Skip to main content

விளையாடுவதையே மறந்துபோன இன்றைய மழலையர்கள்

          நேற்று ஒரு வயதான பெண்மணி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த கால குழந்தை வளர்ப்பு முறையை பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில் நானும் 5 குழந்தைகளை பெற்று வளர்த்தவள் தான் இன்று 5 பேருமே மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றய குழந்தைகள் விளையாட்டு என்ற ஒரு விஷயத்தை இழந்தே விட்டார்கள் என்றே செல்ல வேண்டும் என்றார்.

                   அந்த காலங்களில் பெண் குழந்தைகள் பட்டம் விடுதல், பல்லாங்குழி, பாண்டி மற்றும் இன்னும் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆண் குழந்தைகள் கோலி விளையாட்டு, பம்பரம் விளையாட்டு,கோகோ, கபடி,மரம் ஏறுதல் குளத்தில் நீந்துகள் மற்றும் எல்லா மொள்ளமாரித்தனங்களையும் செய்து ஒருவிதத்தில் பொது அறிவு மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த சாக்கில் நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டவும் கற்றிருப்பார்கள். கொஞ்சம் முட்டு தேயும் அவ்வளவுதான்.

                    இதில் குழந்தைகளின் தனித்திறன் வெளிப்பட்டு தானாகவே ஒரு குழு அமையும் அதில் சகலகலா வல்லவனான ஒருவன் தலைவனாக வருவான். இப்படி தனித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். நல்ல உடற்பயிற்ச்சியும் இருக்கும். கொஞ்சம் அக்கம்பக்கத்தில் இருந்து பஞ்சாயத்து வரும் என்றாலும் பொதுவாக நன்மையே அதிகம்விளையும். தனியாக சமுதாயத்தை நேர்கொள்ள பழகிவிடுகிறார்கள்.

                     ஆனால் இந்த கால குழந்தைகளின் வாழ்க்கை இயந்திரத்தனம் ஆகிவிட்டது. குறிப்பாக நகர்புரத்தில் இது நிறையவே காணப்படுகிறது. காலையில் ஆறுமணிக்கு எழுந்து குளித்து காலை உணவு உண்டு முடிக்கும் போதே பள்ளி பேருந்தின் அழைப்பு ஒலி கேட்கும். உடனே அரக்கபரக்க பாதி தின்றும் தின்னாமலும் ஒடி பள்ளிக்கு செல்வார்கள். மாலை வந்ததும் ஒரு மணிநேர உறக்கம் பிறகு வீட்டுப்பாடம் மற்றும் டியூசன். இரவு சாப்பாடு ...உறக்கம். மறுபடியும் காலை இதே ஓட்டம் தொடரும். பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் சனிக்கிழமை கூட வகுப்பு நடக்கிறது. ஞாயிறு அன்று செஸ் வகுப்பு , இசை வகுப்பு, நடன வகுப்பு,கராத்தே இப்படி எல்லாம் பெற்றோரின் விருப்பங்களே திணிக்கப்படுகிறது. அவர்களாக யோசித்து ஒரு காரியம் செய்ய முடிவதில்லை. வெறும் புத்தகப்புழுக்களாகவே மாறிவிடுகிறார்கள்.


                     அந்த கால குழந்தைகளை விட இவர்களுக்கு பாட அறிவு இருப்பதை மறுப்பதற்க்கில்லை என்றாலும் பொதுஅறிவிலும்,விளையாட்டிலும் உடற்பயிற்ச்சியிலும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிறிது நேரம் கிடைத்தால் தொலைகாட்சியின் முன் இருந்து நொறுக்குத்தீனிகளை பீப்பா போல் காட்சியளிக்கிறார்கள்.


                   உணவும்,கலாச்சாரமும் மாறிவிட்டதால் நோய்களுக்கு பஞ்சமில்லை.  நொறுக்கு தீனி அதிகம் தின்பதால் இன்றய குழந்தைகள் உணவு உட்கொள்வதில் மிகவும் மோசமாக இருக்கிறார்கள். அதற்கேற்றார்போல் உடல் நலமும் குன்றி புதிய புதிய நோய்களால் அவதியுறுகிறார்கள். இது இப்படியே போனால் எங்கு போய் முடியுமோ ??????

Comments

படித்ததும் ஏதோ ஓர் ஏக்கம் உண்டானது விஜி!!!காரணம் நாம் குழந்தைகளாக இருந்தபோது விளையாடிய விளையாட்டுக்கள்,இப்போ காணாமற்போச்சே???பாவம் தற்போதைய நவீன குழந்தைகள்!
ஆடிவந்த கோலிக் குண்டும்
பாடிவந்த சடுகுடுவும்..
ஒன்றைக்காலில் நொண்டியடித்த
பாண்டியாட்டமும்..
நெஞ்சில் நிறைந்து நிழலாய்
தொடர்கிறது.......
Sankar Gurusamy said…
உண்மைதான். இன்றைய சூழலில் நகர்ப்புறங்களில் விளையாட்டுக்கு இடப்பஞ்சமும் இருக்கிறது. குழந்தைகளை மார்க் வாங்கும் மிசின்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். வருத்தமாக இருக்கிறது.

http://anubhudhi.blogspot.in/
Kousalya Raj said…
என்ன விஜயன் இப்படி போஸ்ட் போட்டு பழைய நினைவை கிளறி விட்டுடீங்க...

:))

மிக அருமையான பகிர்வு...

உங்களின் ஆதங்கம் மட்டுமல்ல எல்லோரின் ஆதங்கம் தான்...ஆனால் எல்லாம் தெரிந்தும் புதிய சூழலுக்கு பழகி போய்விட்டோம்...குழந்தைகளையும் பழக்கி விட்டுடோம்னு தோணுது.

பெற்றோரை ரொம்ப யோசிக்க வைக்கும் ஒரு நல்ல பதிவு விஜயன். நன்றிகள்
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
Unknown said…
செல்விகாளிமுத்து : எல்லா பதிவிற்க்கும் முதலில் கருத்து சொல்லும் தோழிக்கு என் நன்றிகள். இன்னும் கிராமப்புறங்களில் இந்த விளையாட்டுக்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் நகர்புறங்களில் கண்டிப்பாக இல்லை.
Unknown said…
@ மகேந்திரன்: ஆமா ஐயா அந்த நாட்களை இன்று நினைத்தாலும் மனம் பூரிப்படையும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு அது இல்லாமல் போனதில் வருத்தம் தான். உங்களுடைய கருத்திற்க்கு நன்றி.
Unknown said…
Sankar Gurusamy : பெற்றோர்கள் எட்ட முடியாத குறிக்கோளை தன் பிள்ளைகள் மூலம் நிறைவேற்ற துடிக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் பால்யம் பலியாக்கப்படுகிறது. உங்களுடைய வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர் சார்.
Unknown said…
@Kousalya : முதலில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு என்னுடைய வலை தளத்திற்க்கு வருகை தந்ததற்க்கு என் மனமார்ந்த நன்றி. மற்றபடி இன்றைய இயந்திர உலகில் பணம் என்ற ஒரு குறிகோளோடு ஓடும்போது இது மாதிரி நிறைய விஷயங்களை நாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. நன்றி மேடம்.
Unknown said…
@ Rathnavel Natarajan :
உங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
rajamelaiyur said…
இப்போதுல்லாம் மைதானத்தில் விளையாடுவதை விட வீடியோ கேம் தன சிறுவர்களிடம் அதிகரித்துள்ளது
Unknown said…
@"என் ராஜபாட்டை"- ராஜா : சரியா சொன்னீங்க இந்த வீடியோ கேம் மேட்டரை நான் மறந்தே போயிட்டேன். பாதி சிறுவர்களும் சில பெரியவர்களும் கூட இதுக்கு அடிமைதான். உங்களுடைய கருத்துக்கு நன்றி ராஜா.
Anonymous said…
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Popular posts from this blog

துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)

Attention-Deficit Hyperactivity Disorder(ADHD) சில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அறிகுறிகள் * கீழ்படிதல் இல்லாதிருத்தல் * பேசும்போது குறுக்கிடுதல் * ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல் * அதிகம் பேசுதல் * மறதி * அதிக சத்தமாக விளையாடுதல் * கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல் * பொறுமையின்மை * கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல் *  தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை     ...

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு” . ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக் கொல்கிறேன்.                      பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.                     முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த ...

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்) நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)                பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அ...