Skip to main content

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

       முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.

             நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.

              முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம். 

                 தன்னுடையவாழ்வின் இறுதியை நோக்கி போய்கொண்டிருப்பவர்கள் அந்த பயத்தில் அவர்களின் ஆசைகளை அவசரமாக நிறைவேற்றும் பொருட்டும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.

               இது நமக்கு மன உளைச்சலைத் தந்தாலும் அவற்றை அனுதாபத்தோடு பரிசீலிப்பது மிகவும் அவசியமானது.  ஒரு காலத்தில் நாமும் அந்த நிலைக்கு தள்ளபடுவோம் என்பதை நினைத்துக்கொண்டால் அவர்களை புண்படுத்த தோன்றாது.
            மற்றொரு விஷயம் அவர்கள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து நிறைய நன்மை தீமைகளை அனுபவித்துள்ளார்கள். அதை கண்டிப்பாக நாம் பெற்றிருக்க மாட்டோம். எனவே அவைகள் நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வாய்ப்பு உண்டு.  ஒரு தடவை அவர்கள் சொல்வதையும் கேட்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம். அவ்வாறு கேட்பது அவர்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தியை கொடுக்கும்.

             வீட்டில் இருக்கும் முதியவர்கள் உடல் நிலை குன்றி இருந்தாலும் ஆன்ம பலம் மிக்கவர்கள். அவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களுடைய ஆன்ம பலம் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையாமாகவே செயல்படும்.

              தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற வரிகள் உங்களை வழிநடத்தும் உன்னத வரிகள என்பதை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு வயதாகிவிட்டதால் அது பொய்யாகிவிடுமா என்ன ?.
               

Comments

அருமையானதோர் இடுகை..
சீன பழமொழி ஒன்று இப்படி சொல்கிறது:ஒரு முதியவர் வீட்டில் இருப்பது,பல லட்சம் ரூபாய்க்கு சமம்!!
நல்ல பகிர்வு விஜி!
தலைப்பு பார்த்து திட்டலாம்னு வந்தேன்..
ஆனா பதிவு நல்லா இருக்கு,..
பாராட்டுகள்..
Unknown said…
@அமைதிச்சாரல் : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.
Unknown said…
@ என் மன வானில் : உங்களுடைய கருத்துக்கு நன்றி செல்வி.
Unknown said…
"என் ராஜபாட்டை"- ராஜா : நன்றி நண்பா. மீண்டும் வருக.
Unknown said…
@ !* வேடந்தாங்கல் - கருன் * : சாரே...ஒழுக்கமா டைட்டில் போட்டா யாரும் படிக்க மாட்டாங்க. பார்த்தீங்களா நீங்க கூட திட்டதான் வந்தீங்க. உங்க வரவு தான் முக்கியம். நன்றி.
எவ்வளவு பெரிய விஷயம் இது. இன்று நம் வீட்டு முதியோரை நாம் நடத்தும் முறையினை, நாளை நம் பிள்ளைகள் நமக்கு செய்து காட்டுவார்கள்.பகிர்விற்கு நன்றி, விஜயன்.
நல்ல பதிவு இது. யாராவது தமிழ்மணத்தில இணையுங்களேன்.
//அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை. விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.//
சத்தியமான வார்த்தைகள்.
vidivelli said…
அத்தனையும் உண்மை சகோ..
இதுதான் இப்போ நடக்கிற விடயம்..
அப்பிடியில்லையென்று வீட்டில் வைத்தொருந்தால் அவர்களைத்திட்டி தீர்த்துக்கொண்டே இருப்பார்கள் பிள்ளைகள் .அந்த வலி பொறுக்காமல் அவர்களாகவேயும் போய்விடுவார்கள் முதியோர் இல்லத்திற்கு...
முதுசங்கள் வீட்டின் குல தெய்வங்கள்..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்...



http://sempakam.blogspot.com/
அருமையான அவசியமானதொரு பரிந்துரையை இவ்விடுகையின் மூலம் தந்து பலருக்கும் விழிப்பைத் தந்துள்ளீர்கள் சகோ.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ஒரு காலத்தில் நாமும் அந்த நிலைக்கு தள்ளபடுவோம் என்பதை நினைத்துக்கொண்டால் அவர்களை புண்படுத்த தோன்றாது.//

சரியான கூற்று!
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற வரிகள் உங்களை வழிநடத்தும் உன்னத வரிகள என்பதை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு வயதாகிவிட்டதால் அது பொய்யாகிவிடுமா என்ன ?.//

சிந்திப்பார்களா?முதியோர் இல்லங்களை தேடும் அன்பர்கள்?
Chitra said…
நெகிழ வைக்கும் பதிவு. வயதானவர், குழந்தையை தூக்கி வைத்து இருக்கும் படம், பதிவுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
Prabu Krishna said…
//தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற வரிகள் உங்களை வழிநடத்தும் உன்னத வரிகள என்பதை மறந்து விடக்கூடாது//

நிச்சயமாக அண்ணா... பத்து மாதம் சுமந்தாள் அம்மா, அதன் பின்னும் தாங்கினார் அம்மாவும், அப்பாவும். அவர்களை முதியோர் இல்லத்தில் விடுபவன் மிருகத்தை விட கேவலாமானவன்.
Unknown said…
அருமையான படைப்பு

பெரியப்பா, சித்தப்பா
எல்லாம் சேர்த்து
வாழ்ந்தது கூட்டுக்குடும்பம்
அன்று

அப்பா அம்மாவுடன்
வாழ்வதே கூட்டுக்குடும்பம்
இன்று

என்ன பண்றது??
அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது.//
அதல்ல விஜயன். ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுககு ஏற்றமாதிரி
தனியாக சமைக்கும் நாம் இரண்டாம் குழந்தை நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு நாம் உண்பதையே கொடுக்கிறோம்.
அடு அவர்களுககு ஒவ்வாமல் இருக்கிறது. இதை உணர்ந்து அவர்களுககு ஏற்ற மாதிரி செய்தோம் என்றால் அவர்கள் நலமாகவே இருப்பார்கள்.
பெரிசுகள் தேவை தான்... ஆனால் சில பெரிசுகள் பழைய இளவட்ட முறுக்குடனே இருந்தால்?????
Unknown said…
@FOOD சங்கரலிங்கம் ஐயாவின் வருகைக்கும் ஊக்கம் தருகின்ற கமெண்டுக்கும் மிக்க நன்றி.
Unknown said…
@ vidivelli :சரியாக சொன்னீர்கள் நம்மை பாராட்டி சீராட்டி ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர பாடுபட்ட அவர்களை, கடைசியாக இந்த உலகத்தை விட்டு விடைபெறும் காலம் வரை சந்தோசமாக வழியனுப்பி வைப்பது நமது கடமையாகும்.
Unknown said…
@ ஸாதிகா : உங்களுடைய ஊக்கம் தரும் பின்னுட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி அம்மா.
Unknown said…
@ கோகுல் : உங்களூடைய கருத்துக்கும் வருகைகும் நன்றி கோகுல்.
Unknown said…
@ Chitra : சிரிப்போ உருவெடுத்து வந்து என் முன் நின்றால் அதன் பெயர்தான் சித்ரா(மேடம்).என்ன ஒரு உழைப்பு. யாருடைய பதிவிலும் உங்களுடைய கமெண்ட் இல்லாமல் இல்லை. மிக்க நன்றி.
Unknown said…
@ பலே பிரபு :நிச்சயமாக அண்ணா... பத்து மாதம் சுமந்தாள் அம்மா, அதன் பின்னும் தாங்கினார் அம்மாவும், அப்பாவும். அவர்களை முதியோர் இல்லத்தில் விடுபவன் மிருகத்தை விட கேவலாமானவன்.//
அப்படிப்பட்ட கேவலமான வஸ்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. முதியவர்களிடம் ஒருசில குறைபாடுகள் இருக்கும்தான். அந்த வயது ஆகும்போதுதான் அதை நாம் உணர முடியும். நன்றி பிரபு.
Unknown said…
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
அருமையான படைப்பு

பெரியப்பா, சித்தப்பா
எல்லாம் சேர்த்து
வாழ்ந்தது கூட்டுக்குடும்பம்
அன்று //

இன்று அது வெகுவாக குறுகிவிட்டது மனிதர்களின் குறுகிய புத்தியினால்.
Unknown said…
நாய்க்குட்டி மனசு said...

ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுககு ஏற்றமாதிரி
தனியாக சமைக்கும் நாம் இரண்டாம் குழந்தை நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு நாம் உண்பதையே கொடுக்கிறோம்.
அது அவர்களுககு ஒவ்வாமல் இருக்கிறது. இதை உணர்ந்து அவர்களுககு ஏற்ற மாதிரி செய்தோம் //

அப்படி செய்யவேண்டியது நமது கடமையும் கூட.உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி மேடம்.
Unknown said…
தமிழ்வாசி - Prakash said...
பெரிசுகள் தேவை தான்... ஆனால் சில பெரிசுகள் பழைய இளவட்ட முறுக்குடனே இருந்தால்?????//
பிரச்சனையே இல்லையே. அவங்க வேலையை அவங்களே பார்த்திருவங்களே!!. நன்றி பிரகாஷ்.
Unknown said…
@ Rathnavel: உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
bandhu said…
//அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை. விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.//இது தவறுதலான புரிதல். அமெரிக்காவில் அவரவர் வாழ்க்கை அவரவரது. பிள்ளையே ஆனாலும் அவன் வாழ்க்கை வேறு என் வாழ்க்கை வேறு என்று பார்க்கிறார்கள். அதிலும் நிறை குறை உண்டு. அங்கும் பிள்ளைகளுக்காகவே வாழ்பவர்களும் உண்டும். நம் ஊரில் அப்படி இல்லாதவர்களும் உண்டு!
Unknown said…
This comment has been removed by a blog administrator.
Unknown said…
@ bandhu :
எல்லா விஷயத்திலும் exceptions இருக்கும் அதை நாம் கணக்கில் எடுத்து வாதிட முடியாது. நம்முடைய வாழ்க்கை முறைக்கும் அவர்களூடைய வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்தியாசமே/அத்தாட்சியே அங்கு காணப்படும் முதியோர் இல்லங்கள். நம்மை மாதிரி ஒரு குடும்ப நெறி முறைகள் அங்கு அதிகம் காணப்படுவதில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
@ bandhu :
எல்லா விஷயத்திலும் exceptions இருக்கும் அதை நாம் கணக்கில் எடுத்து வாதிட முடியாது. நம்முடைய வாழ்க்கை முறைக்கும் அவர்களூடைய வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்தியாசமே/அத்தாட்சியே அங்கு காணப்படும் முதியோர் இல்லங்கள். நம்மை மாதிரி ஒரு குடும்ப நெறி முறைகள் அங்கு அதிகம் காணப்படுவதில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமினா said…
//அவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களுடைய ஆன்ம பலம் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையாமாகவே செயல்படும்.//
நூற்றுக்கு நூறு உண்மை

இன்றைய குழந்தைகளை கூப்டு கேட்டா அப்பா அம்மா தவிர மற்ற உறவுகள் யாரென தெரியாது. இதுவே பெரியவர்கள் இருக்கும் இடத்தில் வளரும் குழந்தைகளுக்கு உறவுகளின் அருமை,நல்ல பழக்க வழக்கங்கள் இன்னும் ஏராளம்........... எல்லாமே தெரியும். தனக்கு மற்றும் இன்றி தன் குழந்தைகளுக்கும் அவர்கள் ஆசானாக,வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
ஆமினா said…
நல்ல பகிர்வு சகோ

தன் பெற்றோர்கள் புலம்பினால் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டா இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் சுமையாக தெரியமாட்டார்கள்.

அது போல் முதியோர்களும் அனுபவத்தில் பக்குவத்தில் சிறந்தவர்கள். தன் குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயத்தை வலுகட்டாயமாக திணிப்பதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் இவர்கள் தன் குழந்தைகளுக்கு சுமையாக இருக்க மாட்டார்கள்.

நேரமிருப்பின் இக்கவிதையை படிங்க :)
http://kuttisuvarkkam.blogspot.com/2010/10/blog-post.html
Unknown said…
ஆமினா : உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுடைய கவிதையை படித்தேன். மிகவும் உணர்வுப்பூர்வமாக வார்த்தைகளை அமைத்திருக்கிறீர்கள்.மிகவும் நன்றாக இருக்கிறது.
Kousalya Raj said…
தலைப்பில் முதியோர்கள் தேவை இல்லை என்கிற மாதிரி கேள்வி இருந்தது... பதிவில் நெகிழவச்சிடீங்க !

அருமையான பகிர்வுக்கு பாராட்டுகள் விஜயன்.
Unknown said…
""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
Unknown said…
இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..
மாலதி said…
பதிவு நல்லா இருக்கு,..
பாராட்டுகள்..
அவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களுடைய ஆன்ம பலம் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையாமாகவே செயல்படும்.
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந