ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்று எல்லா மதத்திலும் சொல்லப்படுகிற நபர் உண்மையிலேயே இருக்கிறாரா ???? இருந்தால் நம் மன்மோகன் சிங் மாதிரி யார் எது சொன்னாலும் ஏன் இப்படி காது கேட்காத மாதிரியே இருக்கிறார்.
இப்படி கேட்க காரணம் இருக்கிறது. யார் அதிகம் அவரை தொழுகிறார்களோ அவர்கள் அதிகம் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அதிலும் எனக்கு ஒரு சந்தேகம் அதிகம் கஷ்டத்தில் இருப்பதால் தான் அவர்கள் கடவுளை தொழுகிறார்களா இல்லை ... கடவுளை தொழுவதால் தான் கஷ்டப்படுகிறார்களா???
ஏனென்றால் கடவுள் பெயரை செல்லி கடவுளின் ஏஜெண்டாக பணிபுரியும் நபர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். எல்லா மதத்தில் அப்படிப்பட்ட ஏஜெண்டுகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அட்டூழியம் மிக.... மிக..... அதிகம். ஏன் நாம் ஏதாவது கேட்டால் கடவுள் செவி சாய்க்க மாட்டாரா ???? இல்லை இந்த ஏஜெண்ட் சொன்னால் தான் கேட்பாரா???
கடவுள் உண்மையில் இருக்கிறார் என்றால் இந்த டுபாக்கூர் (நல்லவர்களை பற்றி நான் சொல்லவே இல்லை) ஏஜெண்டுகளை ஏன் இவர் தண்டிக்காமல் வைத்திருக்கிறார்...???? அநியாயம்.... ஏமாற்று எல்லாம் எல்லை கடந்து போய் கொண்டு இருக்கிறது. ஒரு வேளை கடவுள் என்ற ஒரு நபர் இல்லையோ???? அப்படியும் நம்ப வழியில்லை.
அதற்க்கும் காரணம் இருக்கிறது படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளி என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என்றார் நடிகர் ரஜினிகாந்த். அட அதுவும் சரியாத்தானே இருக்கு.....!!!!!!!அவர் கொஞ்சம் நியாயமாக பேசுபவர் என்கிற காரணத்தினால் அதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அநாதைகள் அனைவரும் இறைவனின் குழந்தை என்றால் இறைவனுக்கும் வேண்டும் குடும்பக்கட்டுப்பாடு என்றார் உலக நாயகன். அவர் எதையும் கொஞ்சம் “அதிகமாக” பேசுபவர் என்றாலும் இறைவன் பற்றி சொல்வதால் ஒருவேளை இறைவன் இருப்பாரோ என்கிற ஒரு டவுட்டுதான்.
அதுபோக சாமியாட்டம்,குறி சொல்லுதல்,காவடி எடுத்தல், அலகு குத்துதல் என்று இந்து மதத்திலும் மற்றபடி பிசாசுகளை விரட்டுதல், தெய்வீக சுகமளித்தல்,பரலோகத்தில் இடம் வாங்கி கொடுத்தல் என்று மற்ற மதங்களில் இருப்பதை பார்க்கும்போது ஏதோ ஒன்று இருப்பதாகவே படுகிறது.
என்னுடைய டவுட்டு இதுதான்,கடவுள் இருந்தால் அவரை எதிர்நோக்கி ஒரு கூட்டம் புழுவாய் துடிக்க அவர் ஏன் மன்மோகன் சிங் மாதிரி சும்மா இருக்கிறார்...??? இறைவன் இல்லையென்று சொல்லவும் முடியவில்லை. சரி இந்த டவுட்டை இமயமலை உச்சியில் 2000 ஆண்டுகளாக ஒரு சித்தரிடம் கேட்டேன். அப்படி கேளு இந்த டவுட்டு இவ்வளவு நாளும் எனக்கே இருந்தது இப்பதான் க்ளீயர் ஆச்சு என்று அங்கு நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தார்.
அதாவது அவர் தியானத்தில் இருப்பது ஒரு அடர்ந்த காடு. அதன் அருகே ஒரு அமைதியாக ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது நீரில் ஒரு சிறிய சலசலப்பு. இவர் லேசாக ஓட்டைக்கண் போட்டு பார்த்தால் ஒரு மானிடன் (Mr.A) அந்த நதியில் கையால் வாரி நீர் அருந்துகிறான். இவன் எப்படி இங்கு ஆள் அரவமில்லாத இடத்தில் இருக்கிறான் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவன் மடியில் இருந்த பர்ஸ் நழுவி கீழே விழுவதை கவனிக்கிறார். அவனும் கவனிக்காமல் போய்விட்டான். சிறிது நேரம் கழித்து மற்றோரு மனிதன்(Mr.B) அந்த வழியே வருகிறான் அவன் அந்த பர்ஸை பார்த்ததும் எடுத்து சென்று விட்டான். சிறிது நேரத்தில் மூன்றாவதாக ஒரு மனிதன்(Mr.C) அங்கே வந்து தன் கையை கழுவிக்கொண்டிருக்கும்போது Mr.A அங்கு வந்து அவனிடம் அந்த பர்ஸை கேட்கிறார் ஆனால் Mr.C தான் அதை பார்க்கவேயில்லை எனவும் தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது எனவும் கூறுகிறார். ஆனால் Mr. A அதை கேட்காமல் அவரை துவைத்தெடுக்க Mr. C அந்நியாயமாக இறந்தே விடுகிறார்.
இதை பார்த்து நொந்து போன முனிவர் கடவுளிடம் கேட்கிறார். கடவுளே என் கண் முன்னே இப்படி ஒரு நிரபராதி அநியாயமாக கொல்லப்படுகிறானே. பர்சை எடுத்தவன் அழகாக தப்பிவிட்டானே இது என்ன நீதி என்கிறார். அதற்க்கு கடவுள் பதிலளிக்கையில் உன் பார்வையில் நீ சொன்னது சரி. ஆனால் என் பார்வையில் நடந்து என்னவென்று கேள். Mr. A என்பவன் Mr.B யின் தகப்பனிடம் இருந்து பர்சை திருடிக்கொண்டு வந்தான். Mr.C என்பவன் கொலைகாரன் அவன் Mr.A யின் தகப்பனை கொலை செய்துவிட்டு கையை கழுவ வந்தவன். Mr.B யிடம் அவன் தகப்பனிடம் இருந்து கொள்ளை போன பணத்தை ஒப்படைத்தேன். அதே போல் Mr. A யின் தகப்பனை கொன்றதால் அந்த பாவத்தின் சம்பளத்தை இவன் கையால் கொடுப்பதே சரி என்பதால் அதை செய்தேன் என்றார்.
கடவுள் ஒரு சம்பவத்தை wide lence போட்டு பார்க்கிறார். அவரால் அது சாத்தியமாகிறது. ஆனால் நாம் அதே சம்பவத்தை zoom ல் பார்த்து புரியாமல் புலம்புகிறோம். நமக்கு புரியவில்லை என்பதற்க்காக அது இல்லை என்று ஆகிவிடாது அல்லவா.??????????????
Comments
நன்றி ஐயா.
very logical..
very convincing..
ABC story is very fine..
very logical..
very convincin//
அந்த கதைதான் கரு. abc போடாமல் எழுதியிருந்தால் புரிவதில் குழப்பம் ஏற்பட்டிருக்கும்.
உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
போறப்ப சொல்லிட்டு போங்க சாமியோ. நானும் வரேன்,
(வேற வெனையே வேண்டாம்)
அந்த பாவம் உங்களையே சாரும்.
வலையில் ,பிளாகரில் இறை நம்பிக்கை பற்றி எல்லாம் எழுதி பத்தோடு பதினொன்றாக நீங்களும் ஆகாதீர்கள்.
இங்கு இது போன்ற கருத்துக்களை சொல்ல இவைகள் சரியான தளங்களே அல்ல.
ஏற்கனவே வலையில் ,பிளக்கரில் எண்ணற்ற "கேணைகள்" மற்றும் "மோடு முட்டிகள் "இருகின்றனர். நீங்களும் அதில் சேர வேண்டாமே.
இங்கு ஒன்றும் புனிதமும், தெய்வீகமும் ,அமைதியும் வாழவில்லை. சும்மா ஒரு பொழுது போக்காக இருக்கட்டும். அவ்வளவுதான். இந்தமுடிவுக்கு நான் வந்து ரொம்ப நாள் ஆகிறது. ஒன்றும் குறைந்து விடவில்லை.
நிறைய மிகைபடுத்தி எழுதவும், ஐயோ என் மதம் என்று அலறும் பொய்யர்களும் மட்டுமே இங்கு நிறைய உண்டு. இதில் நீங்கள் படித்து அறிய ஒரு குந்தானியும் இல்லை. தொழில் நுட்ப பதிவுகள் மட்டுமே இங்கு மதிக்கப்படவேண்டும். மற்றதெல்லாம் வெறும் குப்பைகலாகிவிட்டன விஜி.