Skip to main content

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் !!!!!!!!!!!!!




              ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்று எல்லா மதத்திலும் சொல்லப்படுகிற நபர் உண்மையிலேயே இருக்கிறாரா ???? இருந்தால் நம் மன்மோகன் சிங் மாதிரி யார் எது சொன்னாலும் ஏன் இப்படி காது கேட்காத மாதிரியே இருக்கிறார்.

                ப்படி கேட்க காரணம் இருக்கிறது. யார் அதிகம் அவரை தொழுகிறார்களோ அவர்கள் அதிகம் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அதிலும் எனக்கு ஒரு சந்தேகம் அதிகம் கஷ்டத்தில் இருப்பதால் தான் அவர்கள் கடவுளை தொழுகிறார்களா இல்லை ... கடவுளை தொழுவதால் தான் கஷ்டப்படுகிறார்களா???

                   ஏனென்றால் கடவுள் பெயரை செல்லி கடவுளின் ஏஜெண்டாக பணிபுரியும் நபர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். எல்லா மதத்தில் அப்படிப்பட்ட ஏஜெண்டுகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அட்டூழியம் மிக.... மிக..... அதிகம்.  ஏன் நாம் ஏதாவது கேட்டால் கடவுள் செவி சாய்க்க மாட்டாரா ????  இல்லை இந்த ஏஜெண்ட் சொன்னால் தான் கேட்பாரா???
கடவுள் உண்மையில் இருக்கிறார் என்றால் இந்த டுபாக்கூர் (நல்லவர்களை பற்றி நான் சொல்லவே இல்லை) ஏஜெண்டுகளை ஏன் இவர் தண்டிக்காமல் வைத்திருக்கிறார்...???? அநியாயம்.... ஏமாற்று எல்லாம் எல்லை கடந்து போய் கொண்டு இருக்கிறது. ஒரு வேளை கடவுள் என்ற ஒரு நபர் இல்லையோ???? அப்படியும் நம்ப வழியில்லை.


                           தற்க்கும் காரணம் இருக்கிறது படைப்பு என்று ஒன்று இருந்தால்  படைப்பாளி என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.  அட அதுவும் சரியாத்தானே இருக்கு.....!!!!!!!அவர் கொஞ்சம்  நியாயமாக பேசுபவர் என்கிற காரணத்தினால் அதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அநாதைகள் அனைவரும் இறைவனின் குழந்தை என்றால் இறைவனுக்கும் வேண்டும் குடும்பக்கட்டுப்பாடு என்றார் உலக நாயகன். அவர் எதையும் கொஞ்சம் “அதிகமாக” பேசுபவர் என்றாலும்  இறைவன் பற்றி சொல்வதால் ஒருவேளை இறைவன் இருப்பாரோ என்கிற ஒரு டவுட்டுதான்.


                      துபோக சாமியாட்டம்,குறி சொல்லுதல்,காவடி எடுத்தல், அலகு குத்துதல் என்று இந்து மதத்திலும் மற்றபடி பிசாசுகளை விரட்டுதல், தெய்வீக சுகமளித்தல்,பரலோகத்தில் இடம் வாங்கி கொடுத்தல் என்று மற்ற மதங்களில் இருப்பதை பார்க்கும்போது ஏதோ ஒன்று இருப்பதாகவே படுகிறது.

                     என்னுடைய டவுட்டு இதுதான்,கடவுள் இருந்தால் அவரை எதிர்நோக்கி ஒரு கூட்டம் புழுவாய் துடிக்க அவர் ஏன் மன்மோகன் சிங் மாதிரி சும்மா இருக்கிறார்...???  இறைவன் இல்லையென்று சொல்லவும் முடியவில்லை. சரி இந்த டவுட்டை இமயமலை உச்சியில் 2000 ஆண்டுகளாக ஒரு சித்தரிடம் கேட்டேன். அப்படி கேளு இந்த டவுட்டு இவ்வளவு நாளும் எனக்கே இருந்தது இப்பதான் க்ளீயர் ஆச்சு என்று அங்கு நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தார்.

                         தாவது அவர் தியானத்தில் இருப்பது ஒரு அடர்ந்த காடு.  அதன் அருகே ஒரு அமைதியாக ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது நீரில் ஒரு சிறிய சலசலப்பு. இவர் லேசாக ஓட்டைக்கண் போட்டு பார்த்தால் ஒரு மானிடன் (Mr.A) அந்த நதியில் கையால் வாரி நீர் அருந்துகிறான். இவன் எப்படி இங்கு ஆள் அரவமில்லாத இடத்தில் இருக்கிறான் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவன் மடியில் இருந்த பர்ஸ் நழுவி கீழே விழுவதை கவனிக்கிறார். அவனும் கவனிக்காமல் போய்விட்டான். சிறிது நேரம் கழித்து மற்றோரு மனிதன்(Mr.B) அந்த வழியே வருகிறான் அவன் அந்த பர்ஸை பார்த்ததும் எடுத்து சென்று விட்டான். சிறிது நேரத்தில் மூன்றாவதாக ஒரு மனிதன்(Mr.C)  அங்கே வந்து தன் கையை கழுவிக்கொண்டிருக்கும்போது Mr.A   அங்கு வந்து அவனிடம் அந்த பர்ஸை கேட்கிறார் ஆனால் Mr.C தான் அதை பார்க்கவேயில்லை எனவும் தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது எனவும் கூறுகிறார். ஆனால் Mr. A  அதை கேட்காமல் அவரை துவைத்தெடுக்க Mr. C அந்நியாயமாக இறந்தே விடுகிறார்.

                       இதை பார்த்து நொந்து போன முனிவர் கடவுளிடம் கேட்கிறார். கடவுளே என் கண் முன்னே இப்படி ஒரு நிரபராதி அநியாயமாக கொல்லப்படுகிறானே. பர்சை எடுத்தவன் அழகாக தப்பிவிட்டானே இது என்ன நீதி என்கிறார். அதற்க்கு கடவுள் பதிலளிக்கையில் உன் பார்வையில் நீ சொன்னது சரி. ஆனால் என் பார்வையில் நடந்து என்னவென்று கேள். Mr. A என்பவன் Mr.B யின் தகப்பனிடம் இருந்து பர்சை திருடிக்கொண்டு வந்தான். Mr.C என்பவன் கொலைகாரன் அவன் Mr.A யின் தகப்பனை கொலை செய்துவிட்டு கையை கழுவ வந்தவன். Mr.B யிடம் அவன் தகப்பனிடம் இருந்து கொள்ளை போன பணத்தை ஒப்படைத்தேன். அதே போல் Mr. A யின் தகப்பனை கொன்றதால் அந்த பாவத்தின் சம்பளத்தை இவன் கையால் கொடுப்பதே சரி என்பதால் அதை செய்தேன் என்றார்.
   
                   டவுள் ஒரு சம்பவத்தை wide lence  போட்டு பார்க்கிறார். அவரால் அது சாத்தியமாகிறது. ஆனால் நாம் அதே சம்பவத்தை zoom ல் பார்த்து புரியாமல் புலம்புகிறோம். நமக்கு புரியவில்லை என்பதற்க்காக அது இல்லை என்று ஆகிவிடாது அல்லவா.??????????????


Comments

Unknown said…
ஒரு U டர்ன் போட்டு வந்தாப்ல இருக்கு மாப்ள எனக்கு ஹிஹி!
குட்டிக்கதைஅருமை விஜயன்.கடவுளின் செயல்களின் காரணம் நமக்குப் புரிவதில்லை.
பள்ளிக்கூடம் போகும் மாணவன் தான் சோதனை எழுதும் சோதனைக்கு ஆளாகிறான்!!!!!இறையை நேசிப்பவன் தான் சோதனைக்கு ஆளாகிறான்!!பாக்யராஜ் பாணியில் குட்டிக்கதை!!!நன்று!!
பாலா said…
சூப்பரா விளக்கம் சொல்லிட்டீங்க. நமக்கு பிடித்த தண்டனையை ஒருவர் பெறவில்லை என்பதற்காக அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று அர்த்தம் ஆகி விடாது. செய்த வினைக்கு பலன் வந்தே தீரும்.
அருமையான பதிவு.
நன்றி ஐயா.
ABC story is very fine..
very logical..
very convincing..
Unknown said…
@ விக்கியுலகம் : ஏதோ மனதில் தோன்றுபவற்றை கிறுக்கி விடுகிறேன்.வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி தலைவா.
Unknown said…
@ சென்னை பித்தன் : கதை சொல்லி புரியவைத்தால்தான் எளிதாக நாம் சொல்லவந்த கருத்து புரிகிறது.கருத்துக்கு நன்றி ஐயா.
Unknown said…
@ செல்விகாளிமுத்து : சோதனைக்கும் இறை நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லை.பணத்திற்க்கும் இறை உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை. நம் பூர்வ ஜென்ம கர்மபலன் எப்படியோ அப்படி அமைகிறது இவ்வுலக வாழ்க்கை.உங்களுடைய கருத்திற்க்கு நன்றி தோழி.
Unknown said…
@ Rathnavel Natarajan :என்னுடைய எழுத்தை பொறுமையாக படித்ததற்க்கு நன்றி ஐயா.
Unknown said…
Madhavan Srinivasagopalan said...
ABC story is very fine..
very logical..
very convincin//

அந்த கதைதான் கரு. abc போடாமல் எழுதியிருந்தால் புரிவதில் குழப்பம் ஏற்பட்டிருக்கும்.
Kumari said…
நன்றி, விஜயன் சார். உங்களுடைய கதை மிகவும் அருமை. நடப்பவை எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை விளக்கியது. கடவுள் இருக்கிறார், அவர் நமக்கு உரியதை உரிய நேரத்தில் தருவார்.
Unknown said…
@ Kumari :
உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
தமிழ் பதிவரில் ஒருவர் சித்தராகி வருகிறார்.
போறப்ப சொல்லிட்டு போங்க சாமியோ. நானும் வரேன்,
(வேற வெனையே வேண்டாம்)
Riyas said…
ம்ம்ம்
Unknown said…
@ கக்கு - மாணிக்கம் : இன்றைக்கும் இறை நம்பிக்கையை மையப்படுத்தி ஒரு பதிவு எழுதாலம் என்று வந்தேன். உங்களால் அதை கை விடுகிறேன்.
அந்த பாவம் உங்களையே சாரும்.
அதை எழுதாமல் இருந்ததால் வந்த புண்ணியம் கூட என்னையே சேரும் விஜி.
வலையில் ,பிளாகரில் இறை நம்பிக்கை பற்றி எல்லாம் எழுதி பத்தோடு பதினொன்றாக நீங்களும் ஆகாதீர்கள்.
இங்கு இது போன்ற கருத்துக்களை சொல்ல இவைகள் சரியான தளங்களே அல்ல.
ஏற்கனவே வலையில் ,பிளக்கரில் எண்ணற்ற "கேணைகள்" மற்றும் "மோடு முட்டிகள் "இருகின்றனர். நீங்களும் அதில் சேர வேண்டாமே.
Unknown said…
கக்கு - மாணிக்கம் : என்னதான் எழுதுவது ஒரு ஐடியா கொடுங்களேன். யாரையாவது திட்டி எழுதுவதுதான் பிளாகில் ஃபேஷனாகி வருகிறது.எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏதோ படிக்கிறவன் கொஞ்சம் சிரிக்க வேண்டும் என் நோக்கம் அவ்வளவுதான்.
Unknown said…
கக்கு - மாணிக்கம் : என்னதான் எழுதுவது ஒரு ஐடியா கொடுங்களேன். யாரையாவது திட்டி எழுதுவதுதான் பிளாகில் ஃபேஷனாகி வருகிறது.எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏதோ படிக்கிறவன் கொஞ்சம் சிரிக்க வேண்டும் என் நோக்கம் அவ்வளவுதான்.
எழுதியே ஆக வேண்டும் என்று என்ன நிர்பந்தம்? சும்மா. ஜாலியா பிடித்த பகுதிகளில் வளம் வரலாமே. நக்கலாக பின்னூட்டம் இடலாம். ரொம்பவும் சீரியசான கருத்துக்கள் என்றால் படிப்பதோடு நின்று விடவேண்டும். பின்னூட்டம் இட்டு நம் மேதாவித்தனத்தை காட்டி கண்டவர்களிடமும் கல்லடி படவேண்டாமே.

இங்கு ஒன்றும் புனிதமும், தெய்வீகமும் ,அமைதியும் வாழவில்லை. சும்மா ஒரு பொழுது போக்காக இருக்கட்டும். அவ்வளவுதான். இந்தமுடிவுக்கு நான் வந்து ரொம்ப நாள் ஆகிறது. ஒன்றும் குறைந்து விடவில்லை.

நிறைய மிகைபடுத்தி எழுதவும், ஐயோ என் மதம் என்று அலறும் பொய்யர்களும் மட்டுமே இங்கு நிறைய உண்டு. இதில் நீங்கள் படித்து அறிய ஒரு குந்தானியும் இல்லை. தொழில் நுட்ப பதிவுகள் மட்டுமே இங்கு மதிக்கப்படவேண்டும். மற்றதெல்லாம் வெறும் குப்பைகலாகிவிட்டன விஜி.
சிறுகதை மூலம் சிறப்பான கருத்து பகிர்வு.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந