Skip to main content

விளம்பரம் என்னும் மாயஜாலம்


டிவியில் விளம்பர படம் பார்க்கும்போது அதன் பின்னால் இருக்கும் விளம்பர கம்பனியின் உழைப்பு நமக்கு தெரிவதில்லை. நானும் ஒரு காலத்தில் என் நண்பருடன் விளம்பர படம் எடுக்க போனதுண்டு( உப்புமா கம்பனிதான்).  அப்பொழுதுதான் அதிலுள்ள நுணுக்கங்களை கண்டு வியந்து போனேன். 

               முதலில் அந்த விளம்பரம் புக் செய்ய அந்த வாடிக்கையாளரை சோப்பு போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் தொழில் நுட்பம்.  எல்லா வியாபாரிகளுக்கும் தன் விளம்பரத்தை டிவியில் காண ஆசை இருக்கும். ஆனால் அதன் செலவை (சன் டிவி ரேஞ்சுக்கு) அதிகமாக கற்பனை பண்ணி வைத்திருப்பதால் அதை பற்றி ஆலோசிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் நிற்கிறோம்.... மிகவும் குறைந்த செலவில் அதை எடுத்து ( அதற்க்கென்று ஒரு டூபாக்கூர் கான்செப்ட் உருவாக்கி)  கொடுத்து அவர்களின் கனவை நனவாக்குகிறோம். அந்த விளம்பரம் அகில உலகமெங்கும் வரும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிக்கும் வேளையில்   அவர்கள் கேபிள் டிவி ஏரியாவையே  தாண்டாது என்பது எங்களுக்கு பணம் செட்டில் செய்த பிற்பாடுதான் அவர்களுக்கு தெரியும்.

                  விளம்பரம் செய்வதனால் என்ன பயன் என்று விளக்குவதோடு நின்றுவிடாமல் விளம்பரம் டிவியில் வந்த பிறகு நாங்களே ஆள் வைத்து (கொஞ்சம் பணம் செலவானாலும்) போன் செய்து விசாரிக்கும் அந்த தொண்டு இருக்கிறதே அதில் தான் அவர் வீழ்ந்து போவார். அடடா விளம்பரம் செய்த உடனேயே இவ்வளவு ரெஸ்பான்ஸா ...........? அதனால்தான் பெரிய கம்பனிகள் வாரிக்குவிக்கின்றன என்று எண்ணுவார். ஆனால் எங்களுடைய  விசாரிப்புகள்  நாங்கள் பணம் வாங்கும் வரை தான். மேலும் அந்த என்கொயரியால் ஒரு பைசாவிற்க்கு அவருக்கு வியாபாரம் விற்க்கப்போவதில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருடைய பொருள் விற்க்கிறது என்றால் உண்மையிலேயே அவருக்கு மச்சம் இருக்க வேண்டும் அல்லது அவருடைய பொருள் தரமாக இருந்திருக்க வேண்டும்.

               இதில் நடிப்பதற்க்கென்று வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பண்ணும் அலம்பல்களை பற்றி எழுத தனி பதிவே எழுத வேண்டும். அவ்வளவு டார்ச்சர் பண்ணுவார்கள்.  நாம் நினைக்கும் அவுட்புட்டை அவர்களிடம் வாங்குமுன் நமக்கு உயிரே போய்விடும். 
       
டிவியில் வந்தால் அந்த பொருள் தரமானதாகத்தான்  இருக்கும் என்று மக்கள் நம்பும் வரை எங்கள் தொழிலும் நடக்கும் அவர்கள் தொழிலும் நடக்கும்  அனைவருடைய வாழ்வும் சிறக்கும்.

           

Comments

Unknown said…
டிவியில் வந்தால் அந்த பொருள் தரமானதாகத்தான் இருக்கும் என்று மக்கள் நம்பும் வரை///இங்கேதானே வாடிக்கையாளர்கள் வீழ்ந்து விடுகிறோம்.பண்டிகை நேரத்தில் விளைமபரம் பற்றிய நச் என்ற நறுக் பதிவு விஜி!
என்ன சகோ இதை தொடரப்போகிறீர்களா இல்லை அவ்வளவு தானா?

நல்ல தலைப்பு தொடருங்களேன்..
வணக்கம்!
தங்களது பதிவு ஒன்றினை நான் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தரவும்!
http://blogintamil.blogspot.in/2012/11/3.html
நடக்கும் உண்மை...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்....

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா? வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே...... நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து. வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.                                            *********************************** வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள். வாக்காளார் :  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே. நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம் .                                              *********************************** கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் ! பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.                                             *********************************** பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம