முதலில் அந்த விளம்பரம் புக் செய்ய அந்த வாடிக்கையாளரை சோப்பு போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் தொழில் நுட்பம். எல்லா வியாபாரிகளுக்கும் தன் விளம்பரத்தை டிவியில் காண ஆசை இருக்கும். ஆனால் அதன் செலவை (சன் டிவி ரேஞ்சுக்கு) அதிகமாக கற்பனை பண்ணி வைத்திருப்பதால் அதை பற்றி ஆலோசிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் நிற்கிறோம்.... மிகவும் குறைந்த செலவில் அதை எடுத்து ( அதற்க்கென்று ஒரு டூபாக்கூர் கான்செப்ட் உருவாக்கி) கொடுத்து அவர்களின் கனவை நனவாக்குகிறோம். அந்த விளம்பரம் அகில உலகமெங்கும் வரும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிக்கும் வேளையில் அவர்கள் கேபிள் டிவி ஏரியாவையே தாண்டாது என்பது எங்களுக்கு பணம் செட்டில் செய்த பிற்பாடுதான் அவர்களுக்கு தெரியும்.
விளம்பரம் செய்வதனால் என்ன பயன் என்று விளக்குவதோடு நின்றுவிடாமல் விளம்பரம் டிவியில் வந்த பிறகு நாங்களே ஆள் வைத்து (கொஞ்சம் பணம் செலவானாலும்) போன் செய்து விசாரிக்கும் அந்த தொண்டு இருக்கிறதே அதில் தான் அவர் வீழ்ந்து போவார். அடடா விளம்பரம் செய்த உடனேயே இவ்வளவு ரெஸ்பான்ஸா ...........? அதனால்தான் பெரிய கம்பனிகள் வாரிக்குவிக்கின்றன என்று எண்ணுவார். ஆனால் எங்களுடைய விசாரிப்புகள் நாங்கள் பணம் வாங்கும் வரை தான். மேலும் அந்த என்கொயரியால் ஒரு பைசாவிற்க்கு அவருக்கு வியாபாரம் விற்க்கப்போவதில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருடைய பொருள் விற்க்கிறது என்றால் உண்மையிலேயே அவருக்கு மச்சம் இருக்க வேண்டும் அல்லது அவருடைய பொருள் தரமாக இருந்திருக்க வேண்டும்.
இதில் நடிப்பதற்க்கென்று வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பண்ணும் அலம்பல்களை பற்றி எழுத தனி பதிவே எழுத வேண்டும். அவ்வளவு டார்ச்சர் பண்ணுவார்கள். நாம் நினைக்கும் அவுட்புட்டை அவர்களிடம் வாங்குமுன் நமக்கு உயிரே போய்விடும்.
டிவியில் வந்தால் அந்த பொருள் தரமானதாகத்தான் இருக்கும் என்று மக்கள் நம்பும் வரை எங்கள் தொழிலும் நடக்கும் அவர்கள் தொழிலும் நடக்கும் அனைவருடைய வாழ்வும் சிறக்கும்.
Comments
நல்ல தலைப்பு தொடருங்களேன்..
தங்களது பதிவு ஒன்றினை நான் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தரவும்!
http://blogintamil.blogspot.in/2012/11/3.html
வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்....