Skip to main content

விளம்பரம் என்னும் மாயஜாலம்


டிவியில் விளம்பர படம் பார்க்கும்போது அதன் பின்னால் இருக்கும் விளம்பர கம்பனியின் உழைப்பு நமக்கு தெரிவதில்லை. நானும் ஒரு காலத்தில் என் நண்பருடன் விளம்பர படம் எடுக்க போனதுண்டு( உப்புமா கம்பனிதான்).  அப்பொழுதுதான் அதிலுள்ள நுணுக்கங்களை கண்டு வியந்து போனேன். 

               முதலில் அந்த விளம்பரம் புக் செய்ய அந்த வாடிக்கையாளரை சோப்பு போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் தொழில் நுட்பம்.  எல்லா வியாபாரிகளுக்கும் தன் விளம்பரத்தை டிவியில் காண ஆசை இருக்கும். ஆனால் அதன் செலவை (சன் டிவி ரேஞ்சுக்கு) அதிகமாக கற்பனை பண்ணி வைத்திருப்பதால் அதை பற்றி ஆலோசிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் நிற்கிறோம்.... மிகவும் குறைந்த செலவில் அதை எடுத்து ( அதற்க்கென்று ஒரு டூபாக்கூர் கான்செப்ட் உருவாக்கி)  கொடுத்து அவர்களின் கனவை நனவாக்குகிறோம். அந்த விளம்பரம் அகில உலகமெங்கும் வரும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிக்கும் வேளையில்   அவர்கள் கேபிள் டிவி ஏரியாவையே  தாண்டாது என்பது எங்களுக்கு பணம் செட்டில் செய்த பிற்பாடுதான் அவர்களுக்கு தெரியும்.

                  விளம்பரம் செய்வதனால் என்ன பயன் என்று விளக்குவதோடு நின்றுவிடாமல் விளம்பரம் டிவியில் வந்த பிறகு நாங்களே ஆள் வைத்து (கொஞ்சம் பணம் செலவானாலும்) போன் செய்து விசாரிக்கும் அந்த தொண்டு இருக்கிறதே அதில் தான் அவர் வீழ்ந்து போவார். அடடா விளம்பரம் செய்த உடனேயே இவ்வளவு ரெஸ்பான்ஸா ...........? அதனால்தான் பெரிய கம்பனிகள் வாரிக்குவிக்கின்றன என்று எண்ணுவார். ஆனால் எங்களுடைய  விசாரிப்புகள்  நாங்கள் பணம் வாங்கும் வரை தான். மேலும் அந்த என்கொயரியால் ஒரு பைசாவிற்க்கு அவருக்கு வியாபாரம் விற்க்கப்போவதில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருடைய பொருள் விற்க்கிறது என்றால் உண்மையிலேயே அவருக்கு மச்சம் இருக்க வேண்டும் அல்லது அவருடைய பொருள் தரமாக இருந்திருக்க வேண்டும்.

               இதில் நடிப்பதற்க்கென்று வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பண்ணும் அலம்பல்களை பற்றி எழுத தனி பதிவே எழுத வேண்டும். அவ்வளவு டார்ச்சர் பண்ணுவார்கள்.  நாம் நினைக்கும் அவுட்புட்டை அவர்களிடம் வாங்குமுன் நமக்கு உயிரே போய்விடும். 
       
டிவியில் வந்தால் அந்த பொருள் தரமானதாகத்தான்  இருக்கும் என்று மக்கள் நம்பும் வரை எங்கள் தொழிலும் நடக்கும் அவர்கள் தொழிலும் நடக்கும்  அனைவருடைய வாழ்வும் சிறக்கும்.

           

Comments

Unknown said…
டிவியில் வந்தால் அந்த பொருள் தரமானதாகத்தான் இருக்கும் என்று மக்கள் நம்பும் வரை///இங்கேதானே வாடிக்கையாளர்கள் வீழ்ந்து விடுகிறோம்.பண்டிகை நேரத்தில் விளைமபரம் பற்றிய நச் என்ற நறுக் பதிவு விஜி!
என்ன சகோ இதை தொடரப்போகிறீர்களா இல்லை அவ்வளவு தானா?

நல்ல தலைப்பு தொடருங்களேன்..
வணக்கம்!
தங்களது பதிவு ஒன்றினை நான் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தரவும்!
http://blogintamil.blogspot.in/2012/11/3.html
நடக்கும் உண்மை...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்....

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...