Skip to main content

கடவுள் தந்த பரிசு God"s gift

அது ஒரு கனாக்காலம்.. முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இல்லாத காலம்...அன்று ப்ளாக் மற்றும் அதில் உள்ள நட்புகள் தான் உலகம்... சண்டையில் சட்டை கிழியும் என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்தது....முகநூல் வராத வரை. அதன் பின் ப்ளாக மீதான ஆர்வத்தை முகநூல் வெகுவாக குறைத்து...அநேக பளாக நண்பர்கள் முகநூலிலும் வரவே பளாக்கில் வருவது நின்றே போனது எனலாம். இருந்தாலும் ப்ளாக் மீதான மதிப்பு குறையவில்லை.

    இனி மேட்டருக்கு வருவோம்
இது ஆடி மாசம் ஆஃபர்களுக்கு பஞ்சமில்லாத காலம். வசந்த் அன் கோவில் பொருள் வாங்கினால் 41 கார் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு தினுசாக ஆஃபர்கள் இருக்கும். ஆனால் இந்த பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று  யாரும் பொருட்கள் வாங்குவது கிடையாது. தேவையான பொருளை வாங்கி விட்டு போகிற போக்கில் பரிசு கூப்பனை நிரப்பி பெட்டியில் நிராசையுடன் போட்டுவிட்டு வருவதுதான் வழக்கம். ...அப்புறம் யாருக்கு என்ன பரிசு விழுந்தது என்று நாம் கேட்பதும் இல்லை. நமக்கு பரிசு விழுந்ததாக அவர்கள் சொல்லப்போவதும் இல்லை. எப்பொழுதாவது அக்கடைக்கு போகும் பொழுது பரிசு வாங்கியவர்களின் படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள் நாமும் அதை பெருமூச்சுடன் பார்த்து நகர்வோம். இதுதான் வாடிக்கை  அப்படித்தானே..

    ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் பரிசு கூப்பனை நிரப்பும் போது மிகுந்த நம்பிக்கையுடன் நிரப்புவது வழக்கம். அப்புறம் அந்த கூப்பனை மிகுந்த சிரத்தையுடன் குலுக்கல் வரை பாதுகாத்து வருவேன்...ஆனால் இதுவரை  ஒரு குண்டூசி கூட பரிசாக கிடைத்ததில்லை.
           என் மனைவிக்கு இம்மாதிரி நம்பிக்கை எதுவும் கிடையாது. ஆனால் அதிர்ஷ்டம் அங்கேதான் குடியிருக்கும் போலும். வழக்கம்போல பள்ளி விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு சென்ற போது ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றபோது பரிசு கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்... மனைவி உட்பட உடன் சென்ற நாலு பேரும் தத்தம் பெயர்களில் கூப்பனை நிரப்பி  கொடுத்து வந்தார்கள்... வீட்டில் வந்து துணியை பிரித்த கையோடும் பில்லும் கூப்பனும் வழக்கம்போல் கவருடன் குப்பைக் கூடைக்கு சென்றது.அங்கே தான் விதி விளையாடியது.

ஒரு மாதம் கழித்து என் மனைவிக்கு ஒரு கார் பரிசு விழுந்ததாக செய்தி வந்தது. அதுவும்  வீட்டுக்கே வந்து சொன்னார்கள். காரணம் கூப்பனில் எழுதிக் கொடுத்த போன் நம்பர் கூட பழுதாகிப்போனது. மேலும் கையில் கூப்பனும் இல்லை. வாங்கிய பில்லும் இல்லை என்றாலும் வருவது வழியில் தங்காது என்பார்கள்... பொதுவாக எனக்கெல்லாம் அது கெட்ட விஷயத்தில் தான் நடக்கும். ஆனால் முதன்முறையாக நல்ல விஷயத்தில் வர வேண்டியது வழியில் தங்காமல் வந்து சேர்ந்தது. எல்லாம் இறைவன் செயல். ஆம் அது கடவுளின் விருப்பம்.

Comments

Kesava Pillai said…
யோவ்,கார் கிடைச்சுதா இல்லையா? புரியும் படியா நம்ம என்னைக்கு பேசியிருக்கோம் !!
Unknown said…
கிடைச்சிரும்....விரைவில்... கேரளாவில் ரெஜிஸ்ட்ரேசன் நடந்திட்டிருக்கு. முடிந்ததும் கொண்டு வரணும்.
வாவ்...மிக்க மகிழ்ச்சி விஜி.God's gift from ggod's country.இனி எல்லாம் சிறப்பு!

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                                              *********************************** கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் ! பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.                                             *********************************** பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம