Skip to main content

மீண்டு வருமா தமிழகம் ......................?

தமிழகத்தில் திமுக , அதிமுக அணிகு மாற்றாக  நல்ல நேர்மையான தலைவரைக்கொண்ட ஒரு கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   தமிழக அரசியலின் அவல நிலையைப் பார்க்கும் போது, பீகார், மேற்க்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைக்காட்டிலும் மிகவும் கேவலமாக போய்விட்டது.     அங்கே நிதிஷ் குமார்,மம்தா பானர்ஜி ஆகியோர் மக்களுக்கு நல்லதை செய்து நல்ல செல்வாக்குடன் உள்ளனர்.   எதிர்கட்சிகள் செல்லாக்காசாகிப்போய்விட்டது.

                         ஆனால் தமிழ் நாட்டில் ஆளுங்கட்சி தோற்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.   தமிழ் நாடு உருப்படவேண்டுமென்றால் அது தோற்றாக வேண்டும் . ஆனால் மாற்று அணி என்று பார்க்கையில்  அதிமுக  நல்ல பலத்துடன் இருப்பது போல் தோன்றினாலும்  அது அனைத்து மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் அணி அல்ல. அவர்களும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல என்றாலும் தப்போ சரியோ  செய்வதை ஆணித்தரமாக செய்யும் துணிவு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அரசியலில் சில குப்பைகளை அகற்றவேண்டியிருப்பதால்  இந்த தடவை  இவர் ஆளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

                       இவர்களுக்கு மாற்றாக தகுதியான ஒரு ஆள் என்று பார்த்தால் அரசியலில் அந்திம காலத்தை நோக்கி நகருகின்ற கட்சியின் தலைவரான வைகோ தென்படுகிறார்.  இவருடைய பேச்சில்  அனல் பறக்கும். இன்றய தலைவர்களில் பேச்சாற்றலில் இவருக்கு நிகர் இவர்தான்.
                           
                           ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு தேவையான  அனைத்து அறிவையும் பெற்றிருந்தாலும் காலம் அவரை  அவர் அறியாமலேயே ஒரு வெற்றிடத்தை நோக்கி கொண்டு செல்கிறது .   அரசியலில்  கோர்வையாக பேசத்தெரியாத  அவருக்கு மிகவும் ஜூனியரான விஜயகாந்த் சாதித்த அளவுக்கு கூட அவர் சாதிக்கவில்லை. என்னதான் திறமையிருந்தாலும் காலம் ஒத்துழைக்கவில்லையென்றால்  என்ன ஆகும் என்பதற்க்கு வைகோ ஒரு சிறந்த முன் உதாரணம்.  இவரை  சார்ந்திருப்பவர்கள் படித்தவர்கள் , நல்ல சிந்தனைவாதிகள்  அவரது தலைவரைப்போல் அதிரடி அரசியல் தெரியாதவர்கள். இவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே  இருக்கிறது.  அனேகமாக இந்த தேர்தல் அவருடைய கட்சியை காணாமல் கூட போக செய்யலாம்.

                          யாருக்கும் பிடிக்காத ஒதுக்கப்பட்ட ஸ்ரீசாந்த் கூட  (ஸ்ரீகாந்துக்கே பிடிக்காத)  அணியில் வர முடிகிறது .   ஒரு வேளை கேரளாவில் இதுக்கான விஷேச  பூஜைகள் இருக்குமோ என்னமோ ?( செய்வினையோ  செயப்பாட்டுவினையோ !! என்ன கருமமோ).  வைகோ இதைப்பற்றி அம்மாவிடம் விசாரிப்பது நலம்.  .   ஓட்டுவங்கி அரசியல் இவருக்கு தெரியாது.  இவரும் சுப்ரமணியம் சாமி மாதிரி ஆகிவிடுவார் என நினைக்கிறேன்.

மருத்துவர் அய்யா மற்றும் திருமா இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள்.  இப்போழுது இருக்கின்ற நிலையை தக்க வைத்துக்கொண்டாலே  இவர்களைப்பொறுத்தவரையில் பெரிய சாதனை தான். இவர்கள்  சேர்ந்திருக்கும் கூட்டணி  இவர்களுக்கு எந்த விதத்தில் உதவும் என்பது தெரியவில்லை.  காங்கிரஸ் தான் மிகவும் பரிதாபகரமான இடத்தில் இருக்கிறது. திமுகா வுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டாலும்  தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி. 

   சீமான் வைகோ வின் இடத்தை ஓரளவு நிரப்பி வருகிறார். அவருக்கும்(தானாக) கூட்டம் கூடுகிறது.   இந்த முறையும் காங்கிராஸூக்கு  பெரிய இழப்பை உண்டாக்குவார் என எதிர்பார்கப்படுகிறது.அவருடைய இலக்கு அடுத்த தேர்தல்தான்.  இந்த தடவை இல்லையென்றாலும் அடுத்த  தேர்தலிலாவது ஒரு  ஊழலில்லாத கட்சி  ஆண்டால் தான் தமிழ் நாடு  சரிவிலிருந்து மீளும். அப்படி ஒரு கட்சியை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல இறைவன் தான்( ரஜினி!!!!!)  உதவ வேண்டும் .

Comments

Anonymous said…
நிச்சயம் மீண்டு வரும்
Unknown said…
ஆர்.கே.சதீஷ்குமார் :
மீண்டு வர வேண்டும். இந்த ஊழல் பெருசாளிகளை களி திங்க வைக்க வேண்டும்.
Unknown said…
FOOD :
வருகைக்கு நன்றி. பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கே. சாப்பாட்டு பிரியரோ ?
Unknown said…
வேடந்தாங்கல் - கருன்:
வருகைக்கு நன்றி. கருன்.
vaiko, seeman, rajini.. full length comedy.
இது பேராசை :))மீண்டு(ம்) வரும்னு எனக்கு நம்பிக்கை இல்லை அண்ணா...:))))
//அப்படி ஒரு கட்சியை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல இறைவன் தான்( ரஜினி!!!!!) உதவ வேண்டும்// அப்படியாவது அவரை அரசியலப் பற்றி வாயத் திறக்க வைக்கலாம்னு பார்க்கறீங்களா!...
காலம் மிக சிறந்த தலைவனை காட்டும்.
பாலா said…
இந்த தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அது நல்ல மாற்றமா என்பது மூன்றாண்டுகள் கழித்துதான் தெரியும்.
Sriakila said…
நல்ல அலசல்.
Unknown said…
ராஜேஷ், திருச்சி:
கேப்டனை விட்டு விட்டீகள் அவரும் காமெடியாக சித்தரிக்கப்பட்டவர்தான். காமெடி ஹிட்டானால் ....? . கலைஞரை விட காமெடி பண்ண இனி உலகில் யாரும் இல்லை. டெல்லி காமெடி படு சூப்பர்.
Unknown said…
ஆனந்தி.:
கண்டிப்பாக மீண்டுவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
Unknown said…
middleclassmadhavi :
ரஜினி அதுக்கெல்லாம் லாயக்கு இல்லை.
Unknown said…
தமிழ் உதயம்:
அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.
Unknown said…
பாலா:
அம்மா திருந்தினா அம்மாவுக்கும் தமிழகத்துக்கும் நல்லது. இல்லையென்றால்............ அதுவும் கடந்து போகும்.
Unknown said…
Sriakila said...:
கருத்துக்கு நன்றி.
சீமான்?? ஆசை, தோசை, அப்பளம், வடைடடட... சில கருத்துகளோடு நான் மாறுபடுகிறேன். ஜெயலலிதாவால் என்ன நடக்கும் என்று நண்பர் ராம்சாமி இன்று எழுதியிருந்தார், கிட்டதட்ட அதுதான் நடக்க வாய்ப்பு என்று நானும் நினைக்கிறேன். நாம்/நாடு இந்த விஷயத்தில் இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டியிருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
Unknown said…
வசந்தா நடேசன் :
ஜெயலலிதா வந்தால் என்ன நடக்கும் என்பதை அனுபவித்துவிட்டோம். கலைஞர் சாகசத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம். இரண்டுமே ஊழல் வாதிகள் தான். அதனால் தானே மாற்றுபற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது. சீமானை பற்றி அனுமானிக்கலாம் ஆனால் அது சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே.
Unknown said…
ஆயிஷா:
நன்றி ஆயிஷா.
எல்லாதகுதியும் இருந்தும் இல்லாமல் போனவராக வைக்கோ இருப்பது அவருடைய முடிவெடுக்கும் திறனால் தான்.
அவர்மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தது அவரை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கியது. இதை அவர் செய்தே இருக்கக்கூடாது. வாழ்வோ தாழ்வோ அவர் தனக்கு கிடைத்த தொண்டர்படை மூலம் தனித்து இயங்கி அரசியல் செய்திருந்தால் இந்நாளில் அவர் ஒருவர்தான் தி.மு.க.-அ.இ.அ. தி.மு.க. - காங்கிரஸ் இவைகளுக்கு மாற்றாக வளர்ந்திருப்பார். வலது, இடது கம்யூனிஸ்ட் களும் இவருக்கு பக்க பலமாக இருந்திருப்பார்கள். அவராலேயே அவர் கெட்டார்.மீண்டும் அ.இ.அ. தி.மு.க வுடன் கூட்டு என்பதால் அவர்மீது இருந்த நம்பிக்கையை விட்டனர் நம் மக்கள்.
இன்று நாம் ஜெ யைத் தவிர வேறு மாற்று சக்தி இல்லாத ஒரு நிலையில் இருக்கிறோம்!’இவருக்கு அவர் மேல்’ என்று எண்ண வேண்டியதுதான்!
rajamelaiyur said…
Why don t give one chance to vijaykanth? . . .
rajamelaiyur said…
Why don t give one chance to vijaykanth? . . . By www.kingraja.co.nr
TamilTechToday said…
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...