Skip to main content

தமிழன்னா சும்மாவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு பார்க் பெஞ்சில்  சந்தோஷமாக இருந்த காதலர்களை போலீஸ்காரர் ஒருவர் கேட்டார்.
”நீங்கள் திருமணம்  செய்துகொள்ளக்கூடாதா ?”
”நாங்கள் திருமணம் ஆனவர்கள்” என்றான் இளைஞன்.
”பிறகு வீட்டிலேயே சந்தோஷமாக இருக்கலாமே ”என்றார் போலீஸ்காரர்.
இவளுடைய கணவரும் எனது மனைவியும் விடமாட்டார்கள்” என்றான் இளைஞன்.
*********************************************************************************

ஸ்விட்சர்லாந்து நாடு.
ரயில் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.
ரயில் குகை ஒன்றின் வழியாக செல்கையில் பெட்டியில் இருள் சூழ்ந்தது. அப்போது “இச்” சென முத்தமுடும் ஒலியும் “ப்ட்”டென அடி கொடுக்கும் ஓலியும் கேட்டன.
குகையை விட்டு ரயில் வண்டி வெளியே வந்து ஓடியது.
நால்வரும் தம்முள் கீழ்க்கண்டபடி நினைத்துக்கொண்டனர்.
முதியவர்: சே ! இந்த இளம் ஆண்மகன் ரொம்ப மோசம். பெண் புத்திசாலி. தன்னை முத்தமிட்டவனை அடித்துவிட்டாளே.

பெண்: இந்த ஆடவரில் யாரோ ஒருவன் கிழவியை போய் முத்தமிட்டிருக்கிறான். நான் இருப்பது எப்படி  தெரியாமல் போனது?.

சிங்களன்:அந்த தமிழன் அந்த பெண்ணையல்லவா முத்தமிட்டிருக்கிறான். ஆனால் அந்த பெண் என்னையல்லவா அடித்துவிட்டாள்.

தமிழன்: என் உள்ளங்கையில் முத்தமிட்டுக்கொண்டு  சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.
*******************************************************************************
AMERICAN      : DO YOU KNOW SWIMMING

INDIAN            : NO

AMERICAN      : DOG IS BETTER THAN YOU. IT SWIM

INDIAN            :  DO YOU KNOW SWIMMING ?


AMERICAN      :    YES

INDIAN             :   THEN WHAT IS THE DIFFERENT BETWEEN YOU AND DOG ????????

Comments

Ha..ha..ha.... அனைத்து ஜோக்குகளும் அருமை...

எங்க ஊரு எம். எல்.ஏ மாதிரி நம்ம தொகுதி பக்கம் வரமாட்டீங்க போல..
Speed Master said…
காமெடி அருமை
நல்லாவே இருக்கு ஜோக்ஸ்!
(ஆளையே காணோமே!)
ட்ரெயின் ஜோக் நல்லா இருக்கு.
பாலா said…
கொஞ்சம் கேள்வி பட்ட ஜோக்குகள்தான். இருந்தாலும் தமிழனை வைத்து சொன்னதால் மற்றொருமுறை சிரித்தேன். நன்றி நண்பரே....
Chitra said…
என்னவோ போங்க....
Unknown said…
வேடந்தாங்கல் - கருன்:
வந்திருந்தேனே.
Unknown said…
நன்றி Speed Master.
Unknown said…
சென்னை பித்தன்:
வந்தேன் உங்க பதிவை படித்தேன். ஒருவேளை பின்னூட்டமிட மறந்திருப்பேன்.
Unknown said…
கக்கு - மாணிக்கம்:
ஆமாங்க அது மட்டும்தான் ரசிக்கும்படியாக இருந்தது என்பது எனக்கும் தெரியும்.நன்றி.
Unknown said…
Chitra said...

என்னவோ போங்க....//
கொஞ்சம் விரக்தி உங்க பதிலில் கவனித்தேன். பதிவு சரியில்லையோ?.
Unknown said…
middleclassmadhavi said...

:-))
நன்றி உங்க சிரிப்புக்கு.
//தமிழன்: என் உள்ளங்கையில் முத்தமிட்டுக்கொண்டு சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.//

இப்படி சொல்லி, சொல்லியே உடம்பை ரணகளப்படுத்தீட்டாய்கய்யா..
Unknown said…
வசந்தா நடேசன்:
வடிவேலு சொன்னமாதிரி இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப்படுத்தீட்டாய்கய்யா..//
சும்மா சிரிங்க தப்பில்லை. தமிழன்னாலே பில்டப் இல்லேன்னா சரிபட்டு வராதே. சர்தார்ஜி மாதிரி ஜோக்ஸ் எழுதினா என்னை ரணகளபடுத்திட மாட்டாங்களா...?
arasan said…
சரியான நகைச்சுவைகள் ...
நல்லா இருக்குங்க /.//
//பெண்: இந்த ஆடவரில் யாரோ ஒருவன் கிழவியை போய் முத்தமிட்டிருக்கிறான். நான் இருப்பது எப்படி தெரியாமல் போனது?.
சிங்களன்:அந்த தமிழன் அந்த பெண்ணையல்லவா முத்தமிட்டிருக்கிறான். ஆனால் அந்த பெண் என்னையல்லவா அடித்துவிட்டாள்.

தமிழன்: என் உள்ளங்கையில் முத்தமிட்டுக்கொண்டு சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.//ஒன்று எனக்கு விளங்கவில்லை;
அல்லது இதில் பொருள் குற்றம் உள்ளது. (நான் நக்கீரன் இல்லை)
பெண் யாரையும் அடிக்கவில்லை. (அவளை யாரும் முத்தமிடவில்லை; அவள் யாரோ கிழவியை முத்தமிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.)
சிங்களவன் அடி பட்டிருக்கிறான். தமிழன் தன கையை தான் முத்தமிட்டுக்கொண்டான். சிங்களவனை யார் அடித்தார்கள்?
Unknown said…
nerkuppai thumbi :
சிங்களனை நானே அடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்//
சிங்களனை வேறு யார் அடிப்பார்கள். தமிழன் தான் காத்திருந்து குகைக்குள் இருட்டில் அடித்துவிட்டான்.
சாரி சாரி; தமிழன் சிங்களவனை அடித்தான்

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந