறேன்.

சீனா - 1 மணிநேர சந்திப்புக்காக 3 மணி நேரம் பிரயாணம் செய்து, மதுரையில் இருந்து நெல்லை வந்து, வலைச்சரம்போன்றே இனிய உணர்வுச்சரங்களைத் தந்து என்னை பிரமிக்க வைத்தவர்.

சகாதேவன் - அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மகளை வழியனுப்பும் முன், எனக்காக வந்திருந்து காத்திருந்து என்னை கௌரவித்தவர்.

ராமலிங்கம் - இரவு வரை உடனிருந்து, பஸ் ஏற்றி, கை அசைத்து வழியனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் அதிகாலை ஃபோன் செய்து நலமாக வீடு சேர்ந்துவிட்டீர்களா என விசாரித்த பாசக்காரர்.

ஞானேந்திரன் - யானைக்குட்டி என்று பதிவு எழுதினாலும், அணில்குட்டி போல இலகுவான மனிதர்.

கே.ஆர்.விஜயன் - திரைச்சீலையை விலக்கியதும் முகம் வருடும் தென்றல்போல, எப்போது அவரை நோக்கினாலும் புன்னகை வீசி, என் நினைவில் நிற்பவர்.

திவானந்த சுவாமி - சந்திக்க இடம் தந்து, அன்புடன் இரவு உணவும் தந்து, நொடிக்கு நொடி நகைச்சுவை தந்து, கலகலப்பாக, என் கவனம் மொத்தத்தையும் பெற்றுக்கொண்டவர்.
(அடுத்த முறை பாக்கின்றி பார்க்க ஆவல்)
nellai ram said…
very nice !keep it k.r.vijayan
அருமையான சந்திப்பு :-)
மிகவும் அருமையான, மனதுக்கு இதமான, நட்பை வளர்க்க இந்த சந்திப்புகள் உதவுகிறது அல்லவா ரியலி சூப்பர்....!!!!
ஏ யப்பா சினிஃபீல்டும் நம்மை வாச் பண்ணுதுன்னு சிபி அடிக்கடி சொல்லுவான் உண்மைதான் போல...!!!!
அது சரி திவான் [[ஜன்னத் ஹோட்டல்]] மீன்கறி வறுவல் எல்லாம் தந்தாரா...??? அப்புறம் பீடா, பீடா ஹி ஹி....
போட்டோக்கள் எல்லாம் அருமையா இருக்கு மக்கா....!!!
தொடரட்டும் இம்மாதிரியான சந்திப்புக்கள்.....
ரூஃபினாவின் நம்பர் தந்த என்னை மறந்துவிட்டார் செல்வா..

ஓகே விஜயன் பகிர்வு அருமை.. நாம என்ன அவர் நன்றி சொல்லாட்டா தேஞ்சிடவா போறோம்..))))
என் மனதை மகிழ்வில் நிரப்பிய சந்திப்பு விஜயன், பதிவர் சந்திப்புகளில் " This is my place " என உணர்கிறேன். அனைவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி, இன்னும் மனதின் தித்திப்பு நீங்கவில்லை
நன்றி தேனம்மை, நான் சொல்கிறேன், இப்படி ஓர் அருமையான, சிம்பிளான மனிதரை அறிமுகம் செய்ததற்கு
அன்பின் விஜயன் - அருமை அருமை - பதிவர் சந்திப்பினை படங்களுடன் உரையாக்க்யது நன்று. செல்வாவின் மறுமொழி மகிழ்ச்சியினை அளித்தது .நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
நெல்லை ஒரு பதிவர் சந்திப்புக் களமாக மாறி வருகிறதே?கலக்குங்க!
ISR Selvakumar said…
தேனம்மை,
உங்கள் கருத்தில் spellகுற்றம் காண்கிறேன்.
நீங்கள் நம்பர் தரவில்லை...
நண்பர்கள் தந்திருக்கிறீர்கள்!

ரூஃபினா - எப்போதாவது சொதப்பினால், நான் இப்படித்தான், எதையாவது சொல்லி தப்பிப்பேன்.
ISR Selvakumar said…
சீனா,
நீங்கள் அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - எனச் சொன்னாலும், இத்தனை இல்லைகளை வைத்துக் கொண்டு, எத்தனையோ எல்லைகளை வலைச்சரம் மூலம் அறிமுகப்படுத்திவரும் உங்கள் முயற்சிக்கு வந்தனங்கள்.

என்னைப் பார்க்க தூரம் கடந்து, நேரம் பார்க்காமல் வந்தமைக்கு இன்னும் ஒரு முறை வணக்கம்!
நெல்லை பதிவர் சந்திப்புக்கும் பிரபலமாகிவ்ருகிறது.வாழ்த்துக்கள்.
Kousalya Raj said…
விஜயன் உங்களின் இந்த பகிர்வு இன்னும் அதிகமாக பதிவுலக உறவுகளை நினைக்கத் தூண்டுகிறது...! நன்றிகள்

இது போன்ற சந்திப்புகள் மனிதர்களிடையே நேசத்தை அதிகமாக வளர்க்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்...இந்த வாய்ப்பு கிடைக்கபெற்ற நாங்கள் மிக மிக கொடுத்துவைத்தவர்கள்.

செல்வா அண்ணா நெல்லை பதிவர்களை சந்திக்கணும் என்று விருப்பம் தெரிவித்ததும் சங்கரலிங்கம் அண்ணா, ரூபினா அக்கா, நான் மூன்று பேரும் மாத்தி மாத்தி போன் செய்து நம்முடன் தொடர்பில் இருப்பவர்கள் யார்? அவர்களை உடனே தொடர்பு கொண்டு வரவைக்கனுமே என்று ஒரே பரபரப்பாக ஒருநாள் முழுதும் இருந்தோம்...எங்கள் எதிர்பார்ப்பை மீறி தொலைவில் இருந்து சீனா ஐயா வந்தது மிக மகிழ்ச்சியை கொடுத்தது.

எப்படியும் குறைந்தது பத்து நண்பர்களையாவது வர வைக்கவேண்டும் என்று ஐயா தனி மெயில் அனுப்பி அலர்ட் பண்ணினார். எல்லாம் வேகமாக ஏற்பாடு செய்து, சந்திப்பும் மிக இனிமையாக வாழ்வில் அடிக்கடி நினைத்து பார்க்க கூடிய அளவில் நடந்து முடிந்தது.

செல்வா அண்ணா உங்களை சந்தித்து பேசிய அந்த நிமிடங்கள் மிக அற்புத கணங்கள் !! பல விசயங்கள் பகிர்தோம் (நான்தான் அதிகமா பேசினேன்...!) :)) இனியும் தொடரும், நம் சமூக பங்களிப்பு குறித்தான பேச்சுக்கள்.....

வந்திருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இங்கே என் மனமார்ந்த நன்றிகளை சொல்லிகொள்கிறேன்
Unknown said…
MANO நாஞ்சில் மனோ said...//
உம்முடைய இடம் காலியாக இருக்கிறதே. என்ன செய்யலாம்.
Unknown said…
Kousalya said..// அருமையான கருத்துக்களுக்கு நன்றி.
Unknown said…
@ r.selvakkumar // உங்களுடைய பின்னூட்டமே ஒரு பதிவாக போடும் அளவிற்க்கு அருமையாக இருக்கிறது. உங்களை சந்தித்ததில் நாங்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
Unknown said…
@ nellai ram // உங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.
Unknown said…
@ நாய்க்குட்டி மனசு // இந்த பெயரில் பல கமெண்டுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அது உங்களுடையதுதான் என்பது இப்போதுதான் தெரிகிறது. ஒவ்வொரு சந்திப்பின் போதும் நிறைய புது விஷயங்கள் கிடைக்கிறது. நன்றி மேடம்.
Unknown said…
MANO நாஞ்சில் மனோ said...
அது சரி திவான் [[ஜன்னத் ஹோட்டல்]] மீன்கறி வறுவல் எல்லாம் தந்தாரா...??? அப்புறம் பீடா, பீடா ஹி ஹி....//

மனோ இல்லாமல் மீன் சாப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று மறுத்துவிட்டார் திவானந்த சுவாமிகள்.இனி நீங்க மனசு வைத்தால்தான் உண்டு.
Unknown said…
@ தேனம்மை லெக்ஷ்மணன்// செல்வா சாரை பார்த்தவுடன் எங்கோ முன்பு பார்த்த ஒரு உணர்வு இருந்தது. ஆழமாக யோசித்ததில் உங்களுடைய முகநூலில்தான் பார்த்ததை செல்வா சாரிடமும் நினைவு கூர்ந்தேன்.
Unknown said…
@ cheena (சீனா)// ஐயா உங்களைப்போன்ற நட்சத்திர பதிவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
Unknown said…
@ சென்னை பித்தன் //
உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Unknown said…
@ ராம்ஜி_யாஹூ // உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
@ஷர்புதீன்//
உங்களுடைய முதல் வருகைக்கும் சிரிப்பிற்க்கும் நன்றி.
Unknown said…
@ இராஜராஜேஸ்வரி // உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
kobiraj said…
வலையுலகில் புதியவனான எனக்கு வலைப்பதிவாளர்களின் அறிமுகம் இந்த பதிவின் மூலமாக கிடைத்துள்ளது .நன்றிகள்
kobiraj said…
http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html
மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல.
ISR Selvakumar said…
தங்கை கௌசல்யா,
அடுத்த முறை சந்திக்கும்போது ஐந்து நிமிடத்துக்கொரு முறை தண்ணீர் குடிக்கலாம்.
(அந்த இடைவெளியில் நான் பேசிவிடத்தான் இந்த ஐடியா!)
Unknown said…
@ kobiraj : உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்று.
Unknown said…
@ r.selvakkumar :

இதற்க்கு சகோதரி கெளசல்யா பதில் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...