Skip to main content

நெல்லையில் ஒரு மினி பதிவர் சந்திப்பு.10/11/2011


                    ழக்கம் போல் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு மினி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் துபாய் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கெளரவிக்க இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அழைப்பு வந்தது.  வேலைகள் பல இருந்தாலும் போகவேண்டும் என்ற மனம் இருந்ததால் அதற்க்கான வழியை உருவாக்கிவிட்டு நெல்லையை சென்றடைந்தேன்.

               நான் போகும் போதே வழக்கமான, தலைவர் திவான் அவர்களின் ஹோட்டல் ஜன்னத்தில் குளு குளு அறையில் ஆபீசரும் கெளசல்யா மேடமும் மற்றும் துபாய் ராஜாவும் அவர் துணைவியார் ரேவதியும் வந்திருந்தனர்.  அடுத்ததாக ரூபினா மேடமும் வர சந்திப்பு களை கட்ட ஆரம்பித்தது.  ரூபினா மேடம் சென்னையில் தேனம்மை மேடத்தையும்  டைரக்டர் செல்வா சாரையும் சந்தித்ததைப்பற்றி கூறி புகைப்படங்களையும் காண்பித்தார்கள்.  மேலும் ராமலிங்கம், ஞானேந்திரம் மற்றும் வெடிவால் ஐயாவும் வந்து சேர சந்திப்பு சமோசா தேநீருடன் இனிதே ஆரம்பித்தது.  பரஸ்பர நலம் விசாரித்தலுடன் ஆரம்பித்த கூட்டம் .

                       தனிடையில் ஆபீசர் சார் கடைசியாக எழுதிய பதிவில் அப்பளம் கலப்பட மேட்டரை எழுதியிருந்தாங்க. ஆனா என்ன கலப்படம்னு அதில எழுதாம இருந்தாலஅது தெரியாமல் என் தலையே வெடித்துவிடும் போல் இருந்ததால் அதை கேட்டுவிட்டேன்.(என்ன கிழங்குமாவு சேர்த்திருப்பாங்க என்று துபாய் ராஜா சொன்னார்) அதற்க்கு பதிலளித்த ஆபீசர் அப்பளம் பொறிக்கும் போது வரும் மஞ்சள் நிறத்திற்க்காக ஒரு கெமிகல் ( அதன் பெயரெல்லாம் ஞாபகத்தில் நிற்பதகாக இருந்தால் நான் அப்துல் கலாம் ஆகியிருக்க மாட்டேனா!!!) சேர்த்திருந்ததாக சொன்னார்கள்.  இதனிடையே அவரவர் ப்ளாக்கின்(புரியாத) பெயர் குறித்து பேச்சு வந்தது. அப்பொழுது “நாய் குட்டி மனசு” ரூபினா மேடம் சொன்னாங்க நாய்குட்டி ஒரு ஆளை பிடித்துவிட்டால் வளைய வளைய வருமாம்.(அதான் நாய் குட்டி என்று சொல்லிவிட்டேனே பிறகு என்ன யோசனை!!!!!!!!!)அதனால் தான் அந்த பெயராம்.  சரி அடுத்ததாக ”யானைக்குட்டி “(ப்ளாக் பெயரப்பா!!!!)ஞானேந்திரன் சொன்னார் அவரைப்பார்த்தும் அவர் மனைவி சொன்ன முதல் வார்த்தை அதுதானாம்.அதனால் அதையே பெயராக்கிவிட்டாராம் ஆனாலும் மனிதர் நல்ல ந்கைச்சுவை உணர்வு உள்ளவர்தான் பேச்சில் வெளுத்து வாங்குகிறார். ரொம்ப பாசக்காரர் போல. இதனிடையே ஆபீசர் சொன்ன சில் டிப்ஸ் இதோ:

”யானைக்குட்டி” ஞானேந்திரன் அவர்கள்
*   ளநீரை வெறும் வயிற்றில் குடிக்க கூடாதாம் . ஏதேனும் உண்டபின்          அருந்தினால் அமிர்தமாம்.

*    கார்பைட் வைத்து பழுக்க வைத்த பழங்களை 24 மணிநேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் (ஆன் பண்ணி!!!!!!) அந்த கேஸ் வெளியேறி விடுமாம். (இல்லையென்றால் தண்ணீரில்)


              இதனிடையே திவான் ஐயாவும் உள்ளே வர சந்திப்பு களைகட்டியது. அவர் சிரிக்காமல் மற்றவர்களை பெண்ட் எடுப்பதில் வல்லவர். தன் பணியை அவரும் செவ்வனே செய்து பதிவர்கள் சந்திப்பை இனிதாக முடிந்தது வைத்தார்.

Comments

யோவ் என்ன வெறும் சமோசாதானா, திவானந்தா பிரியாணி தரல்லியாக்கும் ம்ஹும்....
இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க கூடாதாம் . ஏதேனும் உண்டபின் அருந்தினால் அமிர்தமாம்.//

ஆஹா என்னை காலையிலேயே ரெண்டு இளநீரை குடிக்கவச்சு சுகர் டெஸ்ட் பண்ண கூட்டிட்டு போயிட்டு, சுகர் கூடுதலா இருக்குன்னு சொல்லி தொலைச்சானே டாக்டர் ம்ம்ம்ம்...

இளநி மேட்டர் சூப்பர், புதுசும் கூட...!!!
ஆஹா ஆபீசர் பெல்ட்டோட டைட்டா உக்காந்துருக்கார் பாருங்க...
ரூஃபினா மேடத்தின் நாய்க்குட்டி பெயருக்கு விளக்கம் சொன்னது சூப்பர்...!!!
Unknown said…
உமக்கு சுகர் இருக்காது ஓய். டாக்டரை மாற்றும்.
ஆமா மைக்கெல்லாம் எங்கே....???
Unknown said…
பிரியாணி எல்லாம் நீர் வந்தால் மட்டும் தானாம்.
அருமையான பதிவர் சந்திப்பு, மனசும் லேசாகி இருக்கும் இல்லையா..? தொடர வாழ்த்துக்கள்...!!!
கே. ஆர்.விஜயன் said...
உமக்கு சுகர் இருக்காது ஓய். டாக்டரை மாற்றும்.//

ஆமாய்யா அடுத்த தடவை ஊர் வந்ததும் மாட்டனும் ச்சே ச்சீ மாற்றணும்...
கே. ஆர்.விஜயன் said...
பிரியாணி எல்லாம் நீர் வந்தால் மட்டும் தானாம்.//

அப்போ இனி நான் வரும்போது பர்ஸ் கொண்டு வரமாட்டேன் ஹி ஹி...
Unknown said…
மைக் வைக்க இதென்ன சட்ட மன்றமா... சட்டையை கிழிக்க ஆர்வமாக இருக்கிறீர் போல.
Unknown said…
உமக்குதான் பிரியாணி பிடிக்காதே.டவர் மெஸ்ஸில் மீன்குழம்பு ரெடி
கே. ஆர்.விஜயன் said...
மைக் வைக்க இதென்ன சட்ட மன்றமா... சட்டையை கிழிக்க ஆர்வமாக இருக்கிறீர் போல.//

சட்டையை கிளிச்சாதான் அது பதிவர் சந்திப்புன்னு சிபி அடிக்கடி சொல்லுவான் ஹி ஹி...
கே. ஆர்.விஜயன் said...
உமக்குதான் பிரியாணி பிடிக்காதே.டவர் மெஸ்ஸில் மீன்குழம்பு ரெடி//

ஆஹா ஞயாபக படுத்திட்டீரே, கூட அந்த ஊறுகாயும் சூப்பர்ப்....!!!
Unknown said…
அது வேற .... இது வேற............ நீர் ஒரு கலக்கல் பதிவு ரெடி பண்றதா தகவல் வந்திருக்கு சரி தானா?
கவுசல்யா மேடம் போட்டாதான் போடமுடியாம இருக்கேன், ஆபீசர் நாலு போட்டாதான் தந்தார், இப்போ உங்க பிளாக்ல ரெண்டு போட்டோ எடுத்துட்டேன், இன்னும் போட்டோ இருந்தா அனுப்புங்க திங்கள்கிழமை காமெடி கும்மியை கலக்கிரலாம்...!!!
கார்பைட் பழங்களை ஏமாற்ற குளிர் சாதன பெட்டியில் வைப்பது நல்ல ஐடியா. நான் 'பள பள மாம்பலம்' னு ஒரு போஸ்ட் போட்டிருக்கேன் பாருங்கள்
எனக்கு அழைப்பு வந்தது .. ஆனால வேலை பளு காரணாமாக வர இயலவில்லை .. நல்ல படியாக முடிந்ததில் சந்தோசம் ..!!
Anonymous said…
யானைக்குட்டி, நாய்க்குட்டி பதிவர்கள் உட்பட அனைத்து நெல்லை பதிவர்களுக்கும் வாழ்த்துகள்

- இப்படிக்கு சிங்கக்குட்டி.
Unknown said…
rufina rajkumar : கண்டிப்பாக படிக்கிறேன் மேடம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
!* வேடந்தாங்கல் - கருன் *!: நன்றி சார்.
Unknown said…
இம்சைஅரசன் பாபு: ஆமா. ஆபீசர் சாரும் சொன்னாங்க உங்களுக்கு மேசேஜ் கொடுத்ததாக. நன்றி சார்.
Unknown said…
! சிவகுமார் !: சிங்ககுட்டிக்கு என் மனமார்ந்த நன்றி.
Unknown said…
FOOD said... : அழைத்ததற்க்கும், சிறப்பான உபசரிபிற்க்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Unknown said…
வெளங்காதவன் : வாங்க தல எப்படி நலமா??
வாழ்த்துக்கள் விஜயன்.
இதுபோனற சந்திப்புகளில் எங்களையும் அழைக்கலாமே>>பெரிய அளவில் ஏற்பாடு பண்ணுங்க ,வருகிறோம்!!அருமையான தகவல்கள்!பகிர்வு சூப்பர் விஜி
என் மன வானில்: அன்புடன் உங்களை வரவேற்க்கிறோம்.
அருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.


சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.


அரைநாள் ஒதுக்கி நெடுந்தூரம் பயணம் செய்து ஆர்வத்துடன் கலந்து கொண்டதற்கும், பகிர்விற்கும் நன்றி விஜயன் சார்.
மன்னிக்கவும் மிகவும் தாமதமான ,
அன்பு கலந்த நெகிழ்வான
பணிவான வணக்கம் .
மதுரை(தாய் வீடு ) வரை சென்று வந்தேன்.
அதான் தாமதம் .
என்ன சார் ....!!! இப்படி...கலக்கல் .
என்னை பற்றி ....என் புகைப்படம்
பற்றி ..தங்களின் வார்த்தைகள் ...
என்ன சொல்ல .....
என் இதயம் நெகிந்த ..நெஞ்சம் மகிழ்ந்த ..
நன்றிகள் ..
Unknown said…
அண்ணே அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
nice to read... ithu maathiru naanum santhikka vendum ena aasaippadugiren... please read my tamil kavithaigal www.rishvan.com

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...