Skip to main content

படித்ததில் பிடித்தவை( jokes)

படித்ததில் பிடித்தவைன்னாலே  copy and paste  தான் புரிஞ்சிருப்பீங்க இருந்தாலும் எனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு..................????


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
3) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7)
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8)
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9)
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

11) True GK Facts:
**
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12)
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13)
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

17)
தத்துவம் 2010
"
லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"
கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

நன்றி  நன்றி

Comments

//** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது//

இது உங்க வீட்டம்மாவுக்கு தெரியுமா....
//மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?//

இன்னைக்கு கண்டிப்பா சோத்து ஆப்பை அடி கிடைக்கும் வீட்டில்....
Unknown said…
MANO நாஞ்சில் மனோ:
என் மனைவிக்கு ப்ளாக்-ன என்னென்னே தெரியாது. ஆனா ஒரு சந்தேகப்பார்வை மட்டும் உண்டு.
எங்கள் எல்லாரையும் லூசுன்னு சொல்லி விட்டீர்கள்.அதுவும் சரிதான்.கிடைக்கிற நேரத்தை நல்ல காரியத்துக்குச் செலவிடாமல் இப்படிக் கணினியைக் கட்டிக்கொண்டு அழும் கூட்டத்தை வேறென்ன சொல்வது!
Unknown said…
சென்னை பித்தன் :
அப்படி சொல்லவில்லையே. உங்களுக்கு ஓய்வெடுக்கும் வயது நீங்கள் அப்படி இருக்கலாம் ஆனால் எங்களை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நாங்கள்தான் .........................
நாகர் கோவிலாரே! எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது?
என்ன ஆச்சு? போயி குளிர குளிர நுங்கும், நன்னாரி சர்பத்தும் போட்டு சாப்பிடுங்க.
Unknown said…
கக்கு - மாணிக்கம் :
நல்லாத்தானே போய்கிட்டே இருக்கு எல்லாம் வல்ல நன்னாரி நொங்கு சர்பத்தின் விளைவுகள் தான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
middleclassmadhavi :
என்னுடைய இ-மெயிலில் வந்தவை இவை.
Unknown said…
சென்னை பித்தன் :
அதன் அர்த்தம் அப்படி அல்ல. அப்படியும் கொள்ளலாம். உங்களுக்கு ஓய்வு காலம். நாங்கள் தான் உழைக்க வேண்டிய வயதில் இப்படி வெட்டியாக பொழுதை கழிக்கிறோம். எனவே எங்களுக்குதான் அது சரியாகப் பொருந்தும். நன்றி ஐயா.
@சென்னை பித்தன் said...
//எங்கள் எல்லாரையும் லூசுன்னு சொல்லி விட்டீர்கள்.அதுவும் சரிதான்.கிடைக்கிற நேரத்தை நல்ல காரியத்துக்குச் செலவிடாமல் இப்படிக் கணினியைக் கட்டிக்கொண்டு அழும் கூட்டத்தை வேறென்ன சொல்வது!//

repeatu...
நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )
Unknown said…
மாத்தி யோசி:
இன்னைக்கு மட்டும் மன்னித்துவிட்டேன்.வருகைகும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
ஆதி மனிதன்:
தலைவா லூசுன்னு எங்கேயுமே எழுதலையே. உங்க விருப்பத்திற்க்கே விட்டிருக்கிறோம். ஜீனியஸ் ஏன் நினைக்கக்கூடாது.
Anonymous said…
விகடங்கள் போற்றுவதர்கும் சங்கடங்களை ஆற்றுப்படுத்தி அபியந்த சர்சைகள் இல்லாதிருப்பதற்காகவே நம் மன்னர்கள் யாக்கைப் பொன் ஆட்சி செய்யதக்க விழைவேனில் பொழுதுகளில் விகடகவி என்றொர் விதுசாதுவர்களை வைத்திருந்தனர். இது பற்றி பெரும்வழுவாய் படிக்க எண்ணி மாசாத்துவான் அடிகள் பகர்ந்த பண்டைத்தமிழ் விதுசாதுவர்கள் நூலை நூல்பொருள் நுகர் பரப்பரங்கில் சென்ற திங்கள் வாங்கியுள்ளேன். தொட்டுரைப் போதினுள் அது பற்றி பதிவு இட உள்ளக் கிடக்கை கொண்டுள்ளேன்.

கவிராசநந்தனார்.
அனைத்து காமடி தணுக்குகளும் அருமை..
Unknown said…
பாட்டு ரசிகன் :
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
Anonymous :
வருகைக்கும், தூய தமிழில் கருதுரைத்ததற்க்கும் நன்றி.
சிரிக்கவும் வைக்குறீங்க அதே சமயம் சிந்தனையும் எங்கோ போகுது சார் இருங்க பிடிச்சுக்கிட்டு வர்றேன்... எல்லா துனுக்களையும் ரசித்தேன் சிரித்தேன் ....
தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...
Unknown said…
sakthistudycentre-கருன்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//என் மனைவிக்கு ப்ளாக்-ன என்னென்னே தெரியாது. ஆனா ஒரு சந்தேகப்பார்வை மட்டும் உண்டு//

இதோ இப்ப தெரிஞ்சுடுமுல்ல.
நாங்க கொளுத்திபோடமாட்டோமா என்ன.

என்ன ஒன்னு உங்க ஆளோட அட்ரஸமட்டும் கொடுங்க அப்புறம் பாருங்க நடப்பத..ஹா ஹா
>>>கே. ஆர்.விஜயன் said... 3

MANO நாஞ்சில் மனோ:
என் மனைவிக்கு ப்ளாக்-ன என்னென்னே தெரியாது. ஆனா ஒரு சந்தேகப்பார்வை மட்டும் உண்டு.



அவ்வளவு ரண களத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது?
Unknown said…
சி.பி.செந்தில்குமார் :
பெரிசா என்ன இருக்கப்போகுதுன்னு பார்த்தா(பதிவு) எல்லாம் பெருசாதான் கண்ண உறுத்திச்சி. உண்மைய சொன்னா தப்பாண்ணே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
அன்புடன் மலிக்கா:
அட்ரஸ் எழுதிக்குங்க
விஜயன்
விவேகானந்தர் குறுக்குத்தெரு,
துபாய்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரசித்து சிரித்த காமெடிகள்.
எங்கெயோ கேட்ட ஜோக்ஸ்!!
அனைத்து காமெடிகளும் அருமை.
Unknown said…
ஸாதிகா:
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Unknown said…
இராஜராஜேஸ்வரி :
வருகைகும் கருத்துக்கும் நன்றி மீண்டும் வருக.
Unknown said…
ஆயிஷா:
வருகைகும் கருத்துக்கும் நன்றி மீண்டும் வருக.

Popular posts from this blog

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

        முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.               நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.               முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம்.                     தன்னுடையவா

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை               இவர்களுக்கு வலிப

என் வடஇந்திய நண்பனுக்கு கல்யாணம்

       போ ன வாரம்  என் நண்பனின் திருமணம் கான்பூரில்(உத்திர பிரதேசம்) நடைப்பெற்றது.  நண்பனின்   அதீத அன்பின் காரணமாக அழைப்பை ஏற்று நானும் என் மனைவியும் புறப்பட்டோம்.                     அ திகாலை 5.50 க்கு அடைமழையில் ராப்திசாகர் என்ற இரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.  இரயில் பெட்டிகள் காந்தி தாத்தா காலத்தில் உள்ளது போல் ரொம்ப பழையதாக இருந்தது. சரி  பெட்டி ரொம்ப இருட்டாக இருந்ததால் மின்விளக்கை போடலாம் என்று பொத்தானை துழாவினேன் அங்கே பொத்தான் இருந்ததுக்கு அடையாளமாக ஒரு ஓட்டை மட்டும் இருந்தது, சரி என்று விதியை நொந்தபடி படுத்து உறங்கிவிட்டேன்.  உறக்கம் தெளிந்தபோது மணி 12.00.   கொஞ்சம்  காலைகடன்களை கழிக்கலாமே என்று  கழிவறைக்கு ள் சென்று தாளிட தாப்பாளை(கொண்டியை) தேடினேன் அதுவும் மிஸ்ஸிங்(வாழ்க பிகாரிகள்).                        நி திஷ் குமார் ஆட்சியில் பிகார் முன்னேறியிருப்பதாக சொன்னார்களே  முன்னேறிய பிறகும் இப்படி என்றால் இதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே தலை சுற்றியது.எல்லாம் முடிந்த பின்  toilet ஐ flush செய்ய லிவரை அழுத்தினேன் கொஞ்சம் இறுக்கமாக இருந