Skip to main content

மருந்தால் தீராதது மந்திரத்தில் தீருமா?????????????

             பகுத்தறிவு வாதிகள் என்றால் எதையும் பகுத்து அறிந்து பிறகுதான் நம்புகிறவர்கள்.  ஆனால் நம்பிக்கை சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் சான்றுகள் இருப்பதில்லை. கடவுளை இங்கே வரச்சொல் நான் பார்க்கிறேன் என்றால் அது நடக்காத காரியம் தானே. மூட நம்பிக்கைகள் சிலரின் வாழ்வை வளமாக்கவும் பலரின் வாழ்வை குலைக்கவும் செய்கிறது என்பதும் உண்மையே.

                பகுத்தறிவுவாதி அறிவியல்வாதிகளைப்போல் சோதனைக்கூடம் அமைத்து கருவிகள் கொண்டு சோதனைகள் செய்யாமல் இருக்கலாம்.      ஆனால் இவர்களின் அடிப்படை மனப்பான்மை ஒன்றேயாகும் எதையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுதல். . அறிவியலுக்கு இன, நிற,மொழி,மத, வேற்றுமைகளோ நாட்டுப்பற்று என்ற வேற்றுமைகளோ அவர்கள் பார்த்ததில்லை. விஞ்ஞான அறிவு எந்த ஒரு நாட்டுக்கும் ஏக போக உரிமையன்று. இன்று விஞ்ஞானத்தை உலகம் முழுவதற்க்கும் சொந்தமாக்கினர். அறிவியல்வாதி இயற்கை மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தை ஆற்றலை,உண்மையை கண்டறிய இயற்கையை குறுக்கு விசாரணை செய்தான் பகுத்தான் புதியவற்றை படைத்தான்.

               அதற்க்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம்.  அரசியல்வாதிகள், மன்னர்கள்,மதபோதகர்கள் இவர்களை படுத்திய கொடுமைகள் கணக்கிலடங்கா. புருனோவை உயிருடன் பொசுக்கி கொன்றனர். ஹைப்போஷியா அம்மையாரை உடலை பிய்த்து சாகடித்தனர், கலிலியோவை ஒவ்வொரு அணுவாக சாகடித்து இறுதியில் உயிரை குடித்தனர். இவ்வளவு கஷ்டப்பட்டுதான் ஒவ்வொரு விஷயத்தையும் கண்டுபிடித்தனர்


                   குழந்தையை கொல்லும் டிப்தீரியா என்ற நோய்க்கு மருந்தினைக்கண்டவர் Dr.ரோக்ஸ். இவர் தனக்கு அளிக்கப்பட்ட 4000 பவுன்களை தன் ஏழ்மையான நிலையிலும் தான் பணியாற்றிய நிறுவனத்திற்கே நன்கொடையாக் கொடுத்தார். இன்னும் எண்ணிலடங்கா மருந்துகளையும், புதிய கண்டுபிடிப்புகளை இந்த மானுட குலத்திற்க்கு தந்ததை மறுக்கவும் மறைக்கவும் முடியாது என்பதுதான் அவன் கூற்று அது எல்லாம் சரிதான். அதனால் நாம் விஞ்ஞானிகளை குறை கூறலாகாது.


        அடுத்து பகுத்தறிவுவாதிகளைப்ப்பார்ப்போம். இவர்கள் மக்களின் இறை நம்பிக்கையையும், முட நம்பிக்கைகளையும் களைவதாக கூறி இன்று ஆசியாவிலேயே தொடமுடியாத அளவிற்க்கு பணம் சேர்த்துவிட்ட போலி பகுத்தறிவுவாதிகளை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். இவர்கள் மக்களிடம் இறைவன் மற்றும் அது சம்பந்தப்பட்ட எல்ல விஷயங்களும் மூட நம்பிக்கைதான் என்பதை மிகவும் அழகாக நம்பும் படி எடுத்துரைப்பதில் வல்லவர்கள். ஆனால் அவர் மனைவியே கூட கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதை நாம் அன்றாட வாழ்வில் காணமுடிகிறது.  அதன் பெயரில் இன்றய பகுத்தறிவுவாதிகள் செய்யும் பித்தலாட்டங்கள் அதைவிட மோசம்.   இறைவனை மறுத்தவர்களும் கோடிகளில் புரள்கிறார்கள், இறைவனை சொல்லி பணம் கறப்பவர்களும் கோடிகளில் புரள்கிறார்கள்.


              எனக்கும் அமானுஷ்யம்,ராகுகாலம், எமகண்டம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைதான்.  அதுவும் இன்றய ஆன்மீகவாதிகளின் போக்கை பார்க்கும்போது பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான்  சால சிறந்தது என்று தோன்றாமல் இல்லை. பக்தி என்ற பெயரில் அவ்வளவு ஆபாசங்கள் நடந்தேறுகின்றன. இதில் மருந்து வைத்தல் (வசியம் பண்ணுவதற்க்காம்)செய்வினை செய்தல்  என்று ஒரு கோஷ்டியினர் மருந்தை எடுக்கிறேன் என்று இன்னொரு தரப்பும். மருந்து எடுத்தார்கள் பார்த்தேன் அதில் மயிர் முளைத்து இருந்தது, அப்படி இப்படி என்று பில்டப் வேறு .இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கையோ உடன்பாடோ இருந்ததில்லை. அது சாத்தியம் என்றால் தொழிலில் இவ்வளவு போட்டி எதற்க்கு பேசாமல் ஒரு மந்திரவாதியை வைத்து செய்வினை வைத்தால் போதுமே என்று கூட நினைத்ததுண்டு. இந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு சம்பவம் நேர்ந்தது.


                   திடீரென்று என் கை விரல் நுனியிலும் கால் விரல் நுனியிலும் ஒரு புள்ளி போன்று ஒரு புண் வரும் பிறகு பழுத்துவீங்கி செப்டிக்காகி  பெரும் தொந்திரவாக இருந்தது. எனக்கு தெரிந்த எல்லா சிறப்பு தோல்மருத்துவர்களையும் பார்த்தேன்.  முதல் இரண்டு சிட்டிங் வரை என் நோயை கேட்க அவர்களுக்கு நேரம்இல்லை. மனதும் இல்லை.அனைவரும் படு பிஸியாக் இருந்தனர். ஆனால் பிரச்சனை விரலில் என்றாலும் வழக்கம் போல் தலைக்கு ஷாம்பு முதல் சோப்பு, கிரீம், லோசன்( அதன் விலைகளைப்பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை)  என அனைத்து அழகு சாதன பொருட்களையும் தந்ததனர். நானும் காலை முதல் மாலை வரை படுசிரத்தையாக இதை உபயோகிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருந்தேன். ( அவர் சொன்னபடி செய்தால்,அப்படிதான் செய்ய முடியும் எனவே வேறு வேலைகள் செய்ய சாத்தியமில்லாமல் போனது) . ஆனாலும் ஒரு முன்னேற்றமும் இல்லை. மருந்த உண்ட 15 நாட்கள் ஒன்றும் இருக்காது ஆனால் மறுபடியும் பிரச்சனை ஆரம்பித்துவிடும். இப்படியே ஒரு வருடம் ஓடியது ஒரளவு எல்லா மருத்துவர்களும் என்னை கண்டவுடன் அறியும் அளவிற்க்கு அவரின் வாடிக்கையாளராகிவிட்டேன்( அதற்க்காக கொடுத்த விலை மிக மிக அதிகம்). ஒரளவு மருந்துகளும் எனக்கு அத்துபடி ஆனது. ஆனால் என் பிரச்சனை எப்படி இருந்ததோ அப்படியே ஒரு இம்மியும் மாற்றமில்லை. நானும் செய்வதறியாமல் திகைத்தேன். அப்பொழுதான் என் நண்பன் வந்து இவ்வளவு நாள் நோய்க்கு பார்த்தாய் இனி ஒரு தடவை பேய்க்கும் பார்ப்போம் என்றான் (????????!!!!!!!) .

                  நான் முதலில் பயந்தேன்..... மறுத்தேன்............ஆனாலும் இன்னும் பலரின் வற்புறுத்தலால் சம்மதித்தேன். மறுநாள் கேரளாவில் உள்ள ஒரு “அம்மா” விடம் சென்றோம். அவர்கள் முன் இருந்தேன். அவர்கள் குடும்பம் மற்றும்தொழிலைப்பற்றி நிறைய விஷயம் சொன்னார்கள் அதெல்லாம் எனக்கு மனதில் ஏறவே இல்லை . என் மனது என் நோயைப்பற்றியதாகவே இருந்ததால் அதை மட்டுமே எதிர்பார்த்தேன். அவர்களும் யாரோ எனக்கு ”கைவிஷம்” (அதென்ன கைவிஷம் கால் விஷம்???????)வைத்திருப்பதாக சொன்னார்கள். நான் முகத்தை மிகவும் சீரியசாக வைத்திருந்தாலும் மனதுக்குள் சிரித்தேன். நான் என் வீட்டைத்தவிர எங்கும் உண்பதே இல்லை. வேறு மாதிரி எந்த பிரச்சனையும் எனக்கில்லை. எனக்கு யார் தருவார்கள் என்று இறுமாப்புடன் இருந்தது என் மனது. சரி நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். ஒரு நாள் குறித்து ஒரு ஹொமம் செய்ய வேண்டும் என்றார்கள் அதையும் செய்தேன்.  பிறகு ஒரு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள் ஒன்றும் சாப்பிடாமல் வெறும்வயிற்றுடன் வரவேண்டும்( வெறும் வயிறுமட்டும் தனியா எப்படி வரும்ன்னு அதிகபிரசங்கித்தனமா கேட்கக்கூடாது). நான் முந்தைய நாள் இரவே ஒன்றும் சாப்பிடவில்லை. என்னதான் நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என்றது என் மனம். சொன்னபடி சென்றேன் ஒரு கப்பில் டீ போன்ற ஒரு திரவத்தை குடிக்க சொன்னார்கள். குடித்தால் வாந்தி வரும் அதில் எல்லா ”ஐட்டமும்” போய்விடும் என்றார்கள்.  நானும் அதை முகர்ந்து பார்த்தேன் ஒரு கசப்பான வாடை வந்தது ரொம்ப கசப்பாக இருக்கும் என நினைத்து மடக் ... மடக்.... என்று குடித்துவைத்தேன் ஆனால் கசக்கவில்லை.  15 நிமிடம் ஆகியும் வாந்தி வரும் ஒரு அறிகுறியும் இல்லை.( உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தால் வந்தால் வாந்தி வரப்போகிறது என்று அறிகுறியாம்).  இரண்டாவதாக 1 டம்ளர் குடிக்க கொடுத்தார்கள். குடித்தேன். சிறிது நேரத்தில் மிகவும் மோசமான நாற்றத்துடன்வெளுத்து வாங்கியது வாந்தி.  உண்டாகியிருக்கும் பெண்கள் கூட தோற்றுவிடுவார்கள் அப்படி ஒரு வாந்தி  அது என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு வழியாக வாந்தியும் ஓய்ந்தது கூடவே நானும். அந்த அம்மாவின் சீடன் நான் எடுத்த வாந்தியை விசிட் செய்தான்( இப்போ உங்களுக்கும் வாந்தி வருது தானே.........).  எதோ திரைந்து போனமாதிரி ஒரு ஐட்டம் இருந்தது (இதுவும் எனக்கு ஆச்சர்யம் தான்) முட்டையில் தந்திருக்கிறார்கள் என்று ஒரு சர்டிபிகேட்டையும் தந்தான்.  இனி ஒரு பிரச்சனையும் இருக்காது நீங்கள் போகலாம் என்றார்கள்.
                   
                       அதிலிருந்து 2 நாட்கள் கழிந்து நல்ல மாற்றத்தை உணர்ந்தேன்.  15 நாட்களில் முற்றிலும் குணம் ஆனது. இப்போழுது ஒரு வருடம் தாண்டிவிட்டது ஒரு பிரச்சனையும் இல்லை.  அதோடு நான் அங்கு போவதையும் நிறுத்திவிட்டேன்.  இதை என்னால் நம்பவும் முடியவில்லை. நானே சாட்சியாக இருப்பதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 


             இந்த பதிவு மூடபழக்கவழக்கதிற்க்கு வக்காலத்து வாங்கும் பதிவு அல்ல. என் நோக்கமும் அது அல்ல. அதனால் தான் அவர்கள் பற்றிய எந்த தகவலும் நான் சொல்லவில்லை. இது என்னுடைய ஒரு அனுபவம் அதை பதிவு பண்ணவேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான்.


















































































































Comments

புரியாத புதிர்தான்!
அனுபவப் பகிர்வு திகைக்க வைக்கிறது.
அனுபவத்தில் அறிந்த சிலவற்றை விளக்க இயலாது!அதற்கு நாம் மட்டுமே சாட்சி.
மருத்துவத்தால் குணமாக்க முடியாத நோய்களை,
சில வேளைகளில் புராதன நாட்டு வைத்தியம் மூலம் குணமாக்கலாம் என்பதற்கு உங்களின் அனுபவப் பதிவே சாட்சியாக இருக்கிறது.
Unknown said…
நல்ல அனுபவ பதிவு நண்பரே, பகிர்ந்தமைக்கு நன்றி...
நல்ல அனுபவம்!
அனுபவபட்டவர்களின் நம்பிக்கை!!!நமக்கு நடக்காதவரை நம்பிக்கை குறைவுதானே?.நல்ல அனுபவம் விஜி!
ஆமினா said…
//கடவுளை இங்கே வரச்சொல் நான் பார்க்கிறேன் என்றால் அது நடக்காத காரியம் தானே. ///

உண்மை
ஆமினா said…
//அது சாத்தியம் என்றால் தொழிலில் இவ்வளவு போட்டி எதற்க்கு பேசாமல் ஒரு மந்திரவாதியை வைத்து செய்வினை வைத்தால் போதுமே என்று கூட நினைத்ததுண்டு.///

நானும் நினைத்ததுண்டு

இப்ப கூட சமீபகாலமா என் போஸ்ட் எல்லாமே நொடியில பாப்புலர் ஆகுறதுக்கு சூனியம் தகடு எதாவது வைக்கலாமான்னு பாக்குறேன் .... ஹி...ஹி...ஹி....


இறைவன் எல்லாம் அறிந்தவன்
arasan said…
வியப்பாக இருக்கின்றது சார்
மாலதி said…
அனுபவப் பகிர்வு திகைக்க வைக்கிறது
Majid Hussain said…
I agree with you. I undergone enormous difficulties which perplexed doctors for being to find out what is wrong with me as i was having regular digestion, acidity, ulcer problems for the past ten years despite my food restrictions, clean life etc. Finally I tried your method and it all vanished within a week.

Now I too belive there is black magic in this world. When lakhs and lakhs rupees not solved my problem, just 20 Rs. Dakshina solved my problems.
Anand Kumar said…
வசிய மருந்து வைத்தல் என்பது பல குடும்பங்களில் நடக்கின்றது. எனக்கு தெரிந்து சில பெண்கள் கணவனுக்கு வசிய மருந்து வைத்துள்ளனர்.நானும் வசிய மருந்தால் பாதிக்கபட்டவன். எனக்கு வலது கண் வீங்கி மாத கணக்கில் சிகிச்சை பெற வேண்டி இருந்தது. கிட்னி stone உருவானது. வசிய மருந்தை ஊதி எடுத்து முறிவு மருந்து தருகிறார்கள். மேலும் வசிய மருந்து பற்றி தெரிந்து கொள்ள seivinaivasiyam.blogspot.com படித்து தெரிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...