எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு”. ஏதோ வந்தோமா ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக்கொல்கிறேன்.
பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.
முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால் சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன்... ஒரு காலகட்டத்தில் அந்த கிறுக்கல் கிறுக்காக மாறவே அதிலிருந்து கொஞ்சம் விலகி முகநூலில் அடியெடுத்து வைத்தேன்.
முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட அதிக நேரம் தேவையில்லை என்பதாலும்..... முக்கியமாக தொடர் பதிவு என்ற மிரட்டல் இல்லவே இல்லை என்பதாலும் ,அதிக புதிய நண்பர்கள் கிடைத்ததாலும்,நண்பர்களின் நேரடி தொடர்பு ஏற்படுவதாலும் பதிவுலகத்தை விட்டு மெதுவாக அந்நியப்பட துவங்கினேன். அந்த நேரத்தில் முகநூலும் மிகவும் பிடித்து போய்விடவே அங்கேயே நேரத்தையும் எதிர்காலத்தையும் கொன்று கொண்டிக்கொண்டிருக்கும் அந்த உன்னத நேரத்தில் தான் வந்தது நாஞ்சில் மனோவின் இந்த ஒரு ”தொடர் பதிவின்” அழைப்பு.
Harish Durai Raj.(என்னை பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியவர்) |
இதன் மூலம் பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைவூட்டிய நண்பர் நாஞ்சில் மனோவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அண்ணன் திண்டுக்கல் தனபாலன் சொல்லாவிட்டால் இந்த அழைப்பு எனக்கு தெரியாமலேயே போயிருக்கும். அந்த வகையில் அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். அது ஒருபுறம் இருக்க.... இது தொடர் பதிவு என்பதால் இன்னும் தொடர வேண்டும் என்ற ஒரு மரபு இருப்பதால் ஒரே ஒரு நபரை மட்டும் தொடர அழைக்கிறேன்..... காரணம் எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்கள் வட்டத்தை மனோவே அழைத்துவிட்டார். எனவே பதிவுலகில் இருந்தாலும் தற்போது தொடர்பில் இருக்கும்
தோழி S.K. SELVI யை மட்டும் தொடர அழைக்கிறேன்.
பதிவுலகத்திற்கு உயிர் கொடுக்க என்னால் இயன்ற முயற்சியை நானும் செய்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.
Comments
திருக்குறளைப்போல சுருங்கச்சொல்லினும் சிறக்கவே சொல்லிவிடைபெற்றுவிட்டிர் விஜி.
தொடர்ந்து இதிலும் (Blog) கலக்க வாழ்த்துக்கள்...
கணிப்பொறி வாங்கியதை சின்ன தொடர்பதிவா எழுதியிருகாரு விஜயன் அண்ணா...
எப்படியோ தப்பிச்சிட்டாரு....
//ஏதோ வந்தோமா ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற என்னை ///
நீங்களும் நானும் ஒன்றுதான் ஆனால் ஒரே ஒரு வேறுபாடு நீங்கள் கிறுக்குவது பேஸ்புக்கில் நான் கிறுக்குவது வலைத்தளத்தில் அவ்வளவுதான் வித்தியாசம்
மனோ அண்ணா கவனிக்க...
கணிப்பொறி வாங்கியதை சின்ன தொடர்பதிவா எழுதியிருகாரு விஜயன் அண்ணா...
எப்படியோ தப்பிச்சிட்டாரு....//
ஆமாய்யா குமார், தப்பிச்சிட்டாருன்னு நினைப்பாம் ஹி ஹி...
சத்தியமா எனக்கு அந்த சிக்கன் கறி வேண்டாம், மெஸ்ஸில் மீன் கரி சாப்பாடு வாங்கி தரவும்.
என்ன ஓய் டாஸ்மாக் பக்கம் இருக்கீறோ ?
அவரு வலைத்தளங்களின் சந்து பொந்து ஒன்னும் விடாம புகுந்து விளையாடிட்டு இருக்காருய்யா....!
இம்புட்டு பிசியிலும் உங்களுக்கு மதிப்பளித்து உடனே பதிவு போட்டுட்டாங்களே டீச்சர்....... வாவ் கிரேட்....!
எனக்கு மதிப்பளித்து உடனே பதிவிட்ட உமக்கும் எனது நன்றிகள் மக்கா....!