வழக்கம் போல் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு மினி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் துபாய் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கெளரவிக்க இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. வேலைகள் பல இருந்தாலும் போகவேண்டும் என்ற மனம் இருந்ததால் அதற்க்கான வழியை உருவாக்கிவிட்டு நெல்லையை சென்றடைந்தேன்.
நான் போகும் போதே வழக்கமான, தலைவர் திவான் அவர்களின் ஹோட்டல் ஜன்னத்தில் குளு குளு அறையில் ஆபீசரும் கெளசல்யா மேடமும் மற்றும் துபாய் ராஜாவும் அவர் துணைவியார் ரேவதியும் வந்திருந்தனர். அடுத்ததாக ரூபினா மேடமும் வர சந்திப்பு களை கட்ட ஆரம்பித்தது. ரூபினா மேடம் சென்னையில் தேனம்மை மேடத்தையும் டைரக்டர் செல்வா சாரையும் சந்தித்ததைப்பற்றி கூறி புகைப்படங்களையும் காண்பித்தார்கள். மேலும் ராமலிங்கம், ஞானேந்திரம் மற்றும் வெடிவால் ஐயாவும் வந்து சேர சந்திப்பு சமோசா தேநீருடன் இனிதே ஆரம்பித்தது. பரஸ்பர நலம் விசாரித்தலுடன் ஆரம்பித்த கூட்டம் .
இதனிடையில் ஆபீசர் சார் கடைசியாக எழுதிய பதிவில் அப்பளம் கலப்பட மேட்டரை எழுதியிருந்தாங்க. ஆனா என்ன கலப்படம்னு அதில எழுதாம இருந்தாலஅது தெரியாமல் என் தலையே வெடித்துவிடும் போல் இருந்ததால் அதை கேட்டுவிட்டேன்.(என்ன கிழங்குமாவு சேர்த்திருப்பாங்க என்று துபாய் ராஜா சொன்னார்) அதற்க்கு பதிலளித்த ஆபீசர் அப்பளம் பொறிக்கும் போது வரும் மஞ்சள் நிறத்திற்க்காக ஒரு கெமிகல் ( அதன் பெயரெல்லாம் ஞாபகத்தில் நிற்பதகாக இருந்தால் நான் அப்துல் கலாம் ஆகியிருக்க மாட்டேனா!!!) சேர்த்திருந்ததாக சொன்னார்கள். இதனிடையே அவரவர் ப்ளாக்கின்(புரியாத) பெயர் குறித்து பேச்சு வந்தது. அப்பொழுது “நாய் குட்டி மனசு” ரூபினா மேடம் சொன்னாங்க நாய்குட்டி ஒரு ஆளை பிடித்துவிட்டால் வளைய வளைய வருமாம்.(அதான் நாய் குட்டி என்று சொல்லிவிட்டேனே பிறகு என்ன யோசனை!!!!!!!!!)அதனால் தான் அந்த பெயராம். சரி அடுத்ததாக ”யானைக்குட்டி “(ப்ளாக் பெயரப்பா!!!!)ஞானேந்திரன் சொன்னார் அவரைப்பார்த்தும் அவர் மனைவி சொன்ன முதல் வார்த்தை அதுதானாம்.அதனால் அதையே பெயராக்கிவிட்டாராம் ஆனாலும் மனிதர் நல்ல ந்கைச்சுவை உணர்வு உள்ளவர்தான் பேச்சில் வெளுத்து வாங்குகிறார். ரொம்ப பாசக்காரர் போல. இதனிடையே ஆபீசர் சொன்ன சில் டிப்ஸ் இதோ:
”யானைக்குட்டி” ஞானேந்திரன் அவர்கள் |
* கார்பைட் வைத்து பழுக்க வைத்த பழங்களை 24 மணிநேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் (ஆன் பண்ணி!!!!!!) அந்த கேஸ் வெளியேறி விடுமாம். (இல்லையென்றால் தண்ணீரில்)
இதனிடையே திவான் ஐயாவும் உள்ளே வர சந்திப்பு களைகட்டியது. அவர் சிரிக்காமல் மற்றவர்களை பெண்ட் எடுப்பதில் வல்லவர். தன் பணியை அவரும் செவ்வனே செய்து பதிவர்கள் சந்திப்பை இனிதாக முடிந்தது வைத்தார்.
Comments
ஆஹா என்னை காலையிலேயே ரெண்டு இளநீரை குடிக்கவச்சு சுகர் டெஸ்ட் பண்ண கூட்டிட்டு போயிட்டு, சுகர் கூடுதலா இருக்குன்னு சொல்லி தொலைச்சானே டாக்டர் ம்ம்ம்ம்...
இளநி மேட்டர் சூப்பர், புதுசும் கூட...!!!
உமக்கு சுகர் இருக்காது ஓய். டாக்டரை மாற்றும்.//
ஆமாய்யா அடுத்த தடவை ஊர் வந்ததும் மாட்டனும் ச்சே ச்சீ மாற்றணும்...
பிரியாணி எல்லாம் நீர் வந்தால் மட்டும் தானாம்.//
அப்போ இனி நான் வரும்போது பர்ஸ் கொண்டு வரமாட்டேன் ஹி ஹி...
மைக் வைக்க இதென்ன சட்ட மன்றமா... சட்டையை கிழிக்க ஆர்வமாக இருக்கிறீர் போல.//
சட்டையை கிளிச்சாதான் அது பதிவர் சந்திப்புன்னு சிபி அடிக்கடி சொல்லுவான் ஹி ஹி...
உமக்குதான் பிரியாணி பிடிக்காதே.டவர் மெஸ்ஸில் மீன்குழம்பு ரெடி//
ஆஹா ஞயாபக படுத்திட்டீரே, கூட அந்த ஊறுகாயும் சூப்பர்ப்....!!!
- இப்படிக்கு சிங்கக்குட்டி.
சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.
அரைநாள் ஒதுக்கி நெடுந்தூரம் பயணம் செய்து ஆர்வத்துடன் கலந்து கொண்டதற்கும், பகிர்விற்கும் நன்றி விஜயன் சார்.
அன்பு கலந்த நெகிழ்வான
பணிவான வணக்கம் .
மதுரை(தாய் வீடு ) வரை சென்று வந்தேன்.
அதான் தாமதம் .
என்ன சார் ....!!! இப்படி...கலக்கல் .
என்னை பற்றி ....என் புகைப்படம்
பற்றி ..தங்களின் வார்த்தைகள் ...
என்ன சொல்ல .....
என் இதயம் நெகிந்த ..நெஞ்சம் மகிழ்ந்த ..
நன்றிகள் ..