Skip to main content

Posts

Showing posts from 2012

விளம்பரம் என்னும் மாயஜாலம்

டிவியில் விளம்பர படம் பார்க்கும்போது அதன் பின்னால் இருக்கும் விளம்பர கம்பனியின் உழைப்பு நமக்கு தெரிவதில்லை. நானும் ஒரு காலத்தில் என் நண்பருடன் விளம்பர படம் எடுக்க போனதுண்டு( உப்புமா கம்பனிதான்).  அப்பொழுதுதான் அதிலுள்ள நுணுக்கங்களை கண்டு வியந்து போனேன்.                  முதலில் அந்த விளம்பரம் புக் செய்ய அந்த வாடிக்கையாளரை சோப்பு போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் தொழில் நுட்பம்.  எல்லா வியாபாரிகளுக்கும் தன் விளம்பரத்தை டிவியில் காண ஆசை இருக்கும். ஆனால் அதன் செலவை (சன் டிவி ரேஞ்சுக்கு) அதிகமாக கற்பனை பண்ணி வைத்திருப்பதால் அதை பற்றி ஆலோசிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் நிற்கிறோம்.... மிகவும் குறைந்த செலவில் அதை எடுத்து ( அதற்க்கென்று ஒரு டூபாக்கூர் கான்செப்ட் உருவாக்கி)  கொடுத்து அவர்களின் கனவை நனவாக்குகிறோம். அந்த விளம்பரம் அகில உலகமெங்கும் வரும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிக்கும் வேளையில்   அவர்கள் கேபிள் டிவி ஏரியாவையே  தாண்டாது என்பது எங்களுக்கு பணம் செட்டில் செய்த பிற்பாடுதான் அவர்களுக்கு தெ...

பாருங்க... பாருங்க நானும் ரவுடி தான்..........

போன வாரம் சீரடி சாயி பாபா கோவிலுக்கு போய் வரும்பொழுது நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதை உங்களுக்கும்  தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.........                     வாரம் ஒரு முறை சென்னையில் இருந்து ஒரு இரயில் வண்டி சீரடிக்கு செல்கிறது. அதில் செல்பவர்கள் அநேகமாக சாயிபாபாவின் பக்தர்கள் தான்.  அனைவரும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதால் பாடல் மற்றும் பஜனைகள் களைகட்டும். நாங்களும் நன்றாக பிரயாணத்தை ரசித்து ருசித்து மகிழ்ந்து சென்றோம். இனிமையாக தரினத்தை முடித்து இரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம். டிக்கட் பரிசோதகரால்  நடுக்காட்டில் இறக்கிவிடப்பட்ட   குடும்பம்.               இரண்டு பக்கமும் காட்சிகள் பச்சை பசேலென்று கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அதை ரசித்துக்கொண்டும் என்  கேமிராவினால் காட்சிகளை  பதிவு செய்து கொண்டும்  வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய இரயில் நிலையத்தில் இருந்து ஒரு  ஏழைக்குடும்பம் நாய் மற்றும் மூங்கில் கம்பு சகிதமாக ஏறியது. எனக்...

WISH YOU A HAPPY ONAM

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் மற்றும் கூகுள் ப்ளஸ் நண்பர்களுக்கும் என் உள்ளம்கனிந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.......

தி..க்...கு வாய்............

  உ லக அளவில் இந்தியாவில் திக்குவாய் மிக அதிகமாக கணப்படுகிறதாம் அதில் 80 சதவீதம் ஆண்களாம்.  உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் திக்குவாயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. ஆங்கிலத்தில் இதை stammering அல்லது shuttering  என்றும் கூறுவதுண்டு. திக்குவாயைப்பற்றி எழுத ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.  நானும் சிறுவயதில் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்பதும் அதன் பாதிப்புக்களை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதும் கூட ஒரு காரணம்.  என்னிடம் நிறைய திறமைகள் இருந்தும் என்னால் அதை செயல்படுத்த மிகவும் தடையாக இருந்தது இந்த திக்குவாய் என்றால் அது மிகையாகாது.                                   சி று வயது முதலே இதன் பாதிப்பு அதிகமாகவே இருந்தது நாலு நண்பர்கள் கூடும் இடத்தில் நான் போனால் நான் கேலிப்பொருள் ஆக்கப்படுவேன்...   இதனால் கும்பலாக இருக்கும் நண்பர் கூட்டத்தை தவிற்க்க நேர்ந்தது.... அந்த சந்தோஷத்தை இழக்க நேர்ந்தது..... பள்ளிக்காலத்தில் நான் என்னதான் பலதடவை வீட்டில் நன்றாகப் படித்...

உலகிலேயே கேரளாவில் தான் ஆட்டோ சார்ஜ் மலிவு- என் அனுபவம்.

சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொள்ள கேரளாவில் திரிச்சூர் இரயில் நிலையத்தில் இறங்கி வடக்கு பஸ்நிலையம் செல்வதற்க்காக prepaid ஆட்டோவுக்காக டோக்கன் எடுத்தேன். அவரும் 28 ரூபாய் என்று ரசீது கொடுத்தார். இவ்வளவு குறைவாக இருக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.                         அது அதிகாலை 5.30 மணியாகையால் பொழுது விடிந்தும் விடியாதுமாய் இருந்தது இரயில் நிலைய வாயிலில் ஒரே கூட்டம் வரிசையாக நின்று கொண்டிருந்தது எதற்க்காக என்று கடைசிவரை எனக்கும் புரியவேயில்லை. ஆட்டோ மெதுவாக வாயிலை கடந்தது. வாயிலில் உள்ள ஆலமரத்தில் பறவைகள் சப்தம் காதை துளைத்தது....... அப்பொழ்துதான் சிறிது மழை பெய்து வெறித்திருந்ததால் பறவை எச்சத்தின் நாற்றம் குடலை புரட்டியது.             இப்படியாக சாலையோர காட்சிகளை ரசித்தவாரே ஆட்டோவில் பயணித்தேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு மனிதர்கள் டீ கடையில் சாயா குடித்துக்கொண்டிருந்தனர். வடக்கு பஸ் நிலையமும் வந்தது. நான் இறங்கி 28 ரூபாய்க்கான ரசீதையும் 50 ரூபாவும் கொடுத்தேன். அவர் ம...

ஆதலினால் காதல் செய்வீர்................

இது ஒரு உண்மைக்கதை. இன்று ஒரு பெரியவரை சந்தித்தேன் அவர் தன் மகனின் கதையை கூறினார் அதன் பாதிப்பே இந்த பதிவு  கதையின் நாயகனின் பெயர் குமரன்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,  நாகர்கோயிலை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த குமரன் வீட்டில் உள்ள மற்ற இரு சகோதரர்களைகாட்டிலும் படு சுட்டி.  எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாத ஒரு சுபாவம் அவனை மற்றவர்களிடத்திலிருந்த பிரித்து காட்டியது.  அதுவே அவனது வளர்ச்சிக்கு ஊன்று கோலாகவும் இருந்தது.                கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள் அதுபோல் இவனும் கொஞ்சம் கெட்டு சென்னை பட்டணம் சேர்ந்தான். அங்கே சிறிது சிறிதாக முன்னேறி ஒரு ஒப்பந்ததாரர் (contractor)  ஆனான்.   நல்ல பணம் வர ஆரம்பித்தது அதனூடேயே செல்வாக்கும் வளர்ந்தது. அந்த ஏரியாவில் எல்லா வேலைக்கும் அவனைத்தான் அழைத்தார்கள் நிறைய பேருக்கு செல்லப்பிள்ளையானான்.               குமரனின் தாய்மாமாவுக்கு ஒரு இளவரசி என்ற மகள் இருந்தாள் அந்த பெண் கேரள தலைநகரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாள்..... பெயருக்க...

வாங்க சிரிக்கலாம்..............(நகைச்சுவை விருந்து)

பஸ்ஸில் கண்டக்டரிடம் ஒரு பயணி கேட்டார்: "ஆமாம், ஏன் காலை அகட்டி வச்சு நிக்கிறீங்க? கண்டக்டர்: "பேலன்ஸுக்கு. ஆமாம், நீங்களும் ஏன் காலை அகட்டி வச்சு நிக்கிறீங்க?" பயணி:"நானும் பேலன்ஸுக்குத தான் நிக்கிறேன். பத்து ரூபாய் குடுத்ததுக்கு டிக்கட் சார்ஜ் போக மீதி குடுங்க சார்" .............................................................................................. விவாதத்திலே நேரங்கழித்தல் - நிழலுடனே போராடுவதற்கு நிகராகும். ......................................................................................... பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும். நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே ................................................................................................. துட்ட வட்டிக்கு விட்டா தண்டலு துப்பட்டால மனசை விட்டா மென்டலு .......................................

கன்னியாகுமரி மாவட்டம்- பொற்றையடி ஸ்ரீ சாய் ஆனந்த ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம்

ஆலயத்தின் புற தோற்றம் இன்று (04.04.2012, புதன் கிழமை) கன்னியா குமரி மாவட்டத்தில் பொற்றையடியில் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் ஆலயம் பிராண பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  shri C.B SATPATHY  கும்பாபிஷேகத்தையும் பிராண பிரதிஷ்டையையும் செய்து வைத்தார். ஆலயத்தின் முன் பார்வை                   இது வள்ளி ஸ்டீல் இண்டஸ்டீரீஸ் -ன் உரிமையாளர் திரு.நேபாள்ராஜ் என்பவரின் முழு முயற்ச்சியாலும் சொந்த பணத்தாலும் (வேறு எவரிடமிருந்து எந்த நன்கொடையும் பெறாமால்) நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை எப்படி சுசீந்திரமும் விவேகானந்த பாறையும் கவர்ந்து இழுத்ததோ அந்த வரிசையில் இந்த ஆலயமும் இடம்பெறும் என்றால் மிகையில்லை. ஆலயத்தின் உள்ளே             கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பலரை அங்கே காண முடிந்தது. பாபாவின் பக்தர்கள் எல்லா ஐஸ்வர்களையும் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவரது பக்தர்களை பார்க்கும்போது அது ஒரு வகையில் சரி என்றே தோன்றியத...

499 ????????????பாபநாசத்தில் நடந்த பதிவர் குளியல்

“ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்” ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்.   இதையெல்லாம் தெரிந்து தான் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் ஒரு அருமையான பதிவர் சந்திப்பை (குளியலை) பாபநாசம் அருவியில் ஏற்பாடு செய்திருந்தார். நான், நாஞ்சில் மனோ, சங்கரலிங்கம் ஐயா,திவான் ஜி,நண்பர் சுதன் மற்றும் நண்பர் ராஜேஷ் எல்லோரும் சேர்ந்து பாபநாசம் சென்று எங்களுடைய பாவங்களை கழுவிக்கொண்டோம். அருமையான இரவு கொண்டாட்டம். சிரித்து ... சிரித்து மாய்ந்து போன தருணங்கள் எதையும் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது.                         ...

பாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்டுமா???

           நம் ஊரில் பாம்பு கடிக்கும்,மருந்தடித்தலுக்கும் பஞ்சமே கிடையாது.  அடிச்சவன்(கடிபட்டவன்) மட்டையாகி கிடக்க அவனை மருத்துவ மனை கொண்டு சென்றால் மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி என்ன பாம்பு கடித்தது ??? (அல்லது என்ன மருந்தை குடித்தான்???). பாம்பு படம் எடுக்கும் என்று படித்திருக்கிறேன் ஆனால் எந்த பாம்பும் அதை கடித்தவனுக்கு அந்த படத்தை கொடுத்ததாக கேள்விப்படவில்லை. அப்படி கொடுத்திருந்தால் அதை மருத்துவருக்கு காண்பிக்கலாம் அவரும் சிகிட்சையை ஆரம்பிப்பார்.                 ஆனால் இந்த பாழாய்ப்போன பாம்பு படம் எடுப்பதோடு சரி.     சரி அதன் பெயர் மற்றும் முகவரி ஏதாவது கொடுத்துவிட்டு போனாலும் நன்றாக இருக்கும். ஆனால் இது அந்த பாம்பிற்க்கும் தெரிவதில்லை அந்த மருத்துவர்க்கும் புரிவதில்லை. மருந்தடித்தவனாவது பாட்டிலை எங்காவது வைத்திருப்பான் ஆனால் இந்த பாம்பை எங்கே போய் பிடிக்க????... இதில் வேற அந்த பாம்பை நாம் பிடித்து கடித்தால் அந்த விஷம் இறங்கிவிடும் என்ற புரளி வேறு கிளப்பிவிட்டுகிட்டு இருக்காங்க. அதை பார்த்தாலே ப...

விளையாடுவதையே மறந்துபோன இன்றைய மழலையர்கள்

          நேற்று ஒரு வயதான பெண்மணி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த கால குழந்தை வளர்ப்பு முறையை பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில் நானும் 5 குழந்தைகளை பெற்று வளர்த்தவள் தான் இன்று 5 பேருமே மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றய குழந்தைகள் விளையாட்டு என்ற ஒரு விஷயத்தை இழந்தே விட்டார்கள் என்றே செல்ல வேண்டும் என்றார்.                    அந்த காலங்களில் பெண் குழந்தைகள் பட்டம் விடுதல், பல்லாங்குழி, பாண்டி மற்றும் இன்னும் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆண் குழந்தைகள் கோலி விளையாட்டு, பம்பரம் விளையாட்டு,கோகோ, கபடி,மரம் ஏறுதல் குளத்தில் நீந்துகள் மற்றும் எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செய்து ஒருவிதத்தில் பொது அறிவு மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த சாக்கில் நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டவும் கற்றிருப்பார்கள். கொஞ்சம் முட்டு தேயும் அவ்வளவுதான் .                     இதில் குழந்தைகளின் தனித்திறன் வெளிப்பட்டு தானாகவே ஒரு ...