பின் தொடரரும் நண்பர்கள்

Thursday, July 25, 2013

நுகர்வோருக்கும் வேண்டும் விழிப்புணர்வு.................இன்று ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்தேன்.  சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது .... போனவாரம் நீங்க முகநூலில் ஒருவருடன் (ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் ) இருக்கிறமாதிரி போட்டோ போட்டிருந்தீர்களே இவருக்கு அவர் நண்பரா என நண்பர்கள் கேட்டதாக கூறி ஒருமாதிரியாக சிரித்தார்.    நானும் அவர்களுக்கு நண்பர்தான் என்ன விஷயம் என்றேன் இல்லை சும்மாதான்  என்று சமாளித்தார்.  சும்மா சொல்லுங்கண்ணே நமக்குள் தானே என்றேன். அப்பொழுதுதான்  அவர் தன் மனக்கசப்பை கொட்ட துவங்கினார்.

                       
பாவப்பட்ட மக்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் துவம்சம் செய்கிறார்கள்,பல்காரங்களை ரோட்டில் கொட்டுகிறார்கள். அப்படியென்றால்  பெப்சியை தடை செய்ய வேண்டியதுதானே சீறினார் . அப்பாடா அப்படி வாங்க வழிக்கு என்று மனதிற்குள் நினைத்தவாரே நிலமையை விளக்க துவங்கினேன்.

                           முதலில் சுகாதாரம் என்ற விஷயத்தில் பாவம் பணக்காரன் என்ற பாகுபாடு ஒன்றும் சட்டத்திற்கு கிடையாது.  யார் தவறு செய்தாலும் சட்டத்திற்குட்பட்டுதான்  அரசு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கின்றனர். பாவப்பட்டவன் என்பதற்காக  அவன் கலப்படம் செய்வதை  அல்லது அடுத்தவன் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன..?

                           
அடுத்ததாக பெப்சி.....           பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளையும் மாதிரி எடுத்து இவர் அனுப்புகிறார் . ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கு சில நேரங்களில் நீதியை தாமதப்படுத்தவோ அல்லது தீர்ப்பை மாற்றவோ செய்யலாம். என்ன நடக்கிறது என்பதை விளக்க தேவையில்லை அது எல்லோரும் அறிந்த ரகசியம் தான்.  இவர் தன் அதிகார வரம்புக்குள்ளே இருந்து மட்டும்தான் செயல்பட முடியும். நீங்கள் நினைக்கிற அளவிற்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால்  அதையும் செய்வார்.  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை எவ்வளவு இடையூறுகளுக்கிடையில் கனகச்சிதமாக செய்கிறார் என்பதை நான் அவருடன் இருந்த சில தருணங்களில் புரிந்துகொண்டேன். எவரையும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அப்பாவி மக்கள் சுகாதாரமற்ற பொருட்களை உட்கொண்டு இன்னலுக்கு ஆளாகாக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்  அரசின் சட்டத்தையே அவர் நடைமுறைப்படுத்துகிறார். அல்லாமல் பாவப்பட்டவர் /தனிநபர் மீது எந்தவித காழ்புணர்ச்சியோ அல்லது பன்னாட்டு கம்பனிகள் என்ற எந்த வித பாகுபாடோ அவருக்கு கிடையாது என்றேன்.

                             மேலும் அவர்  நாகர்கோவிலில் சில பெரிய ஹோட்டல்களின் பெயரை குறிப்பிட்டு இங்கே இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது என்று புகார் கொடுத்தும் ஒரு பயன் இல்லை. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

                 நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரி மீது புகார் செய்யுங்கள்.....தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேளுங்கள்..... தகவல் கிடைக்கும். பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

       
         
                மேலும் ஆபீசர்(சங்கரலிங்கம் ராஜகோபால் அவர்கள்) பணிபுரிவது நெல்லையில் அவர் அதிகாரவரம்பிற்குள் மட்டுமே அவர் செயல்பட முடியும்...... இங்கே அதிகாரிகள் செயல்படவில்லை என்பதற்காக அவர் செய்வது தவறு என்று கூறுவது முதிர்ச்சியின்மையேயாகும். நாட்டுக்கு நல்லது செய்பவர்களை எங்கிருந்தாலும் ஊக்குவிக்க வேண்டும்..... செயல்படாதவர்களை தட்டிக்கேளுங்கள்...அப்பொழுதுதான் நாடு உருப்படும் என்றேன்.

                   பாவப்பட்டவன் என்கிறீர்கள். அவனிடம் பலதடவை எச்சரிக்கை விடுத்தும் கால அவகாசம் கொடுத்தும் அவன் திருந்தவில்லை எனும்போதுதான்  நடவடிக்கை எடுக்கப்படுகிறது.   ஒருதடவை நஷ்டம் ஏற்படும்போதுதான் அவனுக்கும் வலிக்கிறது.

             அன்று அதிகமான கடைகளில் திறந்த வெளியில் ஈ மொய்க்க விற்றுக்கொண்டிருந்த பஜ்ஜி பலகாரங்கள் அனைத்தும் இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற  கண்டு மகிழ்கிறேன்.....வெறும் சட்டம் மட்டும் போட்டு பயன் இல்லை. அது சரியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். மக்களும் அதை மதிக்க வேண்டும். மதிக்காதவர்களை மதிக்கவைக்க வேண்டும் அதுதான் அதிகாரிகளின் கடமை. அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தத்தம் கடமைகளை ஒழுங்காக  செய்தால், மக்களும் தம் உரிமைகளையும் கேட்டு வாங்கி கடமைகளையும் ஒழுங்காக செய்தால் தான் நம் நாடு வளம் பெறும்.

                 சிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தாதீர் அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.... தந்தை தன் மகனை தண்டிப்பது அவன் நாசமாய் போவதற்காக அல்ல. சில அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்பதற்காக நேர்மையான அதிகாரிகளை குற்றம் சொல்லாதீர்..... எல்லோரும் அப்படியே நேர்மையற்று இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்....அது நீங்கள் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் செய்யும் பச்சைத் துரோகம்.

                   

7 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

// பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்... // ஆலோசனை நன்று...

செல்விகாளிமுத்து said...

நண்பர் என்று அல்லாமல் நடுநிலையில் நின்று பேசியிருப்பது நீங்கள் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினைக்காட்டுகிறது விஜி!

FOOD NELLAI said...

குறைகள் இருப்பின் நேராகவே சொன்னால் திருத்திக்கொள்ள எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
என் நட்பு உங்களுக்கு இப்படி ஒரு சிரமத்தைக்கொடுத்துவிட்டதே என்பதுதான் என் வேதனை.

MANO நாஞ்சில் மனோ said...

அவருக்கு நம்ம ஆபீசர் மீது பொறாமையா கூட இருக்கலாம் விஜயன்...!

MANO நாஞ்சில் மனோ said...

இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற கண்டு மகிழ்கிறேன்.//

ஒருவேளை ஈக்கள் மொய்க்கும் பஜ்ஜி திங்க ஆசை பட்டு இருப்பார்ன்னு நினைக்கிறேன்.

நல்லது செய்தாலும் அதுக்கும் ஒரு வெளக்கெண்ணெய் பதில் வரத்தான் செய்கிறது விடுங்க விஜயன், பதிவு போட்டுட்டீங்கல்லா இனி யாரும் கேள்வி கேக்கமாட்டாங்க.

MANO நாஞ்சில் மனோ said...

FOOD NELLAI said...
குறைகள் இருப்பின் நேராகவே சொன்னால் திருத்திக்கொள்ள எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
என் நட்பு உங்களுக்கு இப்படி ஒரு சிரமத்தைக்கொடுத்துவிட்டதே என்பதுதான் என் வேதனை.//இதில் சிரமம் என்ன ஆபீசர், அந்த நண்பர் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விஜயன் அருமையா பதில் சொல்லிட்டார், அவருக்கும் உறுத்தல் இல்லாமல் போயிருக்கும் இல்லையா ?

Vijayan K.R said...

ஆபீசர் அவர்களுக்கு....

எனக்கு உங்கள் நட்பு ஒரு வரப்பிரசாதம் தானே தவிர சிரமம் அல்ல. நல்ல செயல் புரிபவர்களுக்கு ஊக்கம் கொடுக்க எல்லோரும் முன்வர வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.