Skip to main content

கோழி முட்டை சைவமா !! இன்னும் பல தகவல்கள்


கால்நடைகள் மூலம் நமக்கு கிடைக்கிற உணவுப் பொருட்கள் பால்,முட்டை,இறைச்சி. இதுல பாலை சைவம்னு சொல்றோம்.இறைச்சியை அசைவம்னு முடிவு கட்டிட்டோம். ஆனா இந்த முட்டை மட்டும்  நடுவில் கிடந்து திண்டாடுது.

                        பால் தருவதால் பசு இறப்பது இல்லை. ஆனா இறைச்சி வேணும்னா ஒரு உயிரை கொன்னே ஆகணும் இல்லையா. அப்படி பார்க்கிறபோ முட்டைய சைவ உணவுன்னு சொல்லலாம். முட்டைக்குள்ளேருந்து குஞ்சு வர்ரத தடுத்துதானே முட்டையை சாப்பிடுறீங்க ! அப்படீன்னு நீங்க கேட்கலாம்.
                        
                        இப்போழுதெல்லாம் சேவல் சேராத, உயிர் கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத  முட்டைகள் தான் பண்ணையிலிருந்து வருது.
கருவுள்ள முட்டை வேணும்னாதான் சேவல் சேரணும். முட்டை உருவாகக் கோழியோட உடம்புல இருக்கிற சத்தே போதும்.
                         பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க. ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு.
இனி முட்டையை பற்றிய சில பயனுள்ள தகவல்கள்

*  நாட்டுகோழி முட்டையில்தான் சத்து அதிகமா ?
       பொதுவா மஞ்சள் கரு நிற்ம் அடர்த்தியா இருந்தா அது சத்து நிறைந்ததுன்னு மக்கள் நினைக்குறாங்க.  சாந்தொபில்(xanthophyl) ன்னு சொல்ற ஒரு பொருள் தான் மஞ்சள் நிறத்தை கொடுக்குது. அதுக்கும் சத்துக்கும் சம்பந்தம் கிடையாது. பண்ணை கோழியில் நாம் கொடுக்கிற உணவுல எல்லா சத்தும் இருக்குது. ஆனா நிறம் கொடுக்கிற அந்த பொருள் குறைவா இருக்குது அவ்வளவுதான். நாட்டு கோழி முட்டையைவிட பண்ணை கோழி முட்டை அளவில் பெரிதாய் இருக்கும். அதனால் கூடுதல் சத்து கிடைக்கும்.

*   முட்டை கெட்டுபோய் விட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது.?
               கேண்ட்லிங்  (candling) என்ற முறையில் ஒளிக்கதிர்களை செலுத்தி முட்டையின் தரம் அறியலாம்.
 அல்லது ஒரு பாத்திரத்தில் ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பை போட்டுக் கலக்கி  அதுல முட்டைய மெதுவா போடுங்க. நல்ல முட்டையா இருந்தா பாத்திரத்தின் அடியிலே இருக்கும் . பழைய முட்டையா இருந்தா பெருத்த பாகம் மேலே நிக்கும். அழுகிய முட்டைன்னா அப்படியே மிதக்கும்.
  முட்டையை பாதுகாக்க சில டிப்ஸ்

*   அழுக்கான முட்டையை வாங்காதீங்க. அப்படியே வாங்கினாலும் கழுவாமல் உடனேயே உபயேகப்படுதிடுங்க. கழுவினா முட்டையில் ஓட்டில் நிறைய நுண் துழைகள் உள்ளன. அதன் வழியாக  நுண்கிருமிகள் குறிப்பா சூடோமோனஸ் (pseudomonas)  நுழைஞ்சி முட்டையை கெடுத்திடும்.
*   முட்டையை அடுக்கி வைக்கும்போது குறுகிய பகுதி அடியில் வரும்படி வைங்க.

*  முட்டையை அவிக்கும்போது நீரில் கொஞ்சம்  உப்பு போட்டீங்கன்னா ஓடு உரிக்க எளிதா இருக்கும்.
*   வேகவச்ச முட்டைய உடனடியா பச்சை தண்ணீரில் போட்டா பச்சை வளையம் ஏற்படாது.
*    ஸ்பூனால அடிச்சு கலக்கும் போது நுரை எளிதா வந்துச்சினாலும் அது நல்ல முட்டை.
*     எலுமிச்சம் பழச்சாறு கொஞ்சம் ஊத்தி வேகவச்சா உடையாமல் அவிச்சி எடுக்கலாம்.
*     முட்டை அடிச்ச பாத்திரம் கவுச்சி அடிக்குதே என்ன பண்றதுங்கரீங்களா ?
 கவலைப்படாதீங்க ! எலுமிச்சம் பழச்சாறு அல்லது தோலால் துலக்கிப் பிறகு பாத்திரத்தை  சூடுபடுத்தினா வாடை போயிடும்.

Comments

Chitra said…
முட்டைக்குள்ள இத்தனை விஷயங்கள் இருக்குதா? பகிர்வுக்கு நன்றிங்க.
கலக்குங்க தலைவா... நம்ம பக்கம் ஆளைக்கானோம்..
கடைசிலே தீர்ப்பே சொல்லவில்லையே?!!
Unknown said…
middleclassmadhavi:
பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க. ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு. //
இதுதாங்க நம்ம தீர்ப்பு. நன்றி.
Unknown said…
Chitra said..:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
வேடந்தாங்கல் - கருன்:
இதோ வந்திர்ரேன்.
Sriakila said…
முட்டைக்குள்ள இத்தனை விஷயம் இருக்கிறது தெரியாம நீ முட்ட மார்க் வாங்கத்தான் லாயக்குன்னு யார் சொன்னது?
நான் சுத்த சைவம். ஹி ஹி ( சைவத்துல சுத்த சைவம் - அசுத்த சைவம் 2 இருக்கா/)#டவுட்டு
சித்ரா சொன்னதுதான்..முட்டைக்குள்ள இம்புட்டு இருக்கா..:))
விஜயன், கோழி பண்ணை வெச்சிரிக்கீன்களா ராசா? நல்ல செய்திகள்.
அது சைவமோ, அசைவமோ. முட்டை பிடிக்கும்.
மிக பயனுள்ளத் தகவல்...
பகிர்வுக்கு நன்றிங்க.
Unknown said…
சி.பி.செந்தில்குமார்:
வீட்ல சமைச்சா சுத்த சைவம், வெளிய இருந்து வாங்கினா அசுத்த சைவம் அப்படீன்னு வேணும்னா சொல்லாம் ஹி...ஹி...
Unknown said…
Sriakila :
சரியா சொன்னீங்க. வருகைக்கு நன்றி
Unknown said…
தேனம்மை லெக்ஷ்மணன்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
கக்கு - மாணிக்கம் :
வாங்க சார் வாங்க. எவ்வளவு நாள்தான் கலைஞரேயே திட்றது. கொஞ்சம் உருப்படியா எழுதுவோமேன்னு பார்த்தேன்.
Unknown said…
சி.கருணாகரசு:
உங்கள் கண் தான விழிப்புணர்வு கவிதை அருமை.வருகைகு நன்றி.
Unknown said…
இளங்கோ:
வருகைக்கு நன்றி இளங்கோ.
Unknown said…
jothi :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
arasan said…
அவசியமான தகவல்கள் சார் ...
இப்போதான் நிறைய அறிந்து கொண்டேன் ...
மிக்க நன்றிங்க சார்
Unknown said…
அரசன்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்.
Jayadev Das said…
கோழிப் பண்ணையில் வளர்க்கப் படும் கோழிகளுக்கு நோய்த் தொற்று எளிதில் ஏற்ப்படும், ஏனெனில் அவை சுதந்திரமாக வளர்க்கப் படுவதில்லை, அடைக்கப் பட்டு கூட்டம் கூடமாக வளர்க்கப் படுகின்றன, அதைத் தடுக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றிற்கு Antibiotic மருந்துகள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், மேலும் முட்டைகளை நிறை போட்டுத் தள்ள வேண்டுமென ஹார்மோன் ஊசிகளையும் போடுவார்கள். அப்புறம், அவை விரைந்து பருத்து பெரிதாக வேண்டுமென்று தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் உலோக மிச்சமீதியுடன் [ரெஸிடுஎ] கூடிய தோல் கழிவுகளை தீவனத்துடன் கலந்து கொடுப்பார்கள். இவை எல்லாத்தோட விளைவுகளும் கோழியின் இறைச்சியிலும், முட்டையிலும் இருக்கும். இதை தின்னத்தான் வேண்டுமா? கோழி பண்ணை வச்சு நாலு சனம் பிழைக்கனும்தான், ஆனா அதுக்காக ஊரிலிருப்பவன் உயிரை எடுத்தா பிழைக்கணும்? [இது அங்கே இங்கே என்றல்ல, எல்லா இடங்களிலும் நடக்கிறது.] எல்லாத்துக்கும் மேல: கோழி முட்டை என்பது என்ன? கோழியின் menstrual discharge!! நீங்களே முடிவு பண்ணிக்குங்க, சாப்பிடுவதா வேணாமான்னு. ஹி...ஹி...ஹி...
Jayadev Das said…
\\உலோக மிச்சமீதியுடன் [ரெஸிடுஎ]\\ metallic residues used for seasoning leather in leather factories.
Jayadev Das said…
This comment has been removed by the author.
Jayadev Das said…
\\பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க.\\எந்தத் துறையைப் பற்றி சந்தேகம் என்றாலும் அந்தத் துறை வல்லுனர்கள் என்ன சொல்கிறார்களோ அது தான் ஏற்றுக் கொள்ளத் தக்கது, அதற்க்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பேசுவது அவர்கள் சொந்தக் கருத்து, ஏற்க வேண்டுமென்ற அவசியமில்லை. இசையைப் பற்றி ரஹ்மானோ, இளையராஜாவோ, எம்.எஸ்.வி யோ எதாச்சும் சொன்னால் கேட்கலாம், அதை விடுத்து புண்ணாக்கு வியாபாரி சங்கீதத்தைப் பத்தி பேசுறான்னு கேட்போமா? அவருக்கு எவ்வளவு புண்ணாக்கு வச்சா மாடு எத்தனை லிட்டர் பால் கரக்கும்னு சரியாச் சொல்வார். சங்கீதத்தைப் பத்தி என்ன சொல்ல முடியும்? இப்போ சைவம் அசைவம் என்பது மதம் சார்ந்த விஷயம். தவிர்க்கப் பட வேண்டிய உணவுகளில் இறைச்சி மட்டுமல்ல தாவர உணவுகளான பூண்டு, வெங்காயம் போன்றவையும் உள்ளன. [எந்த பெருமாள் கோவிலாவது இவற்றை போட்டு பகவானுக்கு நெய்வேத்தியம் செய்து பார்த்திருக்கிறீர்களா?]. புகையிலை கூட தாவரம் தான், அதற்காக அதை மெல்லலாமா? ஆக உணவு சத்துவ குணத்தில் இருக்க வேண்டும், சைவம் மட்டும் போதாது. முட்டை சத்துவ குண உணவு அல்ல. அது அசைவம்தான், நான் அசைவம் உண்கிறேன் பரவாயில்லை என்பவர்கள் அவர்கள் விருப்பப் படி செய்யலாம், ஆனால் ஆன்மீக வழியில் செல்பவர்களுக்கு அது எதிரானது.
முட்டை சைவமா> அசைவமா? அப்படினு ஒரு பட்டி மன்றம் வைக்கலாம் போலருக்கு நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி
This comment has been removed by the author.
Unknown said…
எந்தத் துறையைப் பற்றி சந்தேகம் என்றாலும் அந்தத் துறை வல்லுனர்கள் என்ன சொல்கிறார்களோ அது தான் ஏற்றுக் கொள்ளத் தக்கது,//

பெருவாரியான மருத்துவர்கள் முட்டையை நல்ல உணவாக பரிந்துரைக்கிறார்கள். நீங்கள் சொல்வது ஆன்மீகரீதியில் சரி. ஆனால் அந்த கண்ணோட்டத்தில் நான் இதை பதிவிடவேயில்லை. எனவே தான் அதை மன(த)ம் சம்மந்தப்பட்ட விஷயம் என்றேன். அதற்க்காக புகையிலையையும் முட்டையையும் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல. உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Jayadev Das said…
மருத்துவ ரீதியாகவும் கோழிப் பண்ணை முட்டைகள், கோழிகள் மிக ஆபத்தானவை. சமீபத்தில் பெங்களூரில் பண்ணைக் கோழி கரியில் குரோமியம் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. இது கிட்னியை அடித்தால் முடிந்தது கதை. முன் சொன்ன மாதிரி, கோழிகளுக்குப் போடப் படும் ஹார்மோன் ஊசிகள், தடுப்பூசி மருந்துகள் அத்தனையும் கேடுதான். குப்பையை கிளரும் நாட்டுக் கோழியும், அதன் முட்டையும் இந்த மாதிரி உடலுக்கு ஊரு விளைவிக்காது.
Unknown said…
great article!!!!!
achimakan said…
please refer this blog:
http://achimakan.blogspot.in/2004/11/blog-post_109989415442717442.html

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந