Skip to main content

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...................................

 நண்பர் : ஏம்பா ...வீடு ஒழுகுதே .... ஓடு  மாத்தக்கூடாதா?

வீட்டுக்காரர் : இப்ப எப்பிடி மாத்தமுடியும்....... அதான் மழை பெய்யுதே......

நண்பர் : அட நீ ஒண்ணு.... இப்பவா மாத்த சொன்னேன் ... வெயில் காலம் வருமில்ல அப்ப மாத்து.

வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே.   
                                        ***********************************

வேட்பாளர் : பொதுமக்களே ! வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம் குப்பை தொட்டியில்  போடுங்கள்.

வாக்காளார்:  என்னப்பா இது அநியாயம்.... வாக்கை குப்பை தொட்டியில் போட சொல்றாரே.

நண்பர்  : அது  ஒண்ணுமில்லீங்க......... அவருடைய சின்னம்  குப்பை தொட்டியாம்.
                                             ***********************************

கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன்!  உனக்கு என்ன வேணும் கேள் !

பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம்  கடவுள் -னு நான் எப்படி நம்பறது.
                                            ***********************************

பெரியவர்  : தம்பி உடம்பு சரியில்லையா.... டாக்டரிடம் போய் வா................
இளைஞன் : போய்தான் ஆகணுமா?

பெரியவர்  :ஆமாம்........... டாக்டர் பிழைக்கணும்.

இளைஞன் : அவர் நிறைய மருந்து எழுதுவாரே.

பெரியவர்  : எல்லா மருந்தையும் வாங்கு ..... ஏன்னா மருந்துகடைக்காரர் பிழைக்கணும்.

  இளைஞன் :    அவ்வளவும் சாப்பிட்டே ஆகணுமா ?

  பெரியவர்  : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்.  
                                *************************************    

மாணவர்கள் : (கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது உட்கார்ந்துள்ள      குரங்கைப்பார்த்து)  ஹை ..............குரங்குடா.............

ஆசிரியர் : (அவரும்  பார்த்துவிட்டு கிண்டலாக  என்ன நியூ அட்மிஷனா.........

மாணவன்  : இல்ல சார்  நியூ அப்பாயின்மெண்ட் சார் !
                                     ************************************ 

ஆசிரியர் : மாணவர்களே நல்ல கவனியுங்க..... இந்த குடுவையில் அமிலம் இருக்கு..... இப்ப நான் என் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை  இதுல போடறேன்...... இது கரையுமா !   கரையாதா!
மாணவர்கள் : (ஒரே குரலில்) கரையாது சார்.................

ஆசிரியர் : வெரிகுட் ! எல்லோரும் கரெக்டா சொல்லிட்டீங்களே !


 மாணவர்கள் :   கரையிரமாதிரி இருந்தா உங்க காசை போடுவீங்களா 
சார் !..........................    
                           ****************************************


அடிபட்டவர் : ஏண்டா மோதினே ?

இடித்தவர்  : பிரேக் பிடிக்கல சார் !

 அடிபட்டவர் : பார்க்க புது வண்டியா இருக்கு பிரேக் பிடிக்கலேன்னு பொய் சொல்றியே !

இடித்தவர் : நான் பிரேக் பிடிக்கல சார்.

                               *****************************************                    

Comments

////பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம் கடவுள் -னு நான் எப்படி நம்பறது.
பெரியவர் : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்.////

ரசித்தேன்.
அஸ்மா said…
முதல் ஜோக் சூப்பர்! அடுத்தவங்க அட்வைஸ கேட்காம உண்மையிலேயே இதுபோல பேசுறவங்களும் இருக்காங்க சகோ.
arasan said…
அனைத்தும் கல கல ...
Unknown said…
அஸ்மா :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஸ்மா.
Unknown said…
வசந்தா நடேசன் :
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.
Unknown said…
T.V.ராதாகிருஷ்ணன் :
வருகைக்கும் உங்களுடைய சிரிப்பிற்க்கும் நன்றி.
Unknown said…
அரசன் :
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.
பாலா said…
விரசமில்லாத தரமான நகைச்சுவைகள். வாழ்த்துக்கள்.
Unknown said…
பாலா :
நன்றி பாலா வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.மீண்டும் வருக.
//வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே. //

//கரையிரமாதிரி இருந்தா உங்க காசை போடுவீங்களா சார் !....//

//நான் பிரேக் பிடிக்கல சார்.//

Top.. hahahaaa :)
வெறும் கடியாக இல்லாமல் உண்மையிலேயே நல்ல ஜோக்ஸ்!
iniyavan said…
நண்பரே,

நான் முதலில் இனியவன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைப்பூ முகவரி:

www.iniyavan.com

நிறைய பெயர் அதே பெயரில் எழுதுவதால் நான் என் ஒரிஜினல் பெயருக்கு மாறிவிட்டேன்.

இன்னும் சிலரும் இதே பெயரில் எழுதுவதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்.
குப்பைத்தொட்டிச் சின்னம் நல்ல ஐடியாவாக இருக்கிறது :))
Unknown said…
இளங்கோ :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
Unknown said…
middleclassmadhavi:
அது மட்டும் தான் என்னுடைய alteration. original கிணற்றில் என்று இருந்தது.வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
Unknown said…
சென்னை பித்தன் :
சென்னை காதலரின் வருகைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
Unknown said…
என். உலகநாதன் :
அறிவுரைக்கு நன்றி. நானும் யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அதிவிரைவில் இயற்பெயருக்கு மாறுகிறேன்.
//பக்தன் : எனக்கு என்ன வேணும்னு தெரியாத நீயெல்லாம் கடவுள் -னு நான் எப்படி நம்பறது//

பின்னே கேள்வி சரிதானே....
//பெரியவர் : எதையும் சாப்பிடாதே .... ஏன்னா நீ பிழைக்கணும்//

அடபாவமே என்னய்யா நடக்குது இங்கே....
//வீட்டுக்காரர் : அப்ப எதுக்கு மாத்தணும்........ அப்பதான் ஒழுகாதே//

சரியான எடக்கரடக்கல் ஆளா இருப்பானோ...
Unknown said…
MANO நாஞ்சில் மனோ:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
Unknown said…
தோழி பிரஷா :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
aranthairaja said…
மொட்டைவேயில் பயணத்தில் ஒற்றைமர நிழல்போல் ஆர்ப்பட்டமில்லாத அழகான நல்ல பதிவு...
நல்லா சிரிச்சாச்சு.பேரை மாத்திட்டிங்க???
Unknown said…
ஸாதிகா said...

நல்லா சிரிச்சாச்சு.பேரை மாத்திட்டிங்க???//



Blogger என். உலகநாதன் said...

நண்பரே,

நான் முதலில் இனியவன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைப்பூ முகவரி:

www.iniyavan.com

நிறைய பெயர் அதே பெயரில் எழுதுவதால் நான் என் ஒரிஜினல் பெயருக்கு மாறிவிட்டேன்.

இன்னும் சிலரும் இதே பெயரில் எழுதுவதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்.//


இதுதான் காரணம் ஸாதிகா.நன்றி.
Unknown said…
யாழ். நிதர்சனன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வருக.
சிரிக்கவைக்கும் ந்கைச்சுவை. அருமை.

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...